search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கினார்"

    • பாப்பிரெட்டிப்பட்டி பகுதி பூதநத்தம் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ராமரை போலீசார் கைது செய்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,  

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வனச்சரகர் ஆனந்தகுமார், வனவர் செந்தில்குமார், வனக்காப்பாளர் முருகன் மற்றும் வனக்குழுவினர் பாப்பிரெட்டிப்பட்டி பகுதி பூதநத்தம் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பட்டா நிலத்தில் மின் இணைப்பு எடுத்து வன உயிரினங்களை வேட்டையாட முயற்சி செய்த மெனசி சேர்ந்த ராமர்(53) என்பவரை பிடித்து மாவட்ட வன அதிகாரி அப்பாலாநாயுடு முன்னர் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

    அவர் ராமரை வனவிலங்குகளை வேட்டையாட முயற்சித்த குற்றத்திற்காக கைது செய்ய உத்தரவிட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சேலம் ஏற்காடு நெடுஞ்சாலை குமாரசாமிப்பட்டி பகுதியில் மரம் வெட்டியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் உறுதி அளித்தனர்.
    • வெட்டப்பட்ட மர கிளைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் ஏற்காடு நெடுஞ்சாலை குமாரசாமிப்பட்டி பகுதியில் இன்று காலை வின்சென்ட் பகுதியை சேர்ந்த அழகு ராஜன் என்பவர் தனது வேலை ஆட்களை வைத்து எந்திரங்கள் மூலம் அப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த அரச மரம் உள்ளிட்ட மரங்களை வெட்டிக் கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அனுமதி பெற்று தான் இந்த மரங்களை வெட்டுகிறீர்களா? என்று கேட்டதற்கு இதை சொல்வதற்கு நீங்கள் யார் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அழகு ராஜன், மரம் வெட்டும் பணியை பாதியில் நிறுத்திவிட்டு புறப்பட்டுச் செல்ல முயன்றார். அப்போது அங்கு போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வந்து அழகு ராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அரசு அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து அழகு ராஜன் மீது மரம் வெட்டியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். வெட்டப்பட்ட மர கிளைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஊமச்சிகுளத்தில் வீட்டில் நகை திருட்டில் சிறையில் இருந்தவர் சிக்கினார்.
    • 11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வழக்கில் துப்பு துலங்கியது.

    மதுரை

    ஊமச்சிகுளம் அண்ணா நகரை சேர்ந்தவர் மலைசாமி. இவரது வீட்டில் 11 ஆண்டுகளுக்கு முன்பு நகைகள் திருடு போனது. இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது வீட்டில் குற்றவாளியின் கைரேகை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

    ஆனாலும் இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டனர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. எனவே இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. மதுரை மாவட்ட காவல்துறையில் புலனாய்வு தொடர்பாக நவீன சாத னங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் அடிப்ப டையில் சிலைமான் போலீ சார், மலைசாமி வீட்டில் கிடைத்த கைரேகை மாதிரி அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த சேவுகராஜ் என்ப வருடன் கைரேகை ஒத்துப் போனது. போலீசார் அவரை தேடிச் சென்றனர். அப்போது சேவுகராஜ் முதுகுளத்தூர் கிளைச் சிறையில் இருப்பது தெரியவந்தது. சிலைமான் போலீசார் முதுகுளத்தூர் சென்று சேவுகராஜை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஊமச்சிகுளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அவரிடம் மலைசாமி வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் ரோட்டில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடை பகுதியில் உள்ள மருந்து கடையில் டிப்டாப் உடை அணிந்த நபர் ஒருவர் வந்தார். அவர் தான் மருத்துவ அதிகாரி என்று கூறினார்.
    • சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பதும், குடிபோதையில் சுகாதாரத்துறை மருத்துவ ஆய்வாளர் என்று கூறி பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் ஏராளமான மெடிக்கல் மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதிகள் உள்ளனர். இவர்களை குறி வைத்து ஒரு கும்பல் மிரட்டி பணம் பறிப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று சேலம் ரோட்டில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடை பகுதியில் உள்ள மருந்து கடையில் டிப்டாப் உடை அணிந்த நபர் ஒருவர் வந்தார். அவர் தான் மருத்துவ அதிகாரி என்று கூறினார். தொடர்ந்து அங்கு இருந்த கடை உரிமையா–ளரிடம் மருந்து கடைக்கு உரிய அனுமதி பெறப்–பட்டுள்ளதா, காலாவதியான மருந்துகள் விற்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

    இதனால் கடை ஊழியருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சந்தேகம் அடைந்த அந்த கடை ஊழியர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரைப் பிடித்து வைத்துக்கொண்டு நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பதும், குடிபோதையில் சுகாதாரத்துறை மருத்துவ ஆய்வாளர் என்று கூறி பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

    • ஈரோட்டில் போலீசார் வாகன சோதனையில் மோட்டார்சைக்கிள் கொள்ளையன் சிக்கினார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவரை நிறுத்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    போலீஸ் விசாரணையில் அவர் வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த முருகன் (27) என்பதும் அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் திருடி கொண்டு வந்ததும் தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு முனிசிபல் காலனியில் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை முருகன் திருடியது தெரியவந்தது.

    மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த போது தான் முருகன் போலீசார் வாகன சோதனையில் சிக்கினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

    அவர் மீது ஏற்கனவே இதுபோன்ற பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சி.சி.டி.வி. கேமிரா காட்சி அடிப்படையில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
    • அவர்களிடம் இருந்து 10.5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (60). கடந்த 6-ந் தேதி வெளியே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இவர் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதேப்போல் தாலுகா, வீரப்பன்சத்திரம் பகுதிகளிலும் அடுத்தடுத்து நகை பறிப்பு சம்பவம் நடந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்த ப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சி அடிப்படையில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 14-ந் தேதி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன் (23), கோபிநாத் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 7.25 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதுசமயம் இவர்களுடன் சேர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த திருப்பூரை சேர்ந்த ஜனகராஜ் மற்றும் பிரபாகரனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று வாகன சோதனையில் இருவரும் சிக்கினர். இதில் ஜனகராஜ் மட்டும் ஈரோட்டில் 8 இடங்களில் செல்போன், நகை பறிப்பில் ஈடுபட்டு உள்ளார். 9-வது முறையாக ஜனகராஜ் நகை பறிப்பில் ஈடுபட முயன்றபோது போலீசாரிடம் சிக்கியு ள்ளார்.

    இவர்களிடம் இருந்து 10.5 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ×