search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகன மேடை"

    • நடமாடும் தகனமேடை வாகனத்தை பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
    • 10 கி.மீ. தொலைவில் உள்ள 10 ஊராட்சிகள், மாநகராட்சி 4 வார்டு பொதுமக்கள் பயனடைவார்கள்.

    மங்கலம் :

    மங்கலம் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் திருப்பூர் மேற்கு ரோட்டரி பங்களிப்புடன் ரூ.27லட்சம் மதிப்பீட்டில் நடமாடும் தகனமேடை வாகனத்தை மங்கலம் ஊராட்சி பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார். திருப்பூர் மேற்கு ரோட்டரி தலைவர் பி.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் பி.இளங்குமரன், ஊராட்சி மன்றத்தலைவர் ஆகியோர் கொடியசைத்து நடமாடும் தகனமேடை வாகனத்தை தொடங்கிவைத்தனர். விழாவில் ரோட்டரி நிர்வாகிகள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நடமாடும் தகனமேடை வாகனம் மூலம் மங்கலம் ஊராட்சி, சுற்றுவட்டார பகுதியில் 10 கி.மீ. தொலைவில் உள்ள 10 ஊராட்சிகள், மாநகராட்சி 4 வார்டு பொதுமக்கள் பயனடைவார்கள். முன்னதாக திருப்பூர் மேற்கு ரோட்டரி நிர்வாகிகள் நடமாடும் தகனமேடை வாகனத்தின் சாவியை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவரிடம் வழங்கினர்.

    • வடக்கு வீதியில் எரிவாயு தகன மேடை அமைத்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்–பட்டுள்ளது.
    • பணியை தி.மு.க துணை செயலாளர் துரைமுருகன், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    பாபநாசம்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, தமிழக நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் வடக்கு வீதியில் எரிவாயு தகன மேடை அமைத்திட ரூ.1 கோடியே 42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்–பட்டுள்ளது.

    வடக்கு வீதியில் நடைபெற்று வரும் எரிவாயு தகன மேடை கட்டமைப்பு பணிகளை தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க துணை செயலாளர் துரைமுருகன், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது மாவட்ட பிரதிநி அறிவழகன், பேரூர் துணை செயலாளர் உதயகுமார், பேரூர் பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய பிரதிநி பாஸ்கர், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மைக்கேல் ராஜ், ம.தி.மு.க. பேரூர் செயலாளர் சம்பந்தம், முன்னாள் கவுன்சிலர் விஜி, ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ரூ.1.32 கோடி நிதி ஒதுக்கீடு
    • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட சந்தை பனந்தோப்பு அருகே சுடுகாடு பகுதியில் மின்சார தகனமேடை அமைக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து கலைஞர் நகர்புற மேம்பாடு திட்ட நிதியிலிருந்து ரூ.ஒருகோடியே 32.லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை சந்தைபனந்தோப்பு பகுதியில் நடைபெற்றது.

    இதில் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் செயல் அலுவலர் நந்தகுமார், பொறியாளர் சபீலால், துணைதலைவர் தனபால், நகர செயலாளர் உமா சந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் முயற்சி.
    • வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் முயற்சி மேற்கொள்ளும் நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று பல்லடம் கொசவம்பாளையம் ரோடு பிரிவில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் பச்சாபாளையம், பனப்பாளையம்,ராயர்பாளையம்,நடுப்புதூர், அபிராமி நகர்,கரையாம்புதூர் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் நகராட்சி 7வது வார்டு கவுன்சிலர் கனகுமணி துரைகண்ணன், நகர அ.தி.மு.க. செயலாளர் ராமமூர்த்தி. நகர அவைத்தலைவர் தமிழ்நாடு பழனிசாமி, நகர துணை செயலாளர் லட்சுமணன்,மற்றும் துரைகண்ணன், ரமேஷ், நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்ச்சுணன், பா.ஜ.க.சார்பில் கிருஷ்ணபிரசாத், அண்ணாதுரை, பா.ம.க.சார்பில் காளியப்பன், முன்னவன்,பாஸ்கரன், பல்லடம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அய்யாசாமி,ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • பச்சாபாளையம் பொதுமக்கள் அங்கும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் முயற்சி மேற்கொள்ளும் நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி பல்லடத்தில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பச்சாபாளையம் பொதுமக்கள் அங்கும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதில் அதிகாரிகள் உங்களது கருத்துக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்தனர். இந்த நிலையில், நேற்று பச்சாபாளையம் பகுதியில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நில அளவீடு செய்வதாக கூறி, பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சர்வேயர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். இதனை அறிந்து அங்கு கூடிய பச்சாபாளையம் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை சிறை பிடித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற தாசில்தார் மற்றும் பல்லடம் போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்தனர். அளவீடு பணி மட்டுமே நடைபெறுகிறது. எவ்வளவு இடம் உள்ளது. ஆய்வு செய்யவே வந்துள்ளோம். என மக்களிடம் எடுத்துக்கூறினர். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பொதுமக்கள் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த பின் எந்தவித தகவலும் சொல்லாமல், நீங்கள் அளவீடு பணி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கு எரிவாயு தகன மேடை அமைப்பதால் ஏற்படும் இடையூறுகள் குறித்து நாங்கள் தெரியப்படுத்தி உள்ளோம். அதற்கான பதில் தராமல் திட்டப் பணிகளை மேற்கொள்வது எந்த வகையில் நியாயம் என ஆவேசப்பட்டனர்.

    இதையடுத்து இன்னொரு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துகொள்ளலாம் என கூறிவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- அரசு எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் தொலைநோக்குப் பார்வையில் திட்டங்களை கொண்டு வர வேண்டும். இந்தத் திட்டம் அமைந்தால் தினமும் சுமார் 4 முதல் 10 உடல்கள் ஆவது அந்த பகுதிக்கு வரும். ஏற்கனவே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அந்த ரோடு வழியாகத்தான் உடலைக் கொண்டு வரும் வாகனங்கள் சென்று வர வேண்டும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் திட்டம் செயல்படுத்த உள்ள பகுதியில் சுகாதார வளாகம், ரேசன் கடை, பனியன் கம்பெனி,1000க்கும்மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளி ஆகியவை உள்ளன. மேலும் பெண்கள் அதிகமாக நடமாடும் பகுதி, இந்த நிலையில், அங்கு இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பெண்களுக்கு கடும் அவதி ஏற்படும். எனவே தொலைநோக்குப் பார்வையில்,போக்குவரத்து பிரச்சனை இல்லாத, நகருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில், இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மை ஏற்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ராமநாதபுரத்தில் எரிவாயு தகன மேடை புதுப்பிக்கும் பணியை நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
    • அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி யில் அல்லிக்கண்மாய் பகுதியில் எரிவாயு தகன மேடை உள்ளது. கடந்த சில மாதங்களாக தகன மேடையில் எரிவாயு மூலம் சடலங்களை எரியூட்டும் எந்திரம் பழுதாகி விட்டது.

    இதனால் சடலங்கள் திறந்தவெளியில் விறகு களால் எரியூட்டப்பட்டு வருகிறது. மழை பெய்யும் காலங்களில் சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்படுவதாக புகாா் எழுந்தது.

    அதையடுத்து எரிவாயு தகன மேடையை ரூ.49 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தகன மேடை புதுப்பிப்பு பணிகளை நகராட்சித் தலைவா் காா்மேகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

    அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா். இதை தொடர்ந்து ராமநாத புரம் சட்டமன்ற உறுப்பி னர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் அறிவுறுத்த லின்படி ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட ஊரணிகளை வைகை தண்ணீர் கொண்டு நிரப்பு வதற்கு பெரியகண்மாய் வரத்து கால்வாய்களை தூர்வாறும் பணியினை நகர்மன்ற தலைவர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

    • ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.
    • தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை, மாவட்ட ஆட்சியர், ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை, மாவட்ட ஆட்சியர், ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

    மேலும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம், நடத்தி வந்தனர்.இந்த நிலையில் 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், கருப்புக் கொடிகளை அவிழ்த்துவிட்டு வீடுகளில் தேசியக் கொடிகளை ஏற்றி வைத்தனர் .இந்நிலையில், நேற்று மீண்டும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எரிவாயு தகன மேடைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    • ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.
    • தகன மேடை பணியை தடை செய்யக்கோரி பொதுமக்கள் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில், நவீன எரிவாயு தகன மேடை அமைப்பது குறித்து சமாதானக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:-பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.145 லட்சம் மதிப்பில்,நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் ஆட்சேபனை கடிதங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை தடை செய்யக்கோரி பொதுமக்கள் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மேற்கண்ட பணியின் சிறப்பு அம்சங்களை பொதுமக்களிடம் விளக்கிக் கூறி சுமூக தீர்வு காண ஏதுவாக, பல்லடம் நகர்மன்றத் தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் முன்னிலையில், இன்று மாலை 3 மணி அளவில், பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள பி.எம்.ஆர். சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் அமைதி குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்லடம் நகராட்சி பகுதியை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×