search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரி"

    • காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
    • குளிர்சாதன பெட்டியில் சமைத்து வைக்கப்பட்ட சிக்கன் இருப்பது தெரிய வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் அவினாசி ரோடு புஷ்பா சந்திப்பு அருகே செயல்படும் ஒரு பேக்கரியுடன் கூடிய உணவகத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதன் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, குளிர்பானங்கள், தின்பண்டங்கள் உள்பட அனைத்து உணவு பொருட்களையும் சோதனை செய்தனர். குளிர்சாதன பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? சமைத்த அசைவ உணவு குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கப்படுகிறதா? காலாவதி உணவுப் பொருட்கள் கொண்டு சமைக்கப்படுகிறதா? என்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் குளிர்சாதன பெட்டியில் சமைத்து வைக்கப்பட்ட சிக்கன் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த கெட்டுப்போன 2 கிலோ சிக்கனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாபபுத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறும்போது, இதுபோன்ற தொடர் ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் என்றும், விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதுதொடர்பான புகார்களை பொதுமக்கள் 94440-42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • 25 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    • பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக எச்சரிக்கை நோட்டீசும் கொடுக்க நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டிய ராஜன் தலைமையில் உதவி மேலாளர்நாகராஜன், உதவிசுற்றுச் சூழல் பொறி யாளர் கலைவாணி, உதவி பொறியாளர் ஜெனிஷா, கன்னியாகுமரி சிறப்பு நிலைபேரூராட்சி சுகாதார அதிகாரிமுருகன் சுகாதார மேற்பார்வையா ளர் பிரதீஷ் மற்றும் அதிகாரிகள் கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னார்கள்.

    கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரைபகுதி, சன்னதி தெரு, ரத வீதிகள், மெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, கடற்கரை சாலை உள்பட பல்வேறு இடங்களில் 150-க்கும் மேற்பட்ட ஓட்டல் மற்றும் கடைகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி யது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்தகடைகளில்இருந்து மொத்தம் 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும ஒரு சில கடைகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக எச்சரிக்கை நோட்டீசும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • செல்போனை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்
    • கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை மேற் கொண்டனர். கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு டையவர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தூத்துக் குடியில் உள்ள காஜா முகைதீன் வீட்டிற்கு டெல்லி யில் இருந்து வந்த என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் கணேஷ் பாபு தலைமையிலான குழுவினர் சென்றனர். அப்போது காஜா முகைதீன் கடந்த சில ஆண்டுகளாக நாகர்கோவிலில் வசித்து வருவது தெரிய வந்தது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் கணேஷ் பாபு தலைமையில் 3 பேர் இன்று காலை நாகர்கோ விலுக்கு வந்தனர். அவர் கள் நாகர்கோவில் இசங்கன் விளையில் உள்ள காஜா முகைதீன் வீட்டிற்கு சென்ற னர். வீட்டில் இருந்த காஜா முகைதீனிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய விசாரணை பகல் 12 மணி வரை நடந்தது. சுமார் 3 மணி நேரம் காஜா முகைதீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    இதை தொடர்ந்து அவரது செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு சென்றனர்.

    • குடிநீர் திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு
    • நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டராக பி.என். ஸ்ரீதர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர்அலுவலகத்தில் அனைத்து துறை அதி காரிகளுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற் கொண்டார். கூட்டத்தில் கலெக்டர் பொறுப்புகளை ஒப் படைத்த அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், சப்-கலெக்டர் கவுஷிக், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி மாநகர நல அதிகாரி ராம்குமார், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், உதவி கலெக்டர் குணால் யாதவ், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்டத்தில் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கேட்டறிந்தார். குடிநீர் திட்ட பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்ப டுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.
    • அதன்படி சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பா ளராக காந்திமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சேலம்:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின்

    27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை

    உறுதி சட்டத்தை செயல்ப டுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பா ளராக காந்திமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் slmombuds@gmail.com மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், அவரை அறை

    எண்.211, 2-ம் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சேலம்-636001 என்ற முகவரியில் நேரிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

    • ஒரு சில அரசுப் பேருந்துகள் மகளிா் நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதாகவும், சற்று தொலைவு தள்ளி நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • ஓட்டுநா் சற்று தொலைவு தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்தியதுடன், அவா்களை ஓடிவந்து ஏறும்படி அலட்சியமாகத் தெரிவித்துள்ளாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும், ஒரு சில அரசுப் பேருந்துகள் மகளிா் நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதாகவும், சற்று தொலைவு தள்ளி நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இத்தகைய நிலையில், திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து குன்னத்தூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்தப் பேருந்தில் ஏறுவதற்காக பழைய பேருந்து நிலையத்தில் மகளிா் சிலா் காத்திருந்தனா். இதனிடையே பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பியபோது மகளிா் சிலா் பேருந்தை நிறுத்தியுள்ளனா். ஆனால், ஓட்டுநா் சற்று தொலைவு தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்தியதுடன், அவா்களை ஓடிவந்து ஏறும்படி அலட்சியமாகத் தெரிவித்துள்ளாா்.

    ஆகவே அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும், அலைக்கழிக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண் பயணிகள் தெரிவித்துள்ளனா்.

    இது குறித்து அரசுப் போக்குவரத்துகழக திருப்பூா் 2 கிளை மேலாளா் வடிவேலிடம் கேட்டபோது, அரசுப் பேருந்துகளில் மகளிரை அலைக்கழிக்கக்கூடாது என்று ஏற்கெனவே ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆகவே பாதிக்கப்பட்ட மகளிா் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    • சேலம் ரோட்டில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடை பகுதியில் உள்ள மருந்து கடையில் டிப்டாப் உடை அணிந்த நபர் ஒருவர் வந்தார். அவர் தான் மருத்துவ அதிகாரி என்று கூறினார்.
    • சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பதும், குடிபோதையில் சுகாதாரத்துறை மருத்துவ ஆய்வாளர் என்று கூறி பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் ஏராளமான மெடிக்கல் மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதிகள் உள்ளனர். இவர்களை குறி வைத்து ஒரு கும்பல் மிரட்டி பணம் பறிப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று சேலம் ரோட்டில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடை பகுதியில் உள்ள மருந்து கடையில் டிப்டாப் உடை அணிந்த நபர் ஒருவர் வந்தார். அவர் தான் மருத்துவ அதிகாரி என்று கூறினார். தொடர்ந்து அங்கு இருந்த கடை உரிமையா–ளரிடம் மருந்து கடைக்கு உரிய அனுமதி பெறப்–பட்டுள்ளதா, காலாவதியான மருந்துகள் விற்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

    இதனால் கடை ஊழியருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சந்தேகம் அடைந்த அந்த கடை ஊழியர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரைப் பிடித்து வைத்துக்கொண்டு நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பதும், குடிபோதையில் சுகாதாரத்துறை மருத்துவ ஆய்வாளர் என்று கூறி பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

    • பயன்படுத்தாத செட்டாப் பாக்ஸ்களை ஜூலை மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது.
    • மொத்தம் 532 ஆபரேட்டர்கள் நிறுவனத்துக்கு, கட்டண பாக்கியும் வைத்துள்ளனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி., நிறுவனம், கடந்த ஜூன் மாதம் கணக்கிட்டு பயன்படுத்தாத செட்டாப் பாக்ஸ்களை ஜூலை மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது. பிறகு செப்டம்பர் மாதம் இறுதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

    இது குறித்து அரசு கேபிள் டி.வி., நிறுவன தனி தாசில்தார் ரவீந்திரன் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் அரசு செட்டாப் பாக்ஸ்களை, ஆபரேட்டர்கள் பயன்படுத்தாமல் வைத்துள்ளனர். மொத்தம் 532 ஆபரேட்டர்கள் நிறுவனத்துக்கு, கட்டண பாக்கியும் வைத்துள்ளனர். இவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு முதல்கட்டமாக போலீசில் புகார் அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, வீரபாண்டி, அனுப்பர்பாளையம், பூண்டி போலீஸ் நிலையங்கள், அவிநாசி, சேவூர், ஊத்துக்குளி, பல்லடம், உடுமலை, அமராவதி, மூலனூர் நிலையங்களில் 14 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 56 லட்சம் ரூபாய் அளவுக்கு பாக்கி வைத்துள்ளனர். ஒரு செட்டாப் பாக்ஸ் மதிப்பு 1,726 ரூபாய் என கணக்கிட்டு அதற்கான தொகையை செலுத்தக்கோரி போலீசில் புகார் அளித்து வருகிறோம். மொத்தம் 20 வகை பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு பட்டியல் வரிசைப்படி புகார் அளிக்கிறோம் என்றார். 

    • குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின், 2021-2023 -ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு மயிலாடுதுறை மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனையொட்டி மேற்குறிப்பிட்ட மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகளின் குறைகள் குறித்து மனுக்களை (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர், மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை-600009 என்ற முகவரிக்கு அக்டோபர் 7-ம் தேதிக்குள் அனுப்பலாம்.

    மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும்.

    பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்சினைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம்.

    மனுக்கள் ஒரேயொரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருந்தல் வேண்டும்.

    மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    ஆனால் மனுவில் உள்ள பொருள் கீழ்க்கண்டவைகளாக இருந்தல் கூடாது:

    தனிநபர் குறை, நிதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு.

    முதியோர் ஓய்வூதியம், பட்டா வேண்டுதல் மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல்.

    வங்கிக் கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் சட்டமன்றப் பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும்.

    ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    அவ்வமயம், மனுதாரர்முன்னிலையில், குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம்கேட்டறியப்படும்.

    இது குறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும்.

    07.10.2022 க்குப் பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாது.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

    • நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • பச்சாபாளையம் பொதுமக்கள் அங்கும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் முயற்சி மேற்கொள்ளும் நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி பல்லடத்தில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பச்சாபாளையம் பொதுமக்கள் அங்கும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதில் அதிகாரிகள் உங்களது கருத்துக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்தனர். இந்த நிலையில், நேற்று பச்சாபாளையம் பகுதியில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நில அளவீடு செய்வதாக கூறி, பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சர்வேயர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். இதனை அறிந்து அங்கு கூடிய பச்சாபாளையம் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை சிறை பிடித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற தாசில்தார் மற்றும் பல்லடம் போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்தனர். அளவீடு பணி மட்டுமே நடைபெறுகிறது. எவ்வளவு இடம் உள்ளது. ஆய்வு செய்யவே வந்துள்ளோம். என மக்களிடம் எடுத்துக்கூறினர். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பொதுமக்கள் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த பின் எந்தவித தகவலும் சொல்லாமல், நீங்கள் அளவீடு பணி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கு எரிவாயு தகன மேடை அமைப்பதால் ஏற்படும் இடையூறுகள் குறித்து நாங்கள் தெரியப்படுத்தி உள்ளோம். அதற்கான பதில் தராமல் திட்டப் பணிகளை மேற்கொள்வது எந்த வகையில் நியாயம் என ஆவேசப்பட்டனர்.

    இதையடுத்து இன்னொரு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துகொள்ளலாம் என கூறிவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- அரசு எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் தொலைநோக்குப் பார்வையில் திட்டங்களை கொண்டு வர வேண்டும். இந்தத் திட்டம் அமைந்தால் தினமும் சுமார் 4 முதல் 10 உடல்கள் ஆவது அந்த பகுதிக்கு வரும். ஏற்கனவே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அந்த ரோடு வழியாகத்தான் உடலைக் கொண்டு வரும் வாகனங்கள் சென்று வர வேண்டும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் திட்டம் செயல்படுத்த உள்ள பகுதியில் சுகாதார வளாகம், ரேசன் கடை, பனியன் கம்பெனி,1000க்கும்மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளி ஆகியவை உள்ளன. மேலும் பெண்கள் அதிகமாக நடமாடும் பகுதி, இந்த நிலையில், அங்கு இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பெண்களுக்கு கடும் அவதி ஏற்படும். எனவே தொலைநோக்குப் பார்வையில்,போக்குவரத்து பிரச்சனை இல்லாத, நகருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில், இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மை ஏற்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 4 குவாரிகள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன
    • குத்தகை ஒப்பந்தம் 29.07.2026 வரை நடைமுறையில் உள்ளது. இக்குவாரி முறையான அனுமதி பெற்று இயங்கி வரும் குவாரி ஆகும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம், புவி யியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் பால முருகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப் பிட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தில் 7 கல் குவாரிகள் அரசு அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதில் 4 குவாரிகள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. மீத முள்ள 3 குவாரிகள் மலையிட வாழ் பகுதிகளில் முறையான கிளியரன்ஸ் மற்றும் மாநில சுற்றுப்புறசூழல் தாக்க மதிப் பீட்டு ஆணையத்தின் அனுமதி பெற்றும் இயங்கி வருகின்றன.

    இதில் சித்திரங்கோட்டில் உள்ள குவாரி உதவி இயக்கு நர், புவியியல் மற்றும் சுரங் கத்துறை செயல்முறைகள் குத்தகை ஒப்பந்தம் 29.07.2026 வரை நடைமுறையில் உள்ளது. இக்குவாரி முறையான அனுமதி பெற்று இயங்கி வரும் குவாரி ஆகும்.

    இக்குவாரியில் டிஜிபிஎஸ் சர்வே முடிக்கப்பட்டு நடைமு றையில் உள்ளது. இங்கு ஏதே னும் விதிமீறல் இருப்பின் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின் கீழ் மேல் நடவடிக்கை மேற் கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டிலும் டிரோன் சர்வே செய்யப்பட்டு எடுக்கப்பட்ட கற்களின் அள வீடு குத்தகை காலத்தில் அனு மதிக்கப்பட்ட அளவிற்கும், எடுக்கப்பட்ட கனிமத்தின் அளவிற்கும் வேறுபாடு இருப் பின் கனிம உரிம தொகையும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் எடுக்கப்பட்டிருப்பின் சிறு கனிம சலுகை விதி 36 (4)-ன் கீழ் அபராத நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.
    • பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பெண்களின் எலும்பு பலவீனம் அடைகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2 சாா்பில் பெண்கள் ஆரோக்கியம் என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

    இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி வட்டார ஒருங்கிணைப்பாளா் சிவரஞ்சனி பேசியதாவது:- பெண்கள் அனைவரும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

    இதன் மூலமாக மாா்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் பிறப்புறுப்பு நோய்கள் வராமல் தடுக்க இயலும். பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பெண்களின் எலும்பு பலவீனம் அடைகிறது.இதற்கு அவா்களுக்கு ஏற்படும் கால்சியம் பற்றாக்குறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து முக்கியமானதாகும்.ஆகவே கீரைகள், பழங்கள், காய்கறிகள் போன்ற உணவு வகைகளை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.இக்கருத்தரங்கில் நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    ×