search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் அருகே ஏழை கல்லூரி மாணவி கல்விக்கு எம்.எல்.ஏ.  உதவி
    X

    சாத்தான்குளம் அருகே ஏழை கல்லூரி மாணவி கல்விக்கு எம்.எல்.ஏ. உதவி

    • ஆரோக்கியமேரி என்ற மாணவி நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
    • மாணவி ஆரோக்கியமேரி கல்வி பயில ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ரூ.6ஆயிரம் வழங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பூச்சிகாட்டை சேர்ந்த ஆரோக்கியமேரி என்ற மாணவி நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார். இவரது தந்தை உயிரிழந்து விட்ட தால் மாணவியின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அரசூர் பகுதிக்கு வந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் தன்னுடைய படிப்பை தொடர்ந்திட உதவிட வேண்டும் மாணவி ஆரோக்கிய மேரி மனு அளித்து வலியுறுத்தினார்.

    அதன்படி ஆரோக்கிய மேரி கல்வி பயில ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ரூ.6ஆயிரம் வழங்கினார். எம்.எல்.ஏ., வழங்கிய உதவித்தொகையை அவர் சார்பாக சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி , பூச்சிக்காடு கிராம கமிட்டி தலைவர் பீட்டர் ஆகியோர் மாணவி குடும்பத்திடம் வழங்கினர். அப்போது சாத்தான் குளம் வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் அன்னகணேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×