என் மலர்tooltip icon

    இந்தியா

    தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி - 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகளில் இட்லி முதலிடம்!
    X

    'தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி' - 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகளில் இட்லி முதலிடம்!

    • தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் வகையில் ‘தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி’ என்ற பாடல் வடஇந்தியர்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது
    • திருவாதிரை களி சிவபெருமானுக்காக படைக்கப்படும் ஒரு பிரசாதமாகும்.

    கூகுள் தனது பயனர்களால் அதிகம் தேடப்படும் பொருட்கள், பெயர்கள் என அனைத்துவிதமான தேடல்களின் பட்டியலையும் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் அதிகம் தேடப்பட்ட A டூ Z அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் தென்னிந்திய உணவான இட்லி முதலிடத்தை பிடித்துள்ளது. முதல் பத்து இடங்களில் கொழுக்கட்டை, திருவாதிரை களி இடம்பிடித்துள்ளன. முதல் பத்து இடங்களை பிடித்த உணவுகள் குறித்து காண்போம்.

    இட்லி

    இந்த தேடலில் தென்னிந்தியாவின் முக்கிய உணவான இட்லி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வட இந்தியர்கள் என சொல்லலாம். காரணம் தேசியக் கல்விக்கொள்கை, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்புகள் எழுந்த சமயத்தில், இணையத்தில் முக்கியமாக இன்ஸ்டாவில் தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் வகையில் 'தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி' என்ற பாடல் வடஇந்தியர்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது. அப்போது அதிகம் இட்லி குறித்து தேடப்பட்டிருக்கலாம்.

    Porn star martini

    இரண்டாவது இடத்தில் Porn star martini உள்ளது. இது ஒரு காக்டெயில். வெண்ணிலா சுவையுள்ள Porn star martini ஷாட் கிளாஸ் ஷாம்பெயினுடன் சேர்க்கப்படுகிறது.

    உகாடிச்சே மோடக்

    உகாடிச்சே மோடக் என்பது வட இந்தியாவில் செய்யப்படும் கொழுக்கட்டை எனக்கூறலாம். விநாயகர் சதுர்த்தியின்போது இது அதிகம் தேடப்பட்டிருக்கும்.

    தேக்குவா (இனிப்பு பிஸ்கட்)

    4ம் இடத்தில் தேக்குவா (இனிப்பு பிஸ்கட்) உள்ளது. இது கஜூரியா, கஜூர் எனவும் அழைக்கப்படுகிறது. கோதுமை மாவில் வெல்லம், நெய், தேங்காய், ஏலக்காய், பெருஞ்சீரகம் போன்ற பொருட்கள் சேர்த்து செய்யப்படுகிறது.

    உகாதி பச்சடி

    உகாதி பச்சடி என்பது உகாதி பண்டிகையின் போது தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் செய்யும் ஒரு சிறப்பு உணவாகும். இது அறுசுவைகளின் கலவையாகும்.

    பீட்ரூட் கஞ்சி

    6ம் இடத்தில் பீட்ரூட் கஞ்சி உள்ளது. பீட்ரூட்டுடன் கேரட் கடுகு மற்றும் தேவையான மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு உணவு.

    திருவாதிரை

    திருவாதிரை களி சிவபெருமானுக்காக படைக்கப்படும் ஒரு பிரசாதமாகும். இது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய் மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது.

    கொழுக்கட்டை

    10ம் இடத்தில் கொழுக்கட்டை உள்ளது. கொழுக்கட்டையை நாம் அனைவரும் அறிவோம். விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு படைக்க செய்யப்படும் முக்கிய உணவாகும்.

    Next Story
    ×