search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தான உணவு"

    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்.
    • டாக்டர்களின் ஆலோசனைகளை முறை யாக பின்பற்ற வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் சமூகநலத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செஞ்சி வட்டாரத்தின் சார்பில் சமுதாய வளை காப்பு விழா செஞ்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மை யினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கருவுற்ற தாய்மார்கள் சத்தான உணவு உட்கொள்ள வேண்டும். டாக்டர்களின் ஆலோசனைகளை முறை யாக பின்பற்ற வேண்டும். பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செய லாளர்கள் விஜயராக வன், பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை சத்தியமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் யோக பிரியா, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன்,செஞ்சி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, நகர செய லாளர் கார்த்திக், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையா ளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டயானா நன்றி கூறினார்.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
    • சமுதாய வளைகாப்பு விழா நடந்தது

    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டவுன்ஹாலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சுமார் 70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. மேலும் அவர்களுக்கு அரசு சார்பில் சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

    அனைவரும் சுகாதாரத்தை பேண வேண்டும். பெண்களை சமமாக நடத்த வேண்டுமென்ற நோக்கில் இது போன்ற சமுதாய வளைகாப்புகள் நடத்தப்படுகிறது.

    கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். அப்போதுதான் சத்தான குழந்தைகள் பிறக்கும்.

    பொதுவாகவே பெண்கள் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். பெண்களால் மட்டும் தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.

    சத்தான நல்ல மூளை வளர்ச்சியுடன் பிறக்கும் குழந்தைகள் தான் நம் நாட்டின் எதிர்காலம். குழந்தைகளுக்கு சத்தான உணவை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மனவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகளுக்கான இலவச விடுதி, சத்தான உணவு, சிறப்பு கல்வி ஆகியவை வழங்கப்படுகிறது.
    • இலவச காக்ளியர் அறுவை சிகிச்சைக்கு எற்பாடு செய்து பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இருபாலருக்குமான விடுதியுடன் கூடிய 14 வயதுக்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி கூத்தாநல்லூரில் இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் சேரும் மனவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகளுக்கான இலவச விடுதி, சத்தான உணவு, சிறப்பு கல்வி ஆகியவை வழங்கப்படுகிறது.

    திருத்துறைப்பூண்டி மணலியில் விடுதியின்றி தினசரி வந்து செல்லும் வகையில்14 வயதுக்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் 2 வயது முதல் 6 வயது வரை உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தொடக்க கால பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

    திருவாரூர் நகராட்சியில் முதலியார் தெரு, பாவா கோபால்சாமி நகராட்சி தொடக்கப்பள்ளியில் காது கேளாத, வாய்பேச இயலாத, இளம் சிறார்களுக்கு 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆரம்ப கால பயிற்சி மையம் இயங்கி வருகிறது.

    இந்த மையம் மூலம் காது கேளாத வாய்பேச இயலாத குழந்தைகளுக்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச காக்ளியர் அறுவை சிகிச்சைக்கு எற்பாடு செய்து பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் செவித்திறன் குறைவுடையோருக்கான மற்றும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை விடுதியுடன் கூடிய சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது.

    கலெக்டர் அலுவலகம் எனவே மேற்கானும் ஆரம்ப கால மையங்கள் அல்லது சிறப்பு பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க விரும்பு பெற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல் பாஸ்போர்ட் சைஸ்போட்டோ 2, ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.
    • பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பெண்களின் எலும்பு பலவீனம் அடைகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2 சாா்பில் பெண்கள் ஆரோக்கியம் என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

    இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி வட்டார ஒருங்கிணைப்பாளா் சிவரஞ்சனி பேசியதாவது:- பெண்கள் அனைவரும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

    இதன் மூலமாக மாா்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் பிறப்புறுப்பு நோய்கள் வராமல் தடுக்க இயலும். பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பெண்களின் எலும்பு பலவீனம் அடைகிறது.இதற்கு அவா்களுக்கு ஏற்படும் கால்சியம் பற்றாக்குறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து முக்கியமானதாகும்.ஆகவே கீரைகள், பழங்கள், காய்கறிகள் போன்ற உணவு வகைகளை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.இக்கருத்தரங்கில் நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    ×