search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் அரசு மருத்துவமனை விரிவாக்கத்திற்கு வருவாய்த்துறை இடம் வழங்க வேண்டும்- அமைச்சரிடம், ஊர்வசி  அமிர்தராஜ் எம்.எல்.ஏ மனு
    X

    ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனை சந்தித்து மனு அளித்த காட்சி.

    சாத்தான்குளம் அரசு மருத்துவமனை விரிவாக்கத்திற்கு வருவாய்த்துறை இடம் வழங்க வேண்டும்- அமைச்சரிடம், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ மனு

    • வருவாய்‌துறைக்கு சொந்தமான நிலத்தினை மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
    • பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக பிரிக்க வேண்டும் என எம்.எல்.ஏ. அந்த மனுவில் கூறியுள்ளார்.

    சாத்தான்குளம்:

    வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் வட்ட தலைமை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நலன் மற்றும் சாத்தான்குளம் சுற்றுவட்டார மக்கள் பயன்பாட்டிற்காக, ரத்த சுத்திகரிப்பு பிரிவு, விபத்து மற்றும்அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் வார்டு ஆகியவை விரிவாக்க பணிகளுக்காக சாத்தான் குளம் மருத்துவமனையின் பின்புறம் உள்ள வருவாய் துறைக்கு சொந்த மான நிலத்தினை மருத்துவ மனைக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்க வேண்டும்.

    மேலும் சாத்தான்குளம் வட்டத்துக்குக்கு உட்பட்ட பெரியதாழை ஊராட்சி தற்போது படுக்கப்பத்து வருவாய் கிராமத்தில் உள்ளது. பெரியதாழையை புதிய வருவாய் கிராமமாக ஏற்படுத்த அரசு நிர்ணயம் செய்துள்ளபடி மக்கள் தொகை (ஆண்கள் -4848 பெண்கள்- 3773 மொத்தம் - 8621) உள்ளது.

    மேலும் பட்டாதாரர் எண்ணிக்கை 575 ஆக உள்ளது. மேலும் இப்பகுதியில் வாழும் மக்கள் படுக்கப்பத்து தலைமை இடத்திற்கு செல்வதற்கு 3 கிலோமீட்டர் தூரம் பஸ் வசதி இல்லாமல் சிரமப்பட்டு செல்கின்றனர்.

    மேலும் பெரியதாழை கிராமத்தில் மீனவ சமுதாய மக்கள் அதிகமாக வசிப்பதால் இயற்கை இடர்பாடுகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே படுக்கப்பத்து வருவாய் கிராமத்தில் இருந்து பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக பிரித்து அரசாணை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், அதனை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். அப்போது மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், சாத்தான்குளம் ஒன்றிய கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×