search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cable Operators"

    • அரசு கேபிள் ஆபரேட்டர்கள் தங்கள் கணக்கில் லாக் இன் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.
    • அரசு கேபிள் டி.வி., நிறுவனம், சந்தா தொகை செலுத்த ஆபரேட்டர்களுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறது.

    திருப்பூர் :

    அரசு கேபிள் டி.வி., நிறுவனத்துக்கு மென் பொருள் வழங்கிய நிறுவனம் கடந்த நவம்பர் மாத இறுதியில் திடீரென சேவையை நிறுத்தியது. இதையடுத்து அரசு கேபிள் டி.வி., ஒளிபரப்பு ரத்தானது.கோர்ட்டு உத்தரவையடுத்து தடையின்றி கேபிள் டி.வி., ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம் அரசு கேபிள் ஆபரேட்டர்கள் தங்கள் கணக்கில் லாக் இன் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி., ஆபரேட்டர் 659 பேர் உள்ளனர். மொத்தம் 82 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. லாக்இன் பிரச்சினை காரணமாக புதிய இணைப்பு வழங்க முடியாமலும், பழுதடைந்த பாக்ஸ்களை வாடிக்கையாளர்களுக்கு மாற்றிக் கொடுக்க முடியாமலும் ஆபரேட்டர்கள் தவிக்கின்றனர்.

    இது குறித்து அரசு கேபிள் ஆபரேட்டர்கள் கூறியதாவது:-  லாக்இன் பிரச்னையால் புதிய செட்டாப் பாக்ஸ்களை ஆக்டிவேட் செய்ய முடியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக புதிதாக அரசு கேபிள் இணைப்பு கேட்போருக்கு வழங்க முடியவில்லை. பழுதான செட்டாப் பாக்ஸ்களையும் மாற்ற முடியாததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைகின்றனர். தனியார் இணைப்புகளை நோக்கி நகர்கின்றனர்.

    50சதவீத சந்தாதாரர்கள், ஒளிபரப்பு ரத்தான பின்னரே மாதாந்திர சந்தா தொகை செலுத்துவது வழக்கம். தற்போது தொகை செலுத்தாதோரின் ஒளிபரப்பை ரத்து செய்யமுடிவதில்லை. ஒளிபரப்பு தொடர்வதால் சந்தா தொகை செலுத்த மேலும் இழுத்தடிக்கின்றனர். அரசு கேபிள் டி.வி., நிறுவனம், சந்தா தொகை செலுத்த ஆபரேட்டர்களுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறது.

    வாடிக்கையாளர் பயன்படுத்தாத பாக்ஸ்களையும் செயலிழக்க செய்யமுடியவில்லை. பயன்பாட்டில் இல்லாத பாக்ஸ்களுக்கும் தொகை செலுத்தவேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காணவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பயன்படுத்தாத செட்டாப் பாக்ஸ்களை ஜூலை மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது.
    • மொத்தம் 532 ஆபரேட்டர்கள் நிறுவனத்துக்கு, கட்டண பாக்கியும் வைத்துள்ளனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி., நிறுவனம், கடந்த ஜூன் மாதம் கணக்கிட்டு பயன்படுத்தாத செட்டாப் பாக்ஸ்களை ஜூலை மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது. பிறகு செப்டம்பர் மாதம் இறுதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

    இது குறித்து அரசு கேபிள் டி.வி., நிறுவன தனி தாசில்தார் ரவீந்திரன் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் அரசு செட்டாப் பாக்ஸ்களை, ஆபரேட்டர்கள் பயன்படுத்தாமல் வைத்துள்ளனர். மொத்தம் 532 ஆபரேட்டர்கள் நிறுவனத்துக்கு, கட்டண பாக்கியும் வைத்துள்ளனர். இவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு முதல்கட்டமாக போலீசில் புகார் அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, வீரபாண்டி, அனுப்பர்பாளையம், பூண்டி போலீஸ் நிலையங்கள், அவிநாசி, சேவூர், ஊத்துக்குளி, பல்லடம், உடுமலை, அமராவதி, மூலனூர் நிலையங்களில் 14 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 56 லட்சம் ரூபாய் அளவுக்கு பாக்கி வைத்துள்ளனர். ஒரு செட்டாப் பாக்ஸ் மதிப்பு 1,726 ரூபாய் என கணக்கிட்டு அதற்கான தொகையை செலுத்தக்கோரி போலீசில் புகார் அளித்து வருகிறோம். மொத்தம் 20 வகை பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு பட்டியல் வரிசைப்படி புகார் அளிக்கிறோம் என்றார். 

    • பொதுமக்கள், போக்குவரத்து மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடையாக உள்ள கேபிள்களை முறையாக அமைப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
    • பெரும்பாலானோர் மின் கம்பங்கள், தெரு விளக்கு கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் வழியாகவும் இஷ்டம் போல் கேபிள்களை கொண்டு செல்கின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இயங்கும் கேபிள் ஆபரேட்டர்களுடன் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில், நூற்றுக்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் மின் கம்பங்கள், தெரு விளக்கு கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் வழியாகவும் இஷ்டம் போல் கேபிள்களை கொண்டு செல்கின்றனர்.இதனால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கேபிள் ஆபரேட்டர்களுடன் கமிஷனர் கிராந்திகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் நகரப்பகுதியில் பொதுமக்கள், போக்குவரத்து மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடையாக உள்ள கேபிள்களை முறையாக அமைப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    அரசுக்கு சொந்தமான செட்டாப் பாக்ஸ்களை மாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு மேலாண்மை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #TNCable
    சென்னை:

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் தமிழகத்தில் சுமார் 27½ லட்சம் ‘செட்டாப்’ பாக்ஸ்கள் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் மற்றும் கேபிள் ஆபரேட்டர்களின் நலன் கருதி இந்த ‘செட்டாப்’ பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘செட்டாப்’ பாக்ஸ்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

    இந்தநிலையில், ‘அதிரடி’ என்ற தலைப்பில் ஒரு வாட்ஸ்-ஆப் செய்தி கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. அதில், ‘எந்த டிஜிட்டல் கம்பெனியின் ‘செட்டாப்’ பாக்ஸையும் கொடுத்து தங்களது ‘செட்டாப்’ பாக்ஸை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம், எந்தவொரு முன்பணமும் கட்ட தேவையில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு நிறுவனத்துக்கு சொந்தமான ‘செட்டாப்’ பாக்ஸ்களை, வேறொரு நிறுவனத்தின் ‘செட்டாப்’ பாக்ஸ்-க்காக மாற்றிக்கொள்வது சட்டத்துக்கு புறம்பான செயல் மற்றும் குற்றமும் கூட. எனவே இச்செயலில் ஈடுபடும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  #TNCable
    ×