search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை எதிர்ப்பு விழிப்புணர்வு"

    • போதை பொருட்களால் வாழ்க்கை முழுதும் பாதிக்கப்படும்.
    • பொது ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையமுடியும்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு கலைக் கல்லூரி நிர்வாகம், ரோட்டரி பல்லடம் ரெயின்போ சங்கம், ஆகியவை இணைந்து நடத்திய போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி விழா அரங்கில் நடைபெற்றது. பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் தங்கலட்சுமி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கமலம் வரவேற்றார்.

    கருத்தரங்கில், பல்லடம் எஸ்.வி.கிளினிக் தலைமை டாக்டர் பாலமுரளி கலந்துகொண்டு பேசுகையில்,போதை பொருட்களால் உடல் நலம், மனநலம் கெடுவதுடன், சமூக மரியாதையும் குறையும், வாழ்க்கை முழுதும் பாதிக்கப்படும்.பொது ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையமுடியும்.மாணவர்களின் லட்சியம் கல்வியில் மட்டும் இருந்தால் சிறந்த பதவிகளுக்கு வர முடியும். எனவே போதை பொருட்களை தவிர்த்து விடுங்கள்,மேலும் உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், போதை பழக்கத்தில் இருந்தால், அவரை திருத்த நீங்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், போதை பொருட்கள் பயன்பாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்' என ரோட்டரி சங்க நிர்வாகிகள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.

    ×