search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள்  முற்றுகை
    X

    பொதுமக்கள் முற்றுகையிட்ட காட்சி. 

    எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

    • நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • பச்சாபாளையம் பொதுமக்கள் அங்கும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் முயற்சி மேற்கொள்ளும் நிலையில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி பல்லடத்தில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பச்சாபாளையம் பொதுமக்கள் அங்கும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதில் அதிகாரிகள் உங்களது கருத்துக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்தனர். இந்த நிலையில், நேற்று பச்சாபாளையம் பகுதியில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நில அளவீடு செய்வதாக கூறி, பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சர்வேயர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர். இதனை அறிந்து அங்கு கூடிய பச்சாபாளையம் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை சிறை பிடித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற தாசில்தார் மற்றும் பல்லடம் போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்தனர். அளவீடு பணி மட்டுமே நடைபெறுகிறது. எவ்வளவு இடம் உள்ளது. ஆய்வு செய்யவே வந்துள்ளோம். என மக்களிடம் எடுத்துக்கூறினர். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பொதுமக்கள் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த பின் எந்தவித தகவலும் சொல்லாமல், நீங்கள் அளவீடு பணி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கு எரிவாயு தகன மேடை அமைப்பதால் ஏற்படும் இடையூறுகள் குறித்து நாங்கள் தெரியப்படுத்தி உள்ளோம். அதற்கான பதில் தராமல் திட்டப் பணிகளை மேற்கொள்வது எந்த வகையில் நியாயம் என ஆவேசப்பட்டனர்.

    இதையடுத்து இன்னொரு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துகொள்ளலாம் என கூறிவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- அரசு எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் தொலைநோக்குப் பார்வையில் திட்டங்களை கொண்டு வர வேண்டும். இந்தத் திட்டம் அமைந்தால் தினமும் சுமார் 4 முதல் 10 உடல்கள் ஆவது அந்த பகுதிக்கு வரும். ஏற்கனவே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அந்த ரோடு வழியாகத்தான் உடலைக் கொண்டு வரும் வாகனங்கள் சென்று வர வேண்டும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் திட்டம் செயல்படுத்த உள்ள பகுதியில் சுகாதார வளாகம், ரேசன் கடை, பனியன் கம்பெனி,1000க்கும்மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளி ஆகியவை உள்ளன. மேலும் பெண்கள் அதிகமாக நடமாடும் பகுதி, இந்த நிலையில், அங்கு இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பெண்களுக்கு கடும் அவதி ஏற்படும். எனவே தொலைநோக்குப் பார்வையில்,போக்குவரத்து பிரச்சனை இல்லாத, நகருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில், இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மை ஏற்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×