search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் தெருமுனை கூட்டங்கள்
    X

    குமரி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் தெருமுனை கூட்டங்கள்

    • எம்.பி.,-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
    • 8 இடங்களில் இந்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    நாகர்கோவில் :

    மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்தும் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கோட்டாரில் நடந்த பிரசார கூட்டத்தில் விஜய்வந்த் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். நாகர்கோவில் மேலராமன் புதூரில் நடந்த மண்டல விழிப்புணர்வு கூட்டத்திற்கு மண்டல தலைவர் புகாரி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். துணை தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். வார்டு தலைவர் ஜோதி லிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல் நாகர்கோ வில மண்டலத்தில் கோட்டார், பெருவிளை, அருகுவிளை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே உட்பட 8 இடங்களில் இந்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 23 ஊராட்சி மற்றும் பேரூ ராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கருங்கல் பேரூ ராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெருவுக் கடை சந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பேரூ ராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் எம்.எல்.ஏ.வு மான ராஜேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் காங் கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    குளச்சல் நகர காங்கிரஸ் சார்பில் காமராஜர் பஸ் நிறுத்தத்தில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கல்லுக்கூட்டம் பேரூர் காங்.சார்பில் உடை யார்விளை சந்திப்பில் தெருமுனை விளக்க கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் மனோகரசிங் தலைமையில் நடந்தது. மாநில பேச்சாளர் குமரி மகாதேவன்,பேரூராட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×