search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் வட்டார விவசாயிகளுக்கு  நீரா பானம் மதிப்பு கூட்டுதல் பயிற்சி
    X

    விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி.

    சாத்தான்குளம் வட்டார விவசாயிகளுக்கு நீரா பானம் மதிப்பு கூட்டுதல் பயிற்சி

    • திட்ட ஒருங்கிணைப்பாளர் சிற்பி பால சுப்பிரமணியம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
    • தோட்டக்கலை இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் கிருஷ்ணமூர்த்தி முருங்கை சாகுபடியில் முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் நீரா பானம் மதிப்பு கூட்டுதல் சம்பந்தமான விவசாயிகள் பயிற்சி வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவனம், பொள் ளாச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் சுதாமதி உத்தரவின்படி நடைபெற்றது.

    அங்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிற்பி பால சுப்பிரமணியம், தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் தயார் செய்யும் முறைகள், நீரா பானத்தின் பயன்கள் மற்றும் நீரா பானத்தில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் முறைகள் குறித்து விரிவாக விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

    மேலும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் மூலம் நீரா பானம் தயார் செய்வது குறித்து விளக்கம் அளித்தார். தோட்டக்கலை இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தென்னை மற்றும் முருங்கை சாகுபடியில் முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

    விநாயகா தென்னை உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்டின் பண்ணை மேலாளர் முருகேசன் தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் தயார் செய்வது குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக பண்ணை செயல் முறை விளக்கம் அளித்தார்.

    இந்த பயிற்சியில் சாத்தான்குளம் சுற்று பகுதியைசார்ந்த சுமார் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடு களை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெபக்குமார் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள்முருகன் மற்றும் ஜேக்கப் ஆகியோர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×