சாத்தான்குளம் அரசு கல்லூரியில் கணிதவியல் மன்ற விழா

விழாவுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜமுனா ராணி தலைமை தாங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கணிதவியல் மன்ற விழா நடைபெற்றபோது எடுத்த படம்.
கணிதவியல் மன்ற விழா நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் மன்ற விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ஜமுனா ராணி தலைமை தாங்கினார். கணிதத்துறை பேராசிரியர் புஷ்பராணி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி பேராசிரியை ஆனந்த லெட்சுமி கலந்து கொண்டு கணிதத்தின் மூலம் உலகைப் புரிந்து கொள்வது என்ற தலைப்பில் உரை யாற்றினார். விழாவில் கணித மாதிரிகள் கண்காட்சி நடைபெற்றது.

கணித மன்ற விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கணிதவியல் துறை மூன்றாமாண்டு மாணவி முத்து சரஸ்வதி நன்றி கூறினார். விழா ஏற்பாடு களை கணிதத் துறை பேராசிரியர்கள் கீதா, தேன்மொழி, பிரேசில், பொன் செல்வகுமாரி, ஸ்டெபி ராஜ வின்செலஸ், ஜாபியா டினோ மெர்ஸி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com