என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாரதியார் பல்கலைக்கழக தேர்வில் உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை
- புள்ளியியல் துறையில் மாணவி தமிழரசி ஆகியோர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
- துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் உட்பட அனைவரும் வாழ்த்தினர்.
உடுமலை :
பாரதியார் பல்கலைக்கழகத்தின் 2021-22ம் கல்வியாண்டின் தேர்வு முடிவுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 11 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அதன்படி இளநிலை பட்ட வகுப்புகளில் புள்ளியில் துறை மாணவி சசிரேகா முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதேபோல மாணவன் பிரவீன் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.
இதுதவிர மின் வணிகவியல் துறையில் பரமேஸ்வரி மூன்றாமிடம், நித்யா ஐந்தாமிடம், பொருளியல் துறையில் செல்வாம்பிகை 7-ம் இடம், சந்தியா 9-ம் இடம் பிடித்துள்ளனர்.தாவரவியல் துறையில் மாணவர் ஹக்கீம் 6-ம் இடம், மாணவி சத்யா 8-ம் இடம் பிடித்துள்ளனர்.
முதுநிலை பட்ட வகுப்புகளில் சுற்றுலாவியல் துறையில் மாணவி ஹெப்சிபா, புள்ளியியல் துறையில் மாணவி தமிழரசி ஆகியோர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். வேதியியல் துறையில் மாணவன் முகம்மதுமுஸ்தாக் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
இவர்களை கல்லூரி முதல்வர் கல்யாணி, துறைத்தலைவர்கள் சிவகுமார், மலர்வண்ணன், கோகிலா, பூங்கோதை, உருமாண்டராஜ இளங்கோ, விஜய்ஆனந்த், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் வாழ்த்தினர்.