search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஞ்சலி"

    • டாக்டர் மதன்குமார் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • டாக்டர் மதன்குமாரின் உடலை பார்த்து கதறி அழுத படியே அஞ்சலி செலுத்தினர்.

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்தவர் மதியழகன், காண்டிராக்டர். இவரது மனைவி பூங்கொடி. இவர்களது மகன் மதன்குமார் (29).

    எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுவியல் மேற்படிப்பு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் திடீரென மதன்குமார் மாயமானார். சகமாணவர்கள் அவரை தேடிய போது விடுதியின் பின்புறம் மதன்குமார் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், விடுதியின் மாடியில் வைத்து டாக்டர் மதன்குமாரை கொலை செய்த மர்ம நபர்கள் அவரது உடலை தீ வைத்து எரித்ததாகவும், பின்னர் பாதி எரிந்த நிலையில் உடலை தூக்கி கீழே போட்டதில் அந்த உடல் விடுதியின் பின்புறத்தில் விழுந்து கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே டாக்டர் மதன்குமார் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மதன்குமார் உடல் விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டியை அடுத்த புதூரில் உள்ள சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் அவரது உடல் இன்று காலை கொண்டு வரப்பட்டது.

    இதையொட்டி அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர். அவர்கள் டாக்டர் மதன்குமாரின் உடலை பார்த்து கதறி அழுத படியே அஞ்சலி செலுத்தினர்.

    அமைச்சர் அஞ்சலி

    தொடர்ந்து அவரது உடல் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா உள்பட பலர் மதன்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது உடல் நாமக்கல் மின் மாயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே மகன் சாவுக்கான காரணத்தை கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
    • ஆன்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    தஞ்சாவூர்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

    இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது

    இந்த தாக்குதல்களால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களும் , குழந்தைகளும் உயிரிழந்து வருகின்றனர்.

    சமீபத்தில் காஸாவில் உள்ள மருத்துவம னையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500க்கும் மேற்பட்டவர்கள் பலியானது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

    இதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் போருக்கு எதிரான குரல்கள் ஒலித்து வருகின்றன.

    பிரதமர் மோடி , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே அமைதி திரும்பவும் போரில் உயிர்நீத்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் காயம டைந்தவர்கள் விரைவில் நலம் பெறவும் உலகெங்கும் மனிதம் தழைக்கவும் தஞ்சை நகர பொதுமக்கள் அமைதி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர் .

    தஞ்சை ரெயிலடி பகுதியில் ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் தஞ்சாவூர் நகர பொதுமக்கள் சார்பில் 50 பெண்கள் இந்த கூட்டு பிரார்த்தனை நிகழ்வில் ஈடுபட்டனர்.

    போரில் இறந்தவர்களின் புகைப்படத்துக்கு மலர் தூவி அவர்களின் ஆன்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் இந்த போரினால் காயமடைந்தவர்கள், உடமைகளை இழந்தவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பவும் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திரும்பவும் கூட்டு அமைதி பிரார்த்தனை செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • காவல்துறையினரும் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.
    • வீரமரணம் அடைந்தவர்களுக்கு 21 குண்டுகள் 3 முறை முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு உயிரிழந்த காவலர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவு தூண் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் , போலீஸ் சூப்பிரண்டு ஹரிஷ் சிங் ஆகியோர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்நது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு , துணை போலீஸ் சூப்பிரண்டுகள் , ஊர்க்காவல் படையினர் உட்பட அனைத்து நாகை மாவட்ட காவல்துறை யினரும் மலர் வளையம் வைத்து வீரவ ணக்கம் செலுத்தினார்கள்.

    பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் போலீசார் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பின்பு ஆயுதப்படை காவல் ஆய்வாளரின் தலைமையில் ஆயுதப்படை காவலர்கள், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 21 குண்டுகள் 3 முறை முழங்க அஞ்சலி செலுத்தி, போலீசார் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
    • முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழ்செல்வன், பூவைசெழியன், மாவட்ட அவை தலைவர் குணசீலன், மாவட்ட நிர்வாகிகள் ராஜாராம், ராணி, அந்தூர் ராஜேந்திரன், முத்தமிழ்செல்வன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செல்வகுமார், சிவப்பிரகாசம், பேரூர் செயலாளர் செந்தில்குமார், வக்கீல்கள் கனகராஜ், ராமசாமி, துறைமங்கலம் சந்திரமோகன், கீழப்புலியூர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட் டக் கழகச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி செய்தி ருந்தார்.

    ராமநாதபுரம்

    இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், வெள் ளையனே வெளியேறு" இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், தமிழ் நாட்டின் தென் மாவட்டங்க ளில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கா கப் போராடி, ஓர் அரசியல் சக்தியாக, அவர்கள் அணி திரள்வதற்கு முக்கிய கார ணமாக இருந்தவருமான அரசியல் தலைவர், சுதந்தி ரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி. மு.க. பொதுச்செயலாள ரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட் டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப் பட்டது.

    முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ., கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த் திகா முனியசாமி, கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, தலை மைச் செயற்குழு உறுப்பினர் ராஜலெட்சுமி, முன்னாள் அமைச்சர்கள் அ.அன்வர் ராஜா, கழக மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் எம்.மணிகண்டன்

    முன்னாள் கழக அமைப் புச் செயலாளர் நிறைகுளத் தான், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சதன் பிரபாகர், டாக்டர் எஸ்.முத்தையா, முதுகுளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. துணைச் செயலா ளரும், வெங்கலக்கு றிச்சி ஊராட்சி மன்றத் தலைவ ருமான எஸ்.டி.செந்தில்கு மார் மற்றும் அ.தி.மு.க. சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் உள் ளிட்டோர் அவரது நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ராமநாதபுரம் மாவட் டக் கழகச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி செய்தி ருந்தார்.

    • புதுக்கோட்டையில கருணாநிதியின் நினைவு ஊர்வலம் தி.மு.க. சார்பில் நடைபெற்றது
    • ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டுமவுன ஊர்வலம் மற்றும் அவரின் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழககம் முழுவதும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அறந்தாங்கியில் நகரச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.கலைஞர் மன்றத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் பெரியகடைவீதி, கட்டுமாவடிச்சாலை முக்கம் வழியாக அண்ணா சிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து அங்கே அமைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதே போன்று நாகுடியில் தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்கணேசன் தலைமையில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் நகர்மன்றத்தலைவர் ஆனந்த்,ஒன்றியச் செயலாளர்கள் பொன்கணேசன், சீனியார், நகர்மன்றத் துணைத் தலைவர் முத்து, நகர கழக நிர்வாகிகள் பழனிச்சாமி, ராமசாமி, பிஎம்ஆர் ராஜேந்திரன், ராவுத்தர்கனி, அனந்தராமன், அருளாந்து, பழமாரியப்பன், சத்தியசீலன், செல்லத்துரை, வின்சென்ட்ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணிராஜன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் சக்திவேல், ஹரிவிமலாதி, நகர்மன்ற உறுப்பினர்கள் காசிநாதன், துளசிராமன், சரோஜா, பிச்சை முத்து, வட்ட கழக செயலாளர்கள் கைலாசம், தமிழ் மறைச் செல்வம், மதியழகன், ரமேஷ், காளிதாஸ், நசுருதீன், சுமங்கலி சாஜஹான், ரவி, மாவட்ட அணியின் துணை அமைப்பாளர்கள் அன்பழகன், சோம ஆறுமுகம், நாராயணன், ஆறுமுகம், வேணுகோபால், கருணாகரன், அடைக்கலராஜா, தமிழ் ராசு, நகர இளைஞர் அணி அமைப்பாளர் சேக் இஸ்மாயில், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அய்யப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வளர்ப்பு நாயை குடும்பத்தில் ஒரு நபராக கருதி பராமரித்து வந்தனர்.
    • நாயின் படத்திற்கு தினமும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறோம்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). ஓவியர்.

    இவரது மனைவி கலைச்செல்வி (58). இவர்களுக்கு ராகமாலிகா என்கிற மகளும், மனோ என்கிற மகனும் உள்ளனர்.

    பன்னீர்செல்வத்தின் மகன் மனோவும் ஓவியராக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் நாய் ஒன்றை ஜிஞ்சு என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தனர்.

    இந்த வளர்ப்பு நாயை குடும்பத்தில் ஒரு நபராக கருதி பராமரித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் வளர்ப்பு நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது.

    இதனால் வீட்டில் இருந்த நபர் ஒருவரை இழந்து தவிக்கும் உணர்வில் பன்னீர்செல்வம் குடும்பமே துயரத்தில் மூழ்கினர்.

    பன்னீர்செல்வம் குடும்பத்தினர், வளர்ப்பு நாயின் உருவப்படத்தை வீட்டில் வைத்து தினமும் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இது குறித்து ஓவியர் பன்னீர்செல்வம் கூறுகையில், வளர்ப்பு நாயை, நாங்கள் வீட்டில் ஒரு நபராகவே வைத்து பராமரித்து வந்தோம். வேலை விஷயமாக வெளியூருக்கு செல்லும் போதொல்லாம் அந்த நாய் தான் வீட்டுக்கு பாதுகாப்பு.

    எங்கு சென்றாலும் உடன் அழைத்துச் செல்வோம்.

    ஒருமுறை வீட்டுக்குள் புகுந்த பெரிய பாம்பை ஜிஞ்சு மட்டும் தனியாக குறைத்து விரட்டியது. திடீரென உடல் நலக்குறைவால் வளர்ப்பு நாய் உயிரிழந்தது.

    இதனால் அதன் உருவப்படத்தை வீட்டில் மாட்டி வைத்து தினமும் மாலை அணிவித்து விளக்கேற்றி பிடித்த உணவுகளை படைத்து அஞ்சலி செலுத்தி வருகிறோம் என்றார்.

    • கேரளாவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாகிய உம்மன் சாண்டி உடல்நல குறைவினால் காலமானார்.
    • குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர்.பினுலால்சிங் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    கேரளாவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாகிய உம்மன் சாண்டி உடல்நல குறைவினால் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள அலுவலகத்தில் உம்மன் சாண்டியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.மேலும் கட்சிக்கொடியானது அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர்.பினுலால்சிங் தலைமை தாங்கினார். ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. , மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், மாவட்ட துணைத்தலைவரும் களியக்காவிளை பேரூராட்சி தலைவருமான சுரேஷ், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தம்பி விஜயகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார், வட்டாரத் தலைவர்கள் ஜெபா, ரவிசங்கர், ராஜசேகரன், மாவட்டச் செயலாளர் ஜாண் இக்னேசியஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக வேர்கிளம்பி சந்திப்பில் உம்மன்சாண்டியின் உருவ படத்துக்கு வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவருடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், மாவட்ட பஞ்சாயத்து கவுன் சிலர் செலின்மேரி, முன்னாள் வட்டார தலைவர் ஜெகன்ராஜ், மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் ஜான் இக்னே ஷியஸ், ஆற்றூர்குமார், காட்டத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ், ஊராட்சி மன்ற காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அச்சுதன், அகஸ்டின்ஜிஜோ, வட்டார செயலாளர் ராஜேஸ், ம்ற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

    • பெருமாநல்லூரில் இருக்கும் நினைவு தூணில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • மின் கட்டண குறைப்பு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    விவசாயிகள் சங்கத்தின் மின் கட்டண குறைப்பு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் நினைவு தினத்தையொட்டி பெருமாநல்லூரில் இருக்கும் நினைவு தூணில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவருமான பி.என்.ஆர்.பாரிகணபதி தலைமையில் இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம் சாமி, செயற்குழு உறுப்பினர் கண்ணபிரான் ,மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராகுல், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் விஜய் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்தவர் அஞ்சலி.
    • இவர் தன் திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

    ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பின்னர் அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா படங்களில் அஞ்சலியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. மேலும் ரெட்ட சுழி, தூங்காநகரம், அரவான், சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.


    தெலுங்கு, மலையாள, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ள அஞ்சலி இணையத்தொடரான பிட்ட கதா தொடரில் அளவுக்கு மீறிய கவர்ச்சியாக நடித்து திடுக்கிட வைத்தார். தொடர்ந்து ஜான்ஸி, பால் போன்ற தொடர்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன.


    இந்நிலையில், நடிகை அஞ்சலி தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். சமீபத்தில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது :- பெண்களை மதிக்கத்தெரிந்த ஒருவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன். அவர் திருமணம் முடிந்த பிறகும் என்னை மரியாதையாக நடத்தும் நபராக இருக்க வேண்டும். இதற்குப் பிறகுதான் அன்பு, காதல் எல்லாமும். அப்படி ஒரு பையன் கிடைக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.

    • இந்திய அரசு பாதுகாப்பு விதிமுறைகளை மேம்படுத்தி விபத்தில்லா பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
    • 40-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் டி.டி.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவ ர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழச்சிக்கு டி.டி.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் விஜயகுமார், செயலாளர் ராஜ் நாராயணன், இணை செயலாளர் மற்றும் ராய் டிரஸ்ட் இண்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன், மாடர்ன் நர்சரி பள்ளி தலைமையாசிரியை தீபா ராணி, டெல்டா ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ், அபி செல் ஷோரூம் உரிமையாளர் மாணிக்க வாசகம், பயிற்றுநர்கள் பிரபு, கிருபாகரன் மற்றும் அகாடமியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    அகாடமியின் நிறுவனர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    மவுன அஞ்சலியை அகாடமி செயலாளர் ராஜ் நாராயணன் தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன் பேசுகையில்:-

    ரெயில்வே நிர்வாகமும், இந்திய அரசும் பாதுகாப்பு விதிமுறைகளை மேம்படுத்தி விபத்தில்லா பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

    • ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பிரிட்டனை சோ்ந்த மெக்ஐவா் என்பவரால் கடந்த 1848-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
    • மெக்ஐவா் கடந்த 1876-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி இறந்தாா்.

    ஊட்டி,

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பிரிட்டனை சோ்ந்த மெக்ஐவா் என்பவரால் கடந்த 1848-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்கான பணிகள் அப்போது தொடங்கப்பட்டு பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டு 1867-ல் பணி நிறைவடைந்தது.

    சுமாா் 19 ஆண்டுகள் அயராது உழைத்து அரசு தாவரவியல் பூங்கா அமைய முக்கிய காரணமாக திகழ்ந்த மெக்ஐவா் கடந்த 1876-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி இறந்தாா்.

    ஊட்டியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் ஆலயத்தில் அவரது நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நினைவு நாளில் தோட்டக்கலைத் துறை சாா்பில் அவரது நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அவருடைய 147-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்க ப்பட்டது. இதையொட்டி தோட்டக் கலைத்துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி மற்றும் அதிகாரிகள் அவரது நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். பின்னா் ஆலய பங்குத் தந்தை சிறப்புப் பிராா்த்தனை நடத்தினாா்.

    ×