search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரார்த்தனை"

    • நடிகர் அஜித் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றம்.
    • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.

    மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அஜித் சென்னை திரும்பினார்.

    இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் காதுக்கும் மூளைக்கும் இடையேயான நரம்பில் சிறிய கட்டி இருந்தது. அதனை கண்டறிந்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரிசெய்து அகற்றினார்கள்.

    பின்னர், நடிகர் அஜித் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் அஜித்குமார் விரைவில் குணம் பெற வேண்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    • நள்ளிரவு 11.59 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இயேசு கிறிஸ்து பிறப்பது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழை வெள்ளப்பெருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் விழாக்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும்.

    ஆனால் கடந்த 17, 18-ந் தேதிகளில் இந்த மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போதும் சில இடங்களில் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் வழக்கமான உற்சாகமின்றி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை களையிழந்து காணப்பட்டது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தேவா லயங்களில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் ஆராதனை, சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதில் பிஷப்கள், பங்கு தந்தையர்கள், இறைமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

    கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்று இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சி.எஸ்.ஐ. ஆலயங்களில் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடு நடந்தது.

    தூத்துக்குடியில் புகழ் பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நேற்று இரவு நடைபெற்றது. இதில் பிஷப் குமாரராஜா சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது.

    இதேபோல் சின்னக்கோவில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதேபோல் பேட்ரிக் தேவாலயம், பேதுரு ஆலயம், புளியம்பட்டி அந்தோணியார் ஆலயம், சொக்கன்குடியிருப்பு மணல் மாதா ஆலயம் மற்றும் அமலி நகர், மணப்பாடு, நாசரேத், சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் இன்று அதிகாலை கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.

    பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடை பெற்றது. நள்ளிரவு 11.59 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இயேசு கிறிஸ்து பிறப்பது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது விண்ணில் இருந்து நட்சத்திரம் கீழே இறங்கி வருவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து பங்கு தந்தையர் குழந்தை இயேசுவின் உருவத்தை ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைத்தனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    தேவாலயங்களில் நேற்று இரவும், இன்று அதிகாலையும் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழை வெள்ளப்பெருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தனர்.

    • ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.
    • கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி, கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் மற்றும் பங்கு தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேராலயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.

    சரியாக 12 மணிக்கு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர், தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றப்பட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.

    இதனை தொடர்ந்து மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்–கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கேக், இனிப்பு வழங்கப்பட்டது. தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் திருப்பலி நடத்தப்பட்டது.


    கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்ட குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சிறப்பு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பு, தங்கும் வசதி போன்றவற்றை பேராலய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்துள்ளது.

    இன்றும் ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக காணப்பட்டது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பர்ண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • காலையிலும், மாலையிலும் இறைவனை துதிக்க வேண்டும்.
    • அருட்பாக்கியங்களை பிரார்த்தனை மூலம் இறைவனிடம் பெற வேண்டும்.

    காலையிலும், மாலையிலும் இறைவனை துதிக்க வேண்டும்; இறைவனை துதித்த பிறகு காலையிலும், மாலையிலும் நாம் பெற வேண்டிய 6 அருட்பாக்கியங்களை பிரார்த்தனையின் மூலம் இறைவனிடம் கேட்டுப்பெற வேண்டும். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    `இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் மாலைப்பொழுதிலும், நீங்கள் காலைப் பொழுதிலும் இறைவனை துதித்துக் கொண்டிருங்கள்'. (திருக்குர்ஆன் 30:17)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் காலைப்பொழுதை அடையும்போது, (இறைவனின் கிருபையால்) நாம் காலைப்பொழுதை அடைந்து விட்டோம். காலைப்பொழுது ஆட்சியும் அல்லாஹ்விற்கே. அவன் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து, வளர்த்துப் பரிபக்குவப்படுத்துபவன். இறைவா, நான் உன்னிடம் இந்த நாளின் நன்மைகள் யாவையும் வேண்டுகிறேன். மேலும், இந்த நாளின் வெற்றியையும் வேண்டுகிறேன்.

    மேலும், இந்த நாளின் உதவியையும் வேண்டுகிறேன். மேலும், இந்த நாளின் அபிவிருத்தியையும் வேண்டுகிறேன். மேலும் இந்தநாளின் நேர்வழியையும் வேண்டுகிறேன்' என அவர் பிரார்த்திக்கட்டும். மேலும், 'இறைவா! இந்த நாளில் ஏற்படும் தீங்கை விட்டும், இந்த நாளுக்கு பிறகு வரும் தீங்கை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும், அவர் மாலைப்பொழுதை அடையும் போதும் இவ்வாறே பிரார்த்திக்கட்டும்'. (அறிவிப்பாளர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி), நூல்:அபூதாவூத்)

    ஒருவர் மாலைப்பொழுதை அடையும் போது, அவர் தமது மாலை நேரப் பிரார்த்தனையில், காலை என்பதற்குப் பதிலாக மாலை என்ற வார்த்தையை மொழிந்து கொள்ள வேண்டும்.

    `இறைவனின் கிருபையால் நாம் மாலைப்பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சியும் அல்லாஹ்விற்கே உரியது. அவன் அகிலங்களைப் படைத்து பராமரிப்பவன். இறைவா! நான் உன்னிடம் இந்த இரவின் நன்மைகள் யாவையும், இரவின் வெற்றியையும், இரவின் உதவியையும், இரவின் பிரகாசத்தையும், இரவின் அபிவிருத்தியையும், இரவின் நேர்வழியையும் வேண்டு கிறேன்.

    மேலும், இறைவா! இந்த இரவில் ஏற்படும் தீங்கை விட்டும், இந்த இரவுக்கு பின்னால் வரும் தீங்கை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்' என பிரார்த்திக்க வேண்டும்.

    இறைநம்பிக்கையாளரின் காலைப் பொழுதும், மாலைப் பொழுதும் நன்றாக அமைய வேண்டுமானால் அவர் இவ்வாறு இறைவனிடம் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் பிரார்த்திக்க வேண்டும்.

    வெற்றி: வெற்றி என்பது நமது நோக்கங்கள், நமது எண்ணங்கள், நமது எதிர்பார்ப்புகள் இவற்றுக்கு கிடைக்கக்கூடிய வெற்றியாகும்.

    வெற்றியும் - தோல்வியும் வாழ்வின் இருபக்கங்கள். எனினும் வெற்றி என்பது இனிமையானது.

    "நீங்கள் வெற்றி அடையும் பொருட்டு இறைவனை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்" என்று திருக்குர்ஆன் (2:189) குறிப்பிடுகிறது.

    உதவி: உதவி என்பது எதிரிகளுக்கு எதிராக நமக்கு சாதகமாக அமைந்து விடுவது. அநியாயக்காரன், அட்டூழியம் புரிபவன், அடக்குமுறை செலுத்துபவன், ஆதிக்க வெறியுடன் நடப்பவன், வரம்பு மீறி நடப்பவன் போன்றோருக்கு எதிராக நமக்கு இறைவனின் புறத்திலிருந்து கிடைக்கும் உதவி என்பது எதிரியின் சூழ்ச்சியை விட்டும், எதிரியின் சதியை விட்டும் நம்மைக் காப்பாற்றும். இதையே, "இறைவா!

    உன்னையே நாங்கள் வணங்கு கிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்" என்று திருக்குர்ஆன் (1:5) கூறுகின்றது.

    பிரகாசம்: நமது அன்றாட வாழ்வு பிரகாசமாக, ஒளிமயமாக அமைய வேண்டுமானால் அந்நாளின் செயல்பாடும், அந்நாளின் அறிவும் சீராக அமைய வேண்டும்.

    "அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்பு வோருக்கு அல்லாஹ் அதன் மூலம் சாந்திக்கான வழி களைக் காண்பிக்கின்றான்.

    மேலும், அவன் தனது கட்டளையைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான்" என்று திருக்குர்ஆன் (5:16) குறிப்பிடுகின்றது.

    அபிவிருத்தி: ஒவ்வொரு நாளும் நமது வாழ்வாதாரம் அபிவிருத்தியாக அமைந்துவிட்டால், நாம் யாரிடமும் கைகட்டி நிற்க வேண்டியதில்லை. அபிவிருத்தி என்பது பொருள் குறைவாக இருப்பினும் அதனால் ஏற்படும் பயன் அளப்பெரியதாக இருக்கும். ஒரு பொருளின் மீது நன்மை இருப்பது, அந்த நன்மை உறுதியாகவும், நிரந்தரமாகவும் இருப்பதாகும்.

    நேர்வழி: நேரான பாதையில் வாழ்க்கைப்பயணத்தை தொடர்வது, மனோ இச்சைகளை விட்டுவிடுவது பாக்கியமுள்ளதாகும். மேலும், இறைவனிடம் அனைத்து விதமான தீமைகள், தீங்குகள், சோதனைகள், குழப்பங்கள், நோய் நொடிகள், மனஅழுத்தங்கள், கவலைகள், கஷ்டங்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாவல் தேடி, அவற்றிலிருந்து விடுதலை கிடைத்தால் அந்நாளும் என்னாளும் பொன்னாளாகும்.

    இதையே திருக்குர்ஆன் (2:5) "இவர்கள் தான் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்" என்று குறிப்பிடுகிறது.

    நாமும் இறைவனின் வழியில் தினமும் காலையிலும், மாலையிலும் நடந்து, முறையாக இறைவனை வழிபட்டு, நன்மைகளைச்செய்து இறைவனின் அருட்கொடைகளை பெறுவோம்.

    • காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
    • ஆன்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    தஞ்சாவூர்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

    இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது

    இந்த தாக்குதல்களால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களும் , குழந்தைகளும் உயிரிழந்து வருகின்றனர்.

    சமீபத்தில் காஸாவில் உள்ள மருத்துவம னையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500க்கும் மேற்பட்டவர்கள் பலியானது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

    இதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் போருக்கு எதிரான குரல்கள் ஒலித்து வருகின்றன.

    பிரதமர் மோடி , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே அமைதி திரும்பவும் போரில் உயிர்நீத்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் காயம டைந்தவர்கள் விரைவில் நலம் பெறவும் உலகெங்கும் மனிதம் தழைக்கவும் தஞ்சை நகர பொதுமக்கள் அமைதி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர் .

    தஞ்சை ரெயிலடி பகுதியில் ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் தஞ்சாவூர் நகர பொதுமக்கள் சார்பில் 50 பெண்கள் இந்த கூட்டு பிரார்த்தனை நிகழ்வில் ஈடுபட்டனர்.

    போரில் இறந்தவர்களின் புகைப்படத்துக்கு மலர் தூவி அவர்களின் ஆன்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் இந்த போரினால் காயமடைந்தவர்கள், உடமைகளை இழந்தவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பவும் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திரும்பவும் கூட்டு அமைதி பிரார்த்தனை செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • இன்று ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது.
    • ஆதித்யா விண்கலம் வெற்றியடைய வேண்டி பிரார்த்தனைகளை செய்தனர்.

    கடலூர்:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனை ஆய்வு செய்ய சந்திரயான் லேண்டர் விண்கலத்தை அனுப்பியதை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய முடிவு செய்து இதற்காக 'ஆதித்யா- எல்-1' என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஷதீஷ் தவான் விண்வெளி ஆய்வுக்கூட மையத்தில் இருந்து இன்று ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது.

    இதற்கான 24 மணிநேர 'கவுண்ட்டவுன்' நேற்று 11.50 மணிக்கு தொடங்கியது. இதனை யடுத்து இந்தியா முழுவதும் ஆதித்யா வெற்றியடைய வேண்டி பல்வேறு பிரார்த்த னைகளை மக்கள் செய்து வரும் நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னா ர்கோவில் அருகே உள்ள நாட்டார்மங்கலம் ராஜீவ் காந்தி தேசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆதித்யா விண்கலம் வெற்றியடைய வேண்டி பிரார்த்தனைகளை செய்தனர். மேலும் இந்த பள்ளியின் தாளாளர் சுதா மணிரத்னம் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு மேலும் இந்தியா பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டி கோவிலில் வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தனர்.

    • நிலவில் தரையிறங்க உசிலம்பட்டி பள்ளி மாணவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
    • ஏற்பாடு–களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் கள் செய்திருந்தனர்.

    உசிலம்பட்டி

    நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-3 விண்கலம் அனுப்பப்பட்டது. இதன் அடுத்தடுத்த நகர்வு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு பெரும் புகழை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது உலகமே உற்றுநோக்கி காத் திருக்கும் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண் டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.

    இந்த திட்டத்தின் வெற்றியை இந்தியாவின் அனைத்து மக்களும் பெருமையாக கருதும் நிலையில் இந்த திட்டம் வெற்றியடைய அனைவரும் பிராத்தனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம் பட்டி தனியார் தொடக்கப் பள்ளியில் அப்துல் கலாம் கண்ட கன–வான சந்திரயான் திட்டம் இன்று வெற்றியடைய உள் ளதை நினைவு கூறும் விதமாக அப்துல் கலாம் வேடமணிந்த மாணவன் பேசினான்.

    அப்போது அவன், என் னுடைய கனவு திட்டம் இன்று நிறைவேற உள்ளது, மாணவர்களும் கனவு காணுங்கள், எனது சந்திராயன் திட்டம் வெற்றியடைய நானும் பிராத்திக்கிறேன், மாணவ-மாணவிகளான நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டுக் கொள்ள பள்ளியில் பயிலும் சுமார் 600-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் கள் செய்தி–ருந்தனர்.

    • மணிப்பூரில், அமைதி நிலவ வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    • கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கூறைநாடு புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தலத்தில் மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி அமைதி பேரணி நடைபெற்றது. பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையில் நடைபெற்ற பேரணியானது புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்தது.

    தொடர்ந்து ஆலய வளாகத்தில் மணிப்பூரில் பொது அமைதி நிலவிட வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடு மற்றும் திருப்பலி நடை பெற்றது.

    பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைகளில் மெழுகு வர்திரி ஏந்தி அமைதியாக பேரணியில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜி நலம் பெற வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது
    • மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது

    கரூர்,

    அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம் பெற வேண்டி அவரது ஆதரவாளர்கள் நாள்தோறும் பூஜைகள் செய்வது, நேர்த்தி கடன் செலுத்துவது என பல வேண்டுதல்களை செய்து வருகின்றனர்.அந்த வரிசையில் இன்று மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பரணி பால்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. யாகத்தை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதில் அறங்காவலர் குழுவினருடன், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மண்டல தலைவர், கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். மேலும் நெரூர் சிவன் கோவிலில் மாவட்ட துணை செயலாளர் எம்.எஸ்.கே. கருணாநிதி தலைமையில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • செந்தில் பாலாஜி உடல் நலம் பெற வேண்டி தி.மு.க.வினர் மொட்டையடித்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்
    • பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது

    கருர், 

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இல்லங்கள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13-ந்தேதி விசாரணை நடத்தினர். இறுதியில் அவரை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.இதையடுத்து அவரை விசாரணைக்கு அழைத்து செல்வதற்காக கெண்டு வந்த காரில் சென்னை ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தியதில் இருதய ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால் அவருக்கு அடுத்தக்கட்டமாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்து இருந்தனர்.அந்த சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்வதற்கு அனுமதி கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பினர் கோர்ட்டை நாடி இருந்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில் அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.இந்த உத்தரவை தெடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று இரவு சென்னை ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கரூர் தேர்வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் மாநகராட்சி மண்டல தலைவரும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சக்திவேல், கவுன்சிலர் பூபதி, மத்திய நகர இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, மத்திய நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுபாஷ் ஆகியோர் முடி காணிக்கை செலுத்தினர்.மேலும், கோவில் வளாகத்தை சுற்றி அங்க பிரதட்சணம் மேற்கொண்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

    • 365 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
    • வருகிற 30-ந்தேதி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள கொங்கணேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவரை கொங்கண சித்தர் பிரதிஷ்டை செய்தார் என்கிறது தலபுராணம். இங்கு கொங்கண சித்தருக்கு என தனி சன்னதி உள்ளது.

    அதன் அருகில் சப்தரிஷிகளும் உள்ளனர். இங்கு 11 அடுக்கு தீபமேடையில் 365 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பிரார்த்தனை களையும் நிறைவேறும் என்பது ஐதீகம். தலவிருட்சமாக மகிழ மரம் இருப்பது தனிச்சிறப்பு.

    இக்கோவிலில் பல்லாண்டுகளாக வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பாக கொண்டாட ப்படுகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இன்று காலை 9 மணிக்கு வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக நேற்று மாலை பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. இவ்விழா வருகின்ற ஜுன் 3-ம்தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலை 10 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகமும் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் 7 மணிக்கு சிறப்பு அலங்காரமும் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.

    முக்கிய நிகழ்வாக நாளை சூரிய பிரபை, 26-ம்தேதி சந்திரபிரபை, 27-ம்தேதி பூத வாகனம், 28-ம்தேதி திருக்கல்யாணம், 29-ம்தேதி யானை வாகனம், 30-ம்தேதி ரிஷப வாகனம் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, 31-ம் தேதி கைலாச வாகனம்,
    ஜுன்1-ம்தேதி காலை திருத்தேர் , 2-ம்தேதி காலை தீர்த்தவாரி மாலை குதிரை வாகனம், 3-ம்தேதி விடையாற்றி நடக்கிறது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா , கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு திருச்சி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது
    • இயேசு கிறிஸ்து சிலு–வைப்பாடுகள் அனுபவித்து மரித்து உயிரோடு எழுந்த காலத்தை உலகம் முழு–வதும் மக்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பி–டிப்பார்கள்.

    திருச்சி:

    சுமார் 2,000 ஆண்டுக–ளுக்கு முன்பு பாவத்திலிருந்து மனுக்குலத்தை மீட்டு மன்னித்து ரட்சிக்க வந்த இறைமகன் இயேசு கிறிஸ் துவை யூதர்கள் அவர் மீது பொய் குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்து கொன்றனர். 3 நாட்கள் கல்ல–றையில் வைக்கப்பட்ட அவர் 3-ம் நாள் கல்லறை–யிலிருந்து உயிர்ப்பித்து எழுந்தார்.இயேசு கிறிஸ்து சிலு–வைப்பாடுகள் அனுபவித்து மரித்து உயிரோடு எழுந்த காலத்தை உலகம் முழு–வதும் மக்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பி–டிப்பார்கள்.

    அதன் பிறகு இயேசு சிலுவை–யில் அறையபட்ட வெள் ளிக்கிழமையை புனித வெள்ளியாகவும், அவர் கல்ல–றையிலிருந்து உயி–ரோடு எழுந்த நாளான ஞாயிற்றுகிழமையை ஈஸ்டர் திருநாளாகவும் கடை–பிடித்து வருகிறார்கள்.இன்று ஞாயிற்றுக்கி–ழமை ஈஸ்டர் பண்டிகையை–யொட்டி நள்ளிரவு முதல் திருச்சி மாவட்டம் முழு–வதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து–கொண்டு இயேசு உயிர்த்தெ–ழுந்ததை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

    சிறப்பு பிரார்த்தனையிலும் பங் கேற்றனர்.திருச்சி பாலக்கரை பசிலிக்கா, மேலப்புதூர் தூய மரியன்னை ஆலயம், ஜோசப் சர்ச், புத்தூர் பாத்திமா ஆலயம், கருமண்ட–பம் மாற்கு ஆலயம், குணமளிக்கும் மாதா ஆலயம், ஆரோக்கிய மாதா ஆலயம், அமலா ஆசிரமம் மற்றும் திருவெறும்பூர், மணப்பாறை, துவாக்குடி, துறையூர், லால்குடி, முசிறி, மணிகண்டம் என மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள தேவா–லயங்களிலும் ஆயிரக்க–ணக்கான மக்கள் பிரார்த்த–னையில் கலந்து கொண்டு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர்.

    பல்வேறு கிறிஸ்தவ தேவால–யங்களில் இயேசு மீண்டும் உயிர்த்தெ–ழுந்த காட்சி தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தது.இயேசு உயிர்த்தெழுந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் உற்சாகமாக வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு இனிப்புகள் வழங்கினர். இயேசு உயிர்த்தெழுந்த நேரம் வந்ததும் வானில் வெடி வெடித்து மகிழ்ந்த–னர். இயேசு கிறிஸ்து இன்றும் உயிரோடு ஜீவிக்கி–றார். அவர் அவரை ஏற்றுக்கொண்டு மனம்தி–ரும்பி வரும் பாவிகள் அனை–வரையும் மன்னித்து புது–வாழ்வு அளிக்க வல்ல–வராக இருக்கிறார்.

    எனவே அனைவரும் அவரை ஏற்றுக்கொண்டு பாவம் செய்யாமல், பிற–ருக்கு உதவி செய்து இயேசு கிறிஸ்து கூறிய தத்து–வங்களை கடைபிடித்து வாழ வேண்டும். அப்போது இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் பிறப்பார். நமக்கு பல ஆசீர்வாதங்களை தருவார், அற்புதங்களை நடத்துவார் என ஈஸ்டர் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.திருச்சியில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து–கொண்டு ஒருவருக்கொ–ருவர் வாழ்த்துக்களை தெரி–வித்துக்கொண்டனர்.


    ×