search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளத்தில் தபால் நிலைய அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு;  பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    தபால்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்ட காட்சி.

    சாத்தான்குளத்தில் தபால் நிலைய அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு; பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • தபால் நிலையத்தை சாத்தான்குளம் நகரில் உள்ள தெரு பகுதிக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
    • சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வாசகசாலை பஜாரில் தலைமை தபால் நிலைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அருகில் மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள் உள்ளன. மேலும் அருகிலுள்ள வாசக சாலை பஜாரில் அனைத்து பஸ்களும் வந்து நின்று செல்கின்றன.

    இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மாணவ, மாணவிகளும் தபால் நிலையம் சென்று ஊருக்கு திரும்புவதற்கு போக்குவரத்து வசதியாக இருந்தது. இந்நிலையில் இந்த தபால் நிலையத்தை சாத்தான்குளம் நகரில் உள்ள தெரு பகுதிக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இதை அறிந்த வர்த்தக சங்கத்தினர், பொது மக்கள், வியாபாரிகள் சாத்தான்குளம் தபால் நிலைய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்த சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முத்து ராமலிங்கம் உள்ளிட்ட வருவாய்த்துறை அதி காரிகள் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இந்த பேச்சு வார்த்தை யின் மூலம் தபால் நிலையம் இடம் மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது உள்ள கட்டிடத்திலே சீரமைப்பு செய்து வழக்கம்போல் தபால் நிலைய அலுவலக பணிகளை செய்வதற்கு தபால் துறை அதிகாரிகளும் வருவாய்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக சங்கத்தினரும், ஊர் பொதுமக்களும், தபால் நிலைய அதிகாரி அழகையா,அஞ்சலக ஆய்வாளர் செந்தில் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    Next Story
    ×