search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "general category"

    • மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது.
    • மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பொதுப் பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது.இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி கூறியதாவது:- 2023- 2024 -ம் கல்வி ஆண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது.

    இதுவரை நடைபெற்ற கலை மற்றும் வணிகவியல் பிரிவில் மொத்தமாக 326 பேர் சேர்ந்து உள்ளனர்.தொடர்ந்து நேற்று இளநிலை அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.இதில் இயற்பியல் பாடப்பிரிவில் 3 மாணவர்களும்,வேதியியல் பாடப்பிரிவில் 27 மாணவர்களும், கணிதவியல் பாடப்பிரிவில் 7 மாணவர்களும், புள்ளியியல் பாடப்பிரிவில்2 மாணவர்களும், தாவரவியல் பாடப்பிரிவில் 7 மாணவர்களும், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 14 மாணவர்களும், கணினிஅறிவியல் பாடப்பிரிவில் 47 மாணவர்களும்,தமிழ் இலக்கியம், ஆங்கிலம் இலக்கியம் மற்றும் பிபிஏ பாடப்பிரிவில் தலா ஒருவரும் ஆக மொத்தம் 110 பேர் சேர்ந்து உள்ளனர்.இன்று அறிவியல் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.

    பிற்பகல் 2 மணியளவில் தமிழ்இலக்கியப் பாடப்பிரிவு மாணவர்களுக்கும் தொடர்ந்து ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவு மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்கள் 10,11,12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் , மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை , சாதிச்சான்றிதழ் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள் , பாஸ்போர்ட் சைஸ் 6 புகைப்படம் , இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல் , தரவரிசை நகல் , கல்லூரிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டு வரவேண்டும்.மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

    முற்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பில் கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #Cabinetapproves #10pcreservation #economicallybackward
    புதுடெல்லி:

    நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது.

    இதேபோல், முற்பட்ட வகுப்பினர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக, நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா ஒன்றை தாக்கல் செய்யவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக, அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அரசியலமைப்பு சாசன திருத்த மசோதாவாக இது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளையுடன் முடிவடையவுள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை இதற்காக மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கவும் மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Cabinetapproves #10pcreservation #economicallybackward #generalcategory
    ×