காங்கயம் அரசு கல்லூரியில் 3-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி நடக்கிறது

211 இடங்கள் முதல் இரண்டு கலந்தாய்வில் நிரப்பப்பட்டுவிட்டன. 3-ம் கட்ட கலந்தாய்வில் விண்ணப்பிக்காத அனைவரும் பங்கேற்கலாம்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

காங்கயம் :

காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 22ந் தேதி நடக்கிறது. கல்லூரியில் உள்ள 340 இடங்களில் 211 இடங்கள் முதல் இரண்டு கலந்தாய்வில் நிரப்பப்பட்டுவிட்டன.

3-ம் கட்டமாக வரும் 22-ந் தேதி நடக்கும் கலந்தாய்வில் இனசுழற்சி அடிப்படையில் மட்டுமே 'சீட்' நிரப்பப்படுகிறது. தொடர்ந்து, 26ந் தேதி நடக்கும் 3-ம் கட்ட கலந்தாய்வில், விண்ணப்பம் உள்ள மற்றும் விண்ணப்பிக்காத அனைவரும் பங்கேற்கலாம். காலி இடங்களை பொறுத்தும் மதிப்பெண் அடிப்படையிலும் அனைவருக்கும் சேர்க்கை வழங்கப்படும். திருப்பூர் மற்றும் பிற மாவட்ட மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என முதல்வர் நசீம் ஜான் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com