search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரசார்"

    • எம்.பி.,-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
    • 8 இடங்களில் இந்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    நாகர்கோவில் :

    மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்தும் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கோட்டாரில் நடந்த பிரசார கூட்டத்தில் விஜய்வந்த் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். நாகர்கோவில் மேலராமன் புதூரில் நடந்த மண்டல விழிப்புணர்வு கூட்டத்திற்கு மண்டல தலைவர் புகாரி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். துணை தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். வார்டு தலைவர் ஜோதி லிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் நாகர்கோ வில மண்டலத்தில் கோட்டார், பெருவிளை, அருகுவிளை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே உட்பட 8 இடங்களில் இந்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 23 ஊராட்சி மற்றும் பேரூ ராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கருங்கல் பேரூ ராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெருவுக் கடை சந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பேரூ ராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் எம்.எல்.ஏ.வு மான ராஜேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் காங் கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    குளச்சல் நகர காங்கிரஸ் சார்பில் காமராஜர் பஸ் நிறுத்தத்தில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கல்லுக்கூட்டம் பேரூர் காங்.சார்பில் உடை யார்விளை சந்திப்பில் தெருமுனை விளக்க கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் மனோகரசிங் தலைமையில் நடந்தது. மாநில பேச்சாளர் குமரி மகாதேவன்,பேரூராட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கேரளாவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாகிய உம்மன் சாண்டி உடல்நல குறைவினால் காலமானார்.
    • குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர்.பினுலால்சிங் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    கேரளாவின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாகிய உம்மன் சாண்டி உடல்நல குறைவினால் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள அலுவலகத்தில் உம்மன் சாண்டியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.மேலும் கட்சிக்கொடியானது அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர்.பினுலால்சிங் தலைமை தாங்கினார். ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. , மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், மாவட்ட துணைத்தலைவரும் களியக்காவிளை பேரூராட்சி தலைவருமான சுரேஷ், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தம்பி விஜயகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார், வட்டாரத் தலைவர்கள் ஜெபா, ரவிசங்கர், ராஜசேகரன், மாவட்டச் செயலாளர் ஜாண் இக்னேசியஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக வேர்கிளம்பி சந்திப்பில் உம்மன்சாண்டியின் உருவ படத்துக்கு வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவருடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், மாவட்ட பஞ்சாயத்து கவுன் சிலர் செலின்மேரி, முன்னாள் வட்டார தலைவர் ஜெகன்ராஜ், மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் ஜான் இக்னே ஷியஸ், ஆற்றூர்குமார், காட்டத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ், ஊராட்சி மன்ற காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அச்சுதன், அகஸ்டின்ஜிஜோ, வட்டார செயலாளர் ராஜேஸ், ம்ற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

    • இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில், ராகுல்காந்தி எம்.பி.பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செய லாளர்கள் சிரஞ்சீவி, தினேஷ் குமார், சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் பவானிசாகர் கார்த்தி, அந்தியூர் ராஜ்குமார், கோபி கோதண்டம், பிரசாந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்

    சிறப்பு அழைப்பா ளர்களாக மாநில செயலாளர் ஜெனித், இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் நரேந்திர தேவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்த லைவர் எல்.முத்துக்குமார், மாநில செயலாளர் குறிச்சி சிவக்குமார், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மொடக்குறிச்சி முத்துக்கு மார், மாநில பொதுக்குழு உறுப்பினர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் இந்த ஆர்ப்பாட்ட த்தில் வட்டார தலைவர்கள் தேவராஜ், முத்துச்சாமி, வேலுமணி, ஆறுமுகம், இந்துஜா, பவானிசாகர் ஒன்றிய குழு உறுப்பினர் பூங்கொடி முத்துச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    • வாடிப்பட்டியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வாடிப்பட்டி

    ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வாடிப்பட்டியில் காங்கிரஸ் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் மகேசுவரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சோனைமுத்து, வட்டார தலைவர்கள் குருநாதன், பழனிவேல், காந்தி, சுப்பாராயல் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் நடராஜன் தொடங்கி வைத்தார்.

    நகர தலைவர் முருகானந்தம் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் வைரமணி, சந்திரசேகர், வருசைமுகமது, அய்யங்காளை, மணி, முருகன், கணேசன், பிரசாத், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து நீக்கிய பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து நீக்கிய பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ராஜ் மோகன், நகரத் தலைவர் பட்சிராஜா, வன்னியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் ரெங்கசாமி பேசுகையில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை தற்காலிகமாக நிறைவேற்றமால், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் நீதிமன்றம் வழங்கியுள்ள நிலையில், உடனடியாக, பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து, வயநாடு பாராளுமன்ற தொகுதி காலியாக உள்ளது என பாராளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது ஜனநாயக படுகொலையாகும்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சக்திமோகன், மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி, மாவட்டச் செயலாளர் முருகேசன், சுந்தரம், ஜெயக்குமார், ராஜபாளையம் நகர்மன்ற உறுப்பினர் சங்கர் கணேஷ், வட்டாரத் தலைவர்கள் பால குருநாதன், முருகராஜ், லட்சுமணன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலத்தில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது.

    திருமங்கலம்

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்து திருமங்கலம் காந்தி சிலை முன்பு தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். நகரத் தலைவர் சவுந்தரபாண்டி, அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, சுப்பிரமணி, மகேந்திரன், ராஜ்குமார், லகநாதன், மகளிரணி மாவட்ட தலைவி பிரவீனா, ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் சரவண பகவான், வக்கீல் பிரிவு ராஜா, பிரசாந்த், கவுன்சிலர் அமுதா சரவணன், முருகேசன், தளபதி சேகர், பாண்டியன், சங்கன், வெஸ்டர்ன் முருகன், புதுராஜா, காசிநாதன், கணேசன், பாண்டீசுவரன், வேல்முருகன், பழனிக்குமார், தாழைக் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
    • அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.க்கு, அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தர விட்டது. இந்த நிலை யில் ராகுல்காந்திக்கு வழங்கிய தண்டனையை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.இரணியலில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார்.

    சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் ஜேக்கப் (குளச்சல்), சட்ட மன்ற சக்தி வேல்(பத்மநாபபுரம்) ஆகி யோர் முன்னிலை வகித்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வந்த மெம்மோ ரயிலை மறித்த அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் விஜூமோன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜோண், ராபர்ட், ராஜன், நிஷாந்த், மணிகண்டன், ராஜேஷ், ஸ்டான்லி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் இரணியல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், தனிப் பிரிவு ஏட்டு சுஜின் ஆகியோர் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். மேலும் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தோட்டியோடு சந்திப்பில் இன்று நடந்தது
    • 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையை பணியை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும்.

    நான்கு வழி சாலை பணிக்காக தனியாரிடமிருந்து அரசு விலைக்கு எடுத்த நிலங்களுக்கு உடனடியாக மார்க்கெட் விலைப்படி பணம் வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் இன்று நடந்தது.

    தோட்டியோடு சந்திப்பில் நடந்த மறியல் போராட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம் தலைமை தாங்கினார்.மறியல் போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் மற்றும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ் உள்பட நூற்றுக்கணக்கான காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர் .கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    • சுதந்திரதினபவள விழாவையொட்டி வாடிப்பட்டியில் காங்கிரசார் பாதயாத்திரை நடத்தினர்.
    • வாடிப்பட்டி, சல்லக்குளம், கருப்பட்டி, இரும்பாடி வழியாக சென்று சோழவந்தான் காமராஜர்சிலையை அடைந்தது.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் 75-வது சுதந்திரதினபவள விழாவையொட்டி பாதயாத்திரை நடந்தது.

    மாவட்டத்தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகரதலைவர் முருகானந்தம், மாவட்டத்துணைத்தலைவர் செல்வக் குமார், துரைப்பாண்டி, வட்டாரத்தலைவர் பழனிவேல், ராயல், காந்தி சவுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர். ஊடகபிரிவு தொகுதிதலைவர் வையாபுரி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் நூர்முகமது தொடங்கி வைத்தார்.

    வாடிப்பட்டி, சல்லக்குளம், கருப்பட்டி, இரும்பாடி வழியாக சென்று சோழவந்தான் காமராஜர்சிலையை அடைந்தது. இதில் மனிதஉரிமை மாவட்டத்தலைவர் ஜெயமணி, ஒ.பி.சி.அணி மாவட்டத் தலைவர் முருகன், முன்னாள் சேர்மன் திலகராஜ், அமைப்புசாரா தொழிலாளர் அணிமாநிலதலைவர் மகேஸ்வரன், சோனைமுத்து, வரிசைமுகமது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இளைஞர் காங்கிரஸ் தொகுதி துணைத்தலைவர் நவீன்குமார் நன்றி கூறினார்.

    • இதையடுத்து மத்திய அரசை கண்டித்து பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் பஷிரியா பேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    பெருந்துறை:

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்க துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதையடுத்து மத்திய அரசை கண்டித்து பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்துறை தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.

    இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கையில் காங்கிரஸ் கொடியை ஏந்தி கோஷம் போட்டு போட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் பஷிரியா பேகம் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று சிவகிரி புதிய பஸ் நிலையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்துறை வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் பஷிரியா பேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி தமிழக முழுவதும் நேற்று காங்கிரசார் மறியல் போராட்டம்
    • சாலையை சீரமைக்க கோரி தே.மு.தி.க.வினர் போராட்டம்

    நாகர்கோவில்:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி தமிழக முழுவதும் நேற்று காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்திலும் 3 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்புள்ள இந்தியன் வங்கி முன்பு மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 68 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    வெள்ளிச்சந்தை அருகே வெள்ளமோடி பகுதியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கே.டி. உதயம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். போராட்டத்தில் ஈடுபட்ட 225 பேரை போலீசார் கைது செய்தனர் கைது செய்யப்பட்டவர்கள் மீது வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    குழித்துறை சந்திப்பில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண் டனர். போராட்டத் தில் கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்ட வரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது குழித்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    காங்கிரசார் போராட்டத் தில் ஈடுபட்டபோது அந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க கோரி தே.மு.தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தே.மு. தி.க.வினர் மீது போலீ சார் வழக்குப்பதிவு செய் துள்ளனர். மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் மற்றும் தே.மு.தி.க.வினர் 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • கருங்கலில் இன்று பரபரப்பு
    • போலீசார் சமரச பேச்சு

    கன்னியாகுமரி:

    கருங்கலில் இருந்து தக்கலை செல்லும் சாலை சந்திப்பில் காமராஜர் சிலை உள்ளது. இதனை காங்கிரசார் அமைத்து பராமரித்து வருகின்றனர். ஆண்டுதோறும் காமராஜர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் மற்றும் விசேச நாட்களில் காங்கிரசார் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

    காமராஜரின் 120-வது பிறந்த நாளையொட்டி இன்று காலை 9 மணியளவில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய்,மற்றும் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்.

    அதனையொட்டி சிலையை சுற்றி காங்கிரஸ் கொடிகள் கட்டப் பட்டிருந்தன. அப்போது மறுபுறம் நாம் தமிழர் கட்சியினர் கிள்ளியூர் தொகுதி செயலாளர் ஜாண் ஜெபராஜ் தலைமையில் கொடிகளுடன் திரண்டனர்.

    இரண்டு கட்சியினரும் ஒரே நேரத்தில் காமராஜர் சிலைக்கு மாலையிட வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நித்திரவிளை காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி தலைமையில் கருங்கல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, வேறு எவரும் மாலையிட முடியாத வகையில் அதனை பூட்டிவிட்டு சிலை முன் நின்று கொண்டிருந்தனர். இதனால் நாம் தமிழர் கட்சியினர் சிலைக்கு மாலைபோட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் இருதரப்பினரிடமும் காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் நாம் தமிழர் கட்சியினர் சிலையை சுற்றி கொடிகள் கட்டாமல் ஒரே ஒரு கொடியுடன் வந்து மாலையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்பின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஒரு கொடியுடன் வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திவிட்டு கலைந்து சென்றனர்.

    இச்சம்பவத்தால் கருங்கல் பகுதியில் சிறிது நேரம் பரபப்பு நிலவியது.

    ×