search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும்
    X

    கர்ப்பிணி பெண்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சீர்வரிசை பொருட்களை வழங்கிய காட்சி. அருகில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார்.

    குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும்

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
    • சமுதாய வளைகாப்பு விழா நடந்தது

    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டவுன்ஹாலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சுமார் 70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. மேலும் அவர்களுக்கு அரசு சார்பில் சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

    அனைவரும் சுகாதாரத்தை பேண வேண்டும். பெண்களை சமமாக நடத்த வேண்டுமென்ற நோக்கில் இது போன்ற சமுதாய வளைகாப்புகள் நடத்தப்படுகிறது.

    கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். அப்போதுதான் சத்தான குழந்தைகள் பிறக்கும்.

    பொதுவாகவே பெண்கள் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். பெண்களால் மட்டும் தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.

    சத்தான நல்ல மூளை வளர்ச்சியுடன் பிறக்கும் குழந்தைகள் தான் நம் நாட்டின் எதிர்காலம். குழந்தைகளுக்கு சத்தான உணவை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×