search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாத்தான்குளம்"

    • சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் பேரவை தொடக்க விழா நடைபெற்றது.
    • வல்லநாடு துளசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் சாந்தகுமாரி கலந்து கொண்டு மாணவிகள் பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. தமிழ்த்துறை தலைவர் பூங்கொடி வரவேற்றார். கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக வல்லநாடு துளசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் சாந்தகுமாரி கலந்து கொண்டு மாணவிகள் பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் சாத்தான்குளம் கல்விக்கழக தலைவர் சுப்பிரமணியம், துணைத்தலைவர் லெட்சுமி நாராயணன், செயலர் ஜெயபிரகாஷ், புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் பாலமேனன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளை வாழ்த்தினர். முடிவில் வணிக நிர்வாகவியல் பேராசிரியை சண்முகசுந்தரி நன்றி கூறினார்.

    விழா நிகழ்ச்சிகளை தமிழ்த்துறை பேராசிரியை சீதாலெட்சுமி தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியை நீமா தேவ் பொபீனா மற்றும் முனைவர் ஆனந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஆகாஷ் உள்ளிட்ட 3 பேரும், செந்தில்வேலிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினர்.
    • செந்தில்வேலை கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது22), கட்டிட தொழிலாளி.

    தொழிலாளி தாக்குதல்

    இவர் கடந்த 25-ந்தேதி சாத்தான்குளம் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றார். சாத்தான்குளம் அருகே ஆத்துபாலம் அருகில் சென்றபோது சாத்தான்குளம் ஆர்சி வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சந்துரு மற்றும் லிங்கம் மகன் அழகு, சடையன்கிணறு இசக்கிமுத்து மகன் ஆகாஷ்(22) ஆகிய 3 பேரும் செந்தில்வேலை வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள், செந்தில்வேலிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் பீர் பாட்டில் மற்றும் கைகளால் தாக்கியதுடன், அருகில் உள்ள கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். இவர்களில் ஆகாஷை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
    • முகாமிற்கு சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமை தாங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டத்தில் 721 மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசு சார்பில் உதவித்தொகை பெற்று வருகின்றனர். அதில் 103 பேருக்கு வீட்டுமனை பட்டா இல்லாததால் அவர்களை கண்டறிந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பெரியதாழை, படுக்கப்பத்து கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட மனுக்கள் பெறும் முகாம் பெரியதாழையில் நடைபெற்றது. சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற்றார். வட்ட துணை ஆய்வாளர் மகராசி முன்னிலை வகித்தார். முகாமில் பெறப்பட்டமனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    முகாமில் வருவாய் ஆய்வாளர் வெயிலுகந்தமாள், பள்ளக்குறிச்சி சார் ஆய்வாளர் தேவிதா, கிராம நிர்வாக அலுவலர் கந்தவள்ளிக்குமார், வருவாய் உதவியாளர் மாரியம்மாள், பெரியதாழை ஊராட்சித் தலைவர் பிரதீபா, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பேர்சில், சங்க நிர்வாகி ஐசக் ஜோசப், பெரியதாழை மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் பிரான்சிஸ், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், மீனவ கூட்டுறவு சங்கத் தலைவர் சந்தியா,மாவட்ட மீனவரணி செயலர் ரமேஷ், சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் லூர்துமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • விழாவுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜமுனா ராணி தலைமை தாங்கினார்.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் மன்ற விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ஜமுனா ராணி தலைமை தாங்கினார். கணிதத்துறை பேராசிரியர் புஷ்பராணி வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி பேராசிரியை ஆனந்த லெட்சுமி கலந்து கொண்டு கணிதத்தின் மூலம் உலகைப் புரிந்து கொள்வது என்ற தலைப்பில் உரை யாற்றினார். விழாவில் கணித மாதிரிகள் கண்காட்சி நடைபெற்றது.

    கணித மன்ற விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கணிதவியல் துறை மூன்றாமாண்டு மாணவி முத்து சரஸ்வதி நன்றி கூறினார். விழா ஏற்பாடு களை கணிதத் துறை பேராசிரியர்கள் கீதா, தேன்மொழி, பிரேசில், பொன் செல்வகுமாரி, ஸ்டெபி ராஜ வின்செலஸ், ஜாபியா டினோ மெர்ஸி ஆகியோர் செய்திருந்தனர்.

    • வருகிற 21-ந்தேதி சாத்தான்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மெஞ்ஞானபுரம் பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    உடன்குடி:

    திருச்செந்தூர் மின்சார விநியோக பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) சாத்தான்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராயபுரம், தருமபுரி, போலயார்புரம், பொத்தகாலன்விளை, சிறப்பூர், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டு கொண்டான்மாணிக்கம், நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை, மெஞ்ஞானபுரம் பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இதேபோல அனைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமி புரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை, நடுவக்குறிச்சி, தட்டார்மடம், கொம்மடிக்கோட்டை, புத்தன்தருவை, மணிநகர், படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம், பழனியப்பபுரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி,

    கட்டாரிமங்களம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசீர்வாதபுரம், கருங்கடல், கோமனேரி மற்றும் உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளில் காலை 8மணி முதல் மாலை 5 வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாத்தான்குளம் நீதிமன்றங்களில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • நீதிபதிகள் கோபால் அரசி,கலையரசி ரீனா ஆகியோர் உறுதிமொழி வாசித்தனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் குற்றவியல் நீதிமன்றம் ஆகிய 2 நீதிமன்றங்களிலும் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபால் அரசி குற்றவியல் நீதிபதி கலையரசி ரீனா ஆகியோர் தலைமை தாங்கி உறுதிமொழி வாசித்தனர்.

    இதில் வக்கீல்கள் ஜோ ஜெகதீஷ், அமல்ராஜ், பஞ்சாப் சேகர், வேணுகோபால், ராமச்சந்திரன், கோபால், ஷீபா ஐரின், பிருந்தா, ராஜேஸ்வரி, செல்வமீனா, கவுசல்யா, குமரகுருபரன், ராஜன், சுபாஷ், சஷ்டி குமரன், செல்வ மகாராஜா, முத்துராஜ், ஈஸ்டர், கமல், குமரேசன், சுரேஷ், மைக்கேல் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் சத்தியபாமா, சுந்தரி, முத்துலட்சுமி, பாண்டியம்மா, அனிதா முத்துலட்சுமி, விஜய், வட்ட சட்ட பணிக்குழு மகேந்திரன், ஆறுமுகம், ஜெயராஜ், ஜேலட், சந்தனராஜ், கசமுத்து, ரஸ்டில்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • தட்டார் மடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் டிராக்டர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார் மடத்தில் போலீசார் சார்பில் மாற்றத்தைத் தேடி மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் குருசுமிக்கேல், சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச் சங்க செயலர் லூர்து மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாலை பாதுகாப்பு குறித்து டிராக்டர் ஓட்டுநர் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இன்ஸ்பெக்டர் பவுலோஸ் எடுத்துரைத்தார். தொடர்ந்து டிராக்டர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டது. இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனம் வைத்திருப்பவர்களுக்கு வாகன இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம், வண்டி உரிமம் ஆவணங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது எனவும், விபத்து தவிர்க்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் ஓட்டுனர்கள் கோபால், சேர்மதுரை, கிதியோன், சுதாகர், டைட்டஸ், ஜஸ்டின், இன்பம், பரத்,பீட்டர், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மனுநீதி நாள் முகாமிற்கு பஞ்சாயத்து தலைவர் கழுங்கடி தலைமை தாங்கினார்.
    • முகாமில் இலவச வீட்டு மனை பட்டா உள்பட நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் கோமானேரி பஞ்சாயத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் கழுங்கடி தலைமை தாங்கினார். யூனியன் கவுன்சிலர் பிரனிலா கார்மல் முன்னிலை வகித்தார். ஆர்.டி.ஓ. புகாரி வரவேற்று பேசினார். முகாமில் மாவட்ட கூடுதல் துணை கலெக்டர் ஞானதேவ் சுபம் தாக்கரே கலந்து கொண்டு 163 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    இதில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வரைவுபட்டா உள்பட நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஸ்டெல்லா மேரி கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட வழங்கல் அலுவலர் இப்ராஹிம், தனி தாசில்தார் லெனின், மண்டல துணை தாசில்தார் மைக்கில், தலைமையிடத்து துணை தாசில்தார் கோமதி சங்கர், வட்ட வழங்கல் அலுவலர் அகிலா, தேர்தல் துணை தாசில்தார் தங்க சாமி மற்றும் ஊராட்சி ஒன்றிய கமிஷனர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் குமார், சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ், பஞ்சாயத்து துணை தலைவர் ஐகோர்ட் துரை மற்றும் அரசு துறை அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளும் உளுந்து பயிர் வகைகளும், தார்பாய்களும் வழங்கப்பட்டன. முடிவில் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா நன்றி கூறினார்.

    • கொடை விழாவில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
    • திருவிளக்கு பூஜையில் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி சாலைக்கரை இசக்கியம்மன் கோவில் கொடை விழா 2நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் இரவு மாக்காப்பு பூஜை, அலங்கார பூஜை, வில்லிசை. 2-ம் நாள் காலை அபிஷேக ஆராதனை, கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. மாலை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி அம்பாளை வழிப்பட்டனர். பூஜையினை திசையன்விளை அம்பிகை தாசன் ஆர். ஜி. பாலன் வழி நடத்தினார். தொடர்ந்து விஷேச புஷ்பாஞ்சலி, தீபாராகனை நடைபெற்றது. பின்னர் கனியான் கூத்து, வில்லிசை நடைபெற்றது. இரவு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 

    • இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் ஆண்டு விழா நடைபெற்றது.
    • விழாவில் மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் 7 மற்றும் 10-வது வார்டுகளை சேர்ந்த இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் ஆண்டு விழா வட்டார ஒருங்கிணைப்பாளர் சப்திகா டொமிலா தலைமையில் நடைபெற்றது.நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை அன்பாய் செல்வம் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக அறிவொளி இயக்க முன்னாள் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மகா பால்துரை, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், வக்கீல் வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவில் இல்லம் தேடி கல்வி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் தனித் திறன்களில் மேன்மை பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .

    விழாவில் சாத்தான் குளம் தூய இருதய மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நேசமலர், பூங்கொடி, ஆண்ட்ரூஸ், இப்ராஹிம் நடுநிலைப்பள்ளி ஆசிரியை கீதா, ஸ்டீபன்ஸ் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வேதராணி மற்றும் தலைமை ஆசிரியர் சாந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மைய தன்னார்வலர் கிருபைமேரி கிருஸ்டிபாய் வரவேற்றார். முடிவில் ராகப் பிரியா நன்றி கூறினார்.

    • நெல்லை போக்குவரத்து கழக பொது மேலாளரை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார்.
    • நெல்லையில் இருந்து சிந்தாமணி,பழனியப்பபுரம் வழியாக சாத்தான்குளத்திற்கு பஸ் சேவை வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கோமானேரி, கலுங்குவிளை, நெடுங்குளம், கொம்பன்குளம், வழியாக சாத்தான்குளத்துக்கு அரசு பஸ் சேவை இல்லாமல் உள்ளது. பேய்க்குளத்தில் இருந்தும், கோமானேரி, கலுங்குவிளை, நெடுங்குளம், துவர்குளம், கொம்பன்குளம், மேட்டுக்குடியிருப்பு வழியாக சென்ற அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டதால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இதையடுத்து சாலைபாதுகாப்பு நுகர்வோர்குழு உறுப்பினர் போனிபாஸ், ஒன்றிய கவுன்சிலர் ப்ரெனிலா கார்மல் ஆகியோர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். அவர்களது கோரிக்கையை ஏற்று நெல்லை போக்குவரத்து கழக பொது மேலாளரை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார். அதில், சாத்தான்குளத்தில் இருந்து கலுங்குவிளை, நெடுங்குளம், முனைஞ்சிப்பட்டி வழியாக நெல்லைக்கு இயக்கப்பட அரசு பஸ் தடம் 65 இ, தடம் எண் 165 எச் இரவு நெல்லையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, கலுங்குவிளை வழியாக சாத்தான்குளத்துக்கு இயக்கப்பட வேண்டும் எனவும், அதேப்போல் தடம் எண் 137ஏ, 137கே ஆகிய பஸ்களை காலை, மாலை, நெல்லையில் இருந்து சிந்தாமணி, பேய்க்குளம், பழனியப்பபுரம் வழியாக சாத்தான்குளம், உடன்குடிக்கும், விராக்குளம், பிரண்டார்குளம், மடத்துவிளை, கலுங்குவிளை, வழியாக சாத்தான்குளத்துக்கும் இயக்கப்பட்டு வந்தது, தற்போது இயக்கப்படாததால் மீண்டும் கலுங்குவிளை, நெடுங்குளம் வழியாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.

    • சாத்தான்குளம் செயிண்ட் ஜான்ஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை நடத்தினர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் செயிண்ட் ஜான்ஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் தி ஐ பவுன்டேஷன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது.

    பள்ளி முதல்வர் சார்லஸ் ஞானக்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் தி ஐ பவுன்டேஷன் மருத்துவ குழுவினர் பங்கேற்று பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை நடத்தினர். இதில் 100-க்கு மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்னர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×