search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவுகள்"

    • சமையல் தயாரிப்பிற்கு பயன்படும் மூலப்பொருட்கள், காய்கறி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.
    • சமைத்த உணவுகள் உணவு மாதிரி எடுத்து வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமையலறையில் உள்ள சுகாதாரக்கேடு தொடர்பாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள சமையல் கூடங்களில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆய்வு நடத்தப்படுகிறது.

    அந்த வகையில், நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சமையல் கூடத்தை, நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.

    சமையலறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா ? உணவு பொருட்கள் இருப்பு வைக்கும் இடம், சமையல் தயாரிப்பிற்கு பயன்படும் மூலப்பொருட்கள், காய்கறி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. சமையலர் மற்றும் உதவியாளர்கள் தன்சுத்தத்தை பேணவும், தேவையான அளவு சமைத்த உணவுகள் உணவு மாதிரி எடுத்து வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    • பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.
    • 5 வகையான உணவுகள் வாழை இலை போட்டு பறிமாறப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரத்தில் சமுதாய வளைக்காப்பு விழா நடைப்பெற்றது.

    இதில் வேளாங்கண்ணி திருப்பூண்டி பூவைத்தேடி, கீழையூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100- க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்துக் கொண்டனர்.

    சாதி, மதம் கடந்து கலந்து கொண்டவர்களுக்கு தமிழ் பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.

    வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவி டயானா சர்மிளா , கீழையூர் வட்டார திட்ட அலுவலர் சித்ரா ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு ஆகியோர் கலந்துக் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை தட்டினை வழங்கினர்.

    மேலும் புளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், எழுமிச்சை சாதம், இனிப்பு பொங்கல் என ஐந்து வகை உணவு வகைகளை வாழை இலை போட்டு பந்தி பறிமாறப்பட்டது.

    கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்களை அங்கன் வாடி பணியாளர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு செய்து கொடுத்தனர்.

    • உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • சீடை, முறுக்கு, தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் கிருஷ்ணனுக்கு படைக்கப்பட்டது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அடுத்த வடக்குபட்டம் கிராமத்தில் உள்ள கோகுலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    விழாவை யொட்டி உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் ஏராளமான சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    முன்னதாக கிருஷ்ணனுக்கு பிடித்த சீடை, முறுக்கு, தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • அசைவ ஓட்டல் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர்.
    • உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006 சட்டப்பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப் பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் எம்.ஆர்.எஸ். கேட் அருகே உள்ள அசைவ ஓட்டல் ஒன்றில், இன்று சிலர் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட னர். அதில், பழைய கோழி இறைச்சி இருந்ததை கண்டு, உணவு பாதுகாப்புதுறை அதி காரிகளுக்கு தகவல் தெரிவித்த னர். தகவலறிந்த, உணவு பாது காப்பு துறை அதிகாரிகள், திண்டிவனம் எம்.ஆர்.எஸ். கேட் அருகே உள்ள அசைவ ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர். உணவு பாதுகாப்பு மாவட்ட நிய மன அலுவலர் டாக்டர். சுகந்ததன் தலைமை யில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வில், 10 கிலோ நிற மேற்றப்பட்ட கோழி இறைச்சி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு, அதை பறி முதல் செய்து அழித்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்ட கடைகளில் சோத னை நடத்தினார். சோதனை யில் பரோட்டா டிசைன் 32 கிலோ மற்றும் கார்பெண்ட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழ தார்கள் 150 கிலோ மற்றும் ப்ரூட் மிக்ஸர் ஜூஸ் 90 லிட்டர் போன்றவை கள் பறி முதல் செய்யப்பட்டு அழிக்கப் பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006 சட்டப்பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்கப் பட்டது. மேலும் 4 கடைகளுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப் பட்டது. இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடை பெறும் என உணவு பாது காப்புத்துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.

    • வளர்ப்பு நாயை குடும்பத்தில் ஒரு நபராக கருதி பராமரித்து வந்தனர்.
    • நாயின் படத்திற்கு தினமும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறோம்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). ஓவியர்.

    இவரது மனைவி கலைச்செல்வி (58). இவர்களுக்கு ராகமாலிகா என்கிற மகளும், மனோ என்கிற மகனும் உள்ளனர்.

    பன்னீர்செல்வத்தின் மகன் மனோவும் ஓவியராக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் நாய் ஒன்றை ஜிஞ்சு என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தனர்.

    இந்த வளர்ப்பு நாயை குடும்பத்தில் ஒரு நபராக கருதி பராமரித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் வளர்ப்பு நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது.

    இதனால் வீட்டில் இருந்த நபர் ஒருவரை இழந்து தவிக்கும் உணர்வில் பன்னீர்செல்வம் குடும்பமே துயரத்தில் மூழ்கினர்.

    பன்னீர்செல்வம் குடும்பத்தினர், வளர்ப்பு நாயின் உருவப்படத்தை வீட்டில் வைத்து தினமும் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இது குறித்து ஓவியர் பன்னீர்செல்வம் கூறுகையில், வளர்ப்பு நாயை, நாங்கள் வீட்டில் ஒரு நபராகவே வைத்து பராமரித்து வந்தோம். வேலை விஷயமாக வெளியூருக்கு செல்லும் போதொல்லாம் அந்த நாய் தான் வீட்டுக்கு பாதுகாப்பு.

    எங்கு சென்றாலும் உடன் அழைத்துச் செல்வோம்.

    ஒருமுறை வீட்டுக்குள் புகுந்த பெரிய பாம்பை ஜிஞ்சு மட்டும் தனியாக குறைத்து விரட்டியது. திடீரென உடல் நலக்குறைவால் வளர்ப்பு நாய் உயிரிழந்தது.

    இதனால் அதன் உருவப்படத்தை வீட்டில் மாட்டி வைத்து தினமும் மாலை அணிவித்து விளக்கேற்றி பிடித்த உணவுகளை படைத்து அஞ்சலி செலுத்தி வருகிறோம் என்றார்.

    • தர்பூசணி, கேரட், வாழைப்பழம், அன்னாசி பழம், இளநீர் உள்ளிட்ட வற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
    • நீர்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய், சுரைக்காய் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

    தாராபுரம் :

    வாட்டி வதைக்கும் வெயிலால் தினமும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது குறித்து சிறுநீரக மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:- வெய்யில் காலத்தில், சிறுநீரக கற்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். தண்ணீர் குறைந்தளவு குடிப்பதால், உடலில் நீர் வறட்சி ஏற்படுவதே இதற்கு காரணம்.அனைத்து காலங்களிலும், சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். மிகவும் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீரிழப்பு ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரிக் ஆசிட் அதிகளவு உள்ள பழங்களை உட்கொள்ளலாம். ஜூஸ் ஆக குடிக்காமல், நேரடியாக பழங்களாக உட்கொள்வது நல்லது.

    தர்பூசணி, கேரட், வாழைப்பழம், அன்னாசி பழம், இளநீர் உள்ளிட்ட வற்றையும் எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் போது, அதிக உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டி இருக்கும். எனவே அதைத் தவிர்க்கலாம்.

    மாமிச உணவுகளை வாரம் ஒரு முறை உட்கொள்ளலாம். கோழி இறைச்சி, மீன் உட்கொ ள்ளலாம். அனைத்து விதமான பேக்கரி உணவு, உப்பு அதிகம் இருக்கும் சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் தவிர்க்க வேண்டும்.

    சிறுநீரக கற்கள் ஏற்படுத்தும் ஒரு சில கீரைகள், முட்டைக்கோஸ், காலிபிளவர் ஆகியவற்றை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். உலர் பழங்களை குறைவாக எடுக்க வேண்டும்.பிளாக் டீ, காபி, கிரீன் டீ, ஆகியவற்றை தவிர்க்கலாம். சுடு தண்ணீர், குளிர்ந்த நீர் எடுத்துக் கொள்வதற்குபதில், சாதாரணதண்ணீர் குடிப்பது சிறந்தது.கார்பன், செயற்கை நிறமிகள் நிறைந்த குளிர்பா னங்களை, முற்றி லும் தவிர்க்க வே ண்டும். முக்கி யமாக மது அருந்துவது கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.உணவியல் நிபுணர்(டயட்டி சியன்) கவிதா கூறியதாவது:

    வெய்யில் காலத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய், சுரைக்காய் அதிகம்எடுத்துக் கொள்ளலாம். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள, தர்பூசணி, வெள்ளரிக்காய், பழங்கள், கம்மங்கூழ், கேப்பைக்கூழ் உட்கொள்ளலாம். இனிப்பு வகைகள், அதிக காரம் உள்ள உணவு, எண்ணெயில் பொறித்த உணவு, துரித உணவு, உப்பு அதிகம் உள்ள உணவு, காபி, டீ, செயற்கை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். கம்மங்கூழ், கேப்பைக்கூழ் ஆகியவற்றை, 200 மி.லி., அளவு எடுக்க வேண்டும். நீர் மோர் குடிக்க லாம். இவையனைத்துக்கும் மேல், தண்ணீர் குடிப்பதே சிறந்தது.செயற்கை குளிர்பானங்களில், சர்க்கரை அதிகம் இருப்ப தால், அவற்றால் எந்த பயனும் இல்லை. சர்க்கரை நோயாளிகள், நீர்ச்சத்து காய்கறி எடுத்துக் கொள்ள லாம்.இவ்வாறு அவர் கூறினார். 

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாராகின்றன.
    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, திருப்புல்லாணி, உச்சிப்புளி, தேவிபட்டினம் உள்பட பல்வேறு நகரங்களில் பெரும்பாலான உண வகங்கள், சாலையோர தள்ளு வண்டிகள், இறைச்சி விற்பனை கடைகளில் சுகாதாரம் கடைபிடிக்கப்படுவதில்லை. சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவை உண்பதால் பொது மக்களுக்கு நாள்பட்ட வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் தொடர்கின்றன.

    ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகங்கள் சுமார் 300க்கும் மேல் உள்ளன. இவற்றில் அசைவ சாப்பாடு, பிரியாணி என காலை, பகல், இரவு நேரங்களில் விற்பனை செய்யப் படுகின்றன. பெரும்பாலான உணவகங்கள் சுகாதார மற்ற நிலையில் உள்ளது.

    தண்ணீர் தொட்டி, உணவு தயாரிக்கும் இடங்கள் சுகாதாரமற்ற நிலை, விதிமுறைப்படி பாத்தி ரங்கள் கழுவப்படாதது, திறந்தவெளியில் உணவு பண்டங்கள், பயன் படுத்தப்பட்ட எண்ணைகள், காலாவதியான இறைச்சி என பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது.

    நகர் பகுதியில் மட்டும் அதிகம் இருந்த துரித உணவகங்கள் தற்போது பல்வேறு இடங்களில் அதிகரித்து உள்ளன. இவற்றை கண்காணிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை யினர் மற்றும் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் கண்துடைப்பு ஆய்வு பணிகளை பெயரளவில் மேற்கொண்டு வருகின்றனர்.

    ரோட்டோர திறந்த வெளிக்கடைகள் பாதுகாப்பு இல்லாமல் உணவுகளை வைத்து விற்பனை செய்வது தொடர்கிறது. உணவு பாதுகாப்புத்துறையினரின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டு வருவது சாமானிய பொதுமக்கள் மட்டுமே.

    சுகாதாரமற்ற உணவை சாப்பிடுவோருக்கு உபாதைகள் ஏற்படுவதை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • விஷ உணவுகள் தயாரித்து அவைகள் எலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைத்து எப்படி கட்டுப்படுத்துவது.
    • பறவை தாங்கிகளை வைத்தும் எவ்வாறு எலிகளை கட்டுப்படுத்தலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே, கோடங்குடி கிராமத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை அட்மா திட்டதின் கீழ் எலி கட்டுப்பாடு மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி நடைப்பெற்றது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கோடங்குடி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டதின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு எலி கட்டுப்பாடு மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமையில் நடைப்பெற்றது.

    இப்பயிற்சியில் எலிகளை கட்டுப்படுத்த எலி பொறிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் விஷ உணவுகள் தயாரித்து அவைகள் எலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைத்து எப்படி கட்டுப்படுத்துவது, ஆந்தை கூண்டு அமைத்தல் மற்றும் பறவை தாங்கிகளை வைத்தும் எவ்வாறு எலிகளை கட்டுப்படுத்தாலம் என்பது பற்றி பயிற்ச்சி அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சியில் விஷ உணவு தயாரிப்பது குறித்து செயல்விளக்கத்தை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ச.திருமுருகன் செய்து காண்பித்தார்.

    இப்பயிற்சியில் முன்னோடி விவசாயி சுந்தர் மற்றும் 40க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

    இப்பயிற்சியை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய், மதுமனா மற்றும் அட்மா திட்ட உழவர் நண்பர் முத்தமிழன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சியின் முடிவாக உதவி வேளாண்மை அலுவலர் ராஜகோபால் நன்றி கூறினார்.

    ×