

உடுமலை :
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை, தமிழ், ஆங்கில இலக்கியம் உட்பட இளநிலையில் மட்டுமே 22 பாடப்பிரிவுகளுக்கு 864 இடங்கள் உள்ளன.சேர்க்கைக்கான பதிவுகளை www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். சேர்க்கைக்கான பதிவுக்கு மே 19 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் வருகிற 26ம் தேதி வெளியிடப்படுகிறது. தொடர்ந்து 29-ந் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், 30-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை பிற மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.