சாத்தான்குளம் அருகே பஞ்சாயத்து துணை தலைவருக்கு அரிவாள் வெட்டு

கிறிஸ்டோபர் ஜெயராஜ் கட்டாரிமங்கலம் ஊராட்சி துணைத்தலைவராக உள்ளார். சாலமோன் அரிவாளால் தனது தம்பி கிறிஸ்டோபரை வெட்டி உள்ளார்.
சாத்தான்குளம் அருகே பஞ்சாயத்து துணை தலைவருக்கு அரிவாள் வெட்டு
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஜெயராஜ் (வயது58). இவர் கட்டாரிமங்கலம் ஊராட்சி துணைத்தலைவராக உள்ளார். இவருக்கும் அவரது அண்ணன் சாலமோனுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.

அரிவாள் வெட்டு

இந்நிலையில் நேற்று பஸ் நிறுத்தம் அருகே கிறிஸ்டோபர் நின்று கொண்டிருந்தார். அப்போதுஅங்கு வந்த சாலமோன் அவரை வழிமறித்து அவதூறாக பேசியுள்ளார்.

இதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சாலமோன் தான் வைத்திருந்த அரிவாளால் தனது தம்பி கிறிஸ்டோபரை வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை நெல்லை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சாத்தான்குளம் டி.எஸ்.பி. அருள், இன்ஸ்பெக்டர் முத்து உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி சாலமோனை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com