மின்சார தகன மேடை அமைக்க பூமி பூஜை

ரூ.1.32 கோடி நிதி ஒதுக்கீடுஎம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
மின்சார தகன மேடை அமைக்க பூமி பூஜை செய்த காட்சி.
மின்சார தகன மேடை அமைக்க பூமி பூஜை செய்த காட்சி.
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட சந்தை பனந்தோப்பு அருகே சுடுகாடு பகுதியில் மின்சார தகனமேடை அமைக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து கலைஞர் நகர்புற மேம்பாடு திட்ட நிதியிலிருந்து ரூ.ஒருகோடியே 32.லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை சந்தைபனந்தோப்பு பகுதியில் நடைபெற்றது.

இதில் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

விழாவில் செயல் அலுவலர் நந்தகுமார், பொறியாளர் சபீலால், துணைதலைவர் தனபால், நகர செயலாளர் உமா சந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com