search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித்"

    • சென்னையில் உள்ள ரிசார்ட்டில் நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து வழங்கி கொண்டாடினர்
    • அவர்களுக்கு பிடித்த 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு' என்ற பாடல் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது

    நடிகர் அஜித், நடிகை ஷாலினி இருவரும் முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் அமர்க்களம். இயக்குனர் சரண் இப்படத்தை இயக்கினார்.

    இந்நிலையில் பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அஜித் அவரை பாசத்துடன் பார்த்துக்கொண்டார். இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் உருவானது.

    மேலும், பட ஷூட்டிங் நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் அதிகரித்தது. இதனையடுத்து, கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

    தமிழ் பட டிரெண்டிங் ஹீரோயினாக இருந்து வந்த ஷாலினி நடித்த படம் அனைத்தும் 'ஹிட்' ஆகியது. அவருக்கு பட வாய்ப்புகள் வழங்க ஏராளமான தயாரிப்பாளர்கள் காத்து கிடந்தனர். ஆனால், ஷாலினி இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து சினிமாவில் இருந்தும் விலகினார்.



     

    அதன் பின்னர் குடும்ப வாழ்க்கையில் கவனத்தை செலுத்தினார். ஷாலினிக்கு கடந்த 2008-ம் ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அனோஷ்கா என பெயரிட்டனர். இதையடுத்து 7 ஆண்டுகள் கழித்து அஜித் - ஷாலினி ஜோடிக்கு 2-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'ஆத்விக்' என பெயரிட்டனர். 

    இந்நிலையில், தற்போது அஜித்- ஷாலினிக்கு காதல் திருமணமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி சென்னையில் உள்ள ரிசார்ட்டில் நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து வழங்கி கொண்டாடினர்.

    மேலும், அஜித் - ஷாலினி ஜோடியாக கேக் வெட்டி தங்களது 25-வது ஆண்டு காதல் திருமணத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அவர்களுக்கு பிடித்த 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு' என்ற பாடல் ஒலிப்பது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்
    • தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர்

    பிரபல நடிகர் அஜித் - திரிஷா நடிக்கும் புதிய படம் விடாமுயற்சி. இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    இந்நிலையில்அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அப்படத்தின் டைட்டில் இப்பொழுது அதிகாரப்பூர்வமாக படக்குழுவுனரிடம் இருந்து வெளியிடப் பட்டுள்ளது. படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிட்டுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் சமூக வலைத்தளங்களில் படத்தின் டைட்டில் போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர்.




     


    • அஜித்தின் தீவிர ரசிகரான 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன், ஏகே-63 படத்தை இயக்குகிறார்
    • ஏகே-63 படம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.அஜித்தின் 62 - வது பிரம்மாண்ட படமாக இது உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.

    இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே-63 படம் குறித்த புது அப்டேட் இன்று இணையதளத்தில் வெளியானது. அஜித்தின் தீவிர ரசிகரான 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன், ஏகே-63 படத்தை இயக்குகிறார்.

    'விடுதலை: படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்' பட நிறுவனம் சார்பில் எல்ரெட்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.ஏகே-63 படம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.




     


    மேலும் இந்த படம் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.அஜித்தின் ஏகே-63 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இணையதளத்தில் வெளியானதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • 'விடாமுயற்சி' படத்தின் 'பர்ஸ்ட் லுக்' ரிலீஸ் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது
    • முன்அறிவிப்பு இல்லாமல் தற்போது 'விடாமுயற்சி' படக்குழுவும் அதே பாணியை கடைபிடிக்கும் என நம்பப்படுகிறது.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனிஇயக்குகிறார்.அஜித்தின் 62 - வது பிரம்மாண்ட படமாக இது உருவாகுகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ராவ் நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.

    இந்நிலையில் அஜர்பைஜானில் வானிலை மோசம் அடைந்ததால் அங்கு 'ஷூட்டிங்' நடத்த முடியாத சூழல் உருவானது. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு படக்குழு கடந்த ஜனவரி மாதம் சென்னை திரும்பியது. அதன்பின்னர் ஒரு மாதத்திற்கு மேலாக ' விடாமுயற்சி' பட ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.

    இந்நிலையில் நடிகர் அஜித் கடந்த வாரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால் படப்பிடிப்பு தொடங்குவதில் மேலும் தாமதம் ஆகியது. மேலும் 'விடாமுயற்சி' படம் தொடர்பான 'அப்டேட்' எதுவும் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது 'விடாமுயற்சி' படத்தின் 'பர்ஸ்ட் லுக்' ரிலீஸ் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. நாளை (14-ந் தேதி) ஆச்சர்யப்படதக்க வகையில் 'பர்ஸ்ட் லுக்' வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை', 'துணிவு' உள்ளிட்ட படங்களின் அப்டேட்டுகள் எவ்வித முன்அறிவிப்பு இல்லாமல் வெளியிடப்பட்டதால், தற்போது 'விடாமுயற்சி' படக்குழுவும் அதே பாணியை கடைபிடிக்கும் என நம்பப்படுகிறது.

    • சமீபத்தில் நடிகர் கமலஹாசன் தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார்
    • நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனை 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

    நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனை 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சங்கம் தங்களுக்கான கட்டுமான பணியை தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் இதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் சில பிரச்சனையினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன.

    சமீபத்தில் நடிகர் கமலஹாசன் தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார். நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகர் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முறுகன் அந்த தொகையை பெற்றுக் கொண்டனர்.

    தற்போது தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் விஜய் அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நடிகர் சங்க வளர்ச்சிக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    • நடிகர் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை இயக்கியதில் ஹெச்.வினோத் ஒருவர்
    • இந்தியில் அமிதா பச்சன் நடிப்பில் வெளிவந்த ’பிங்க்’படத்தை தமிழில் நடிகர் அஜித்தை வைத்து இயக்கினார் வினோத்.

    நடிகர் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை இயக்கியதில் ஹெச்.வினோத் ஒருவர். வினோத் 2014 ல் வெளியான சதுரங்க வேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சதுரங்க வேட்டை திரைப்படம் மக்களால் கொண்டாடப்பட்டது. 2014-ல் வெளியான திரைப்படங்களில் 'சதுரங்க வேட்டை' ஒரு புது விதமான கதை பாணியுடன் வெளிவந்தது. சூதாட்டம், மக்களை எப்படி நூதன முறையில் ஏமாற்றுகிறார்கள் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.

    இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. பின் 2017-ல் கார்த்தியை வைத்து 'தீரன் அதிகாரம் ஒன்று'படத்தை இயக்கினார். கார்த்தியின் திரையுலக பயணத்தில் பேர் சொல்லும் படமாக இது அமைந்தது. கார்த்தி ஒரு போலீஸ் அதிகாரியாக திறம்பட நடித்திருப்பார்.

    இந்தியில் அமிதா பச்சன் நடிப்பில் வெளிவந்த 'பிங்க்'படத்தை தமிழில் நடிகர் அஜித்தை வைத்து இயக்கினார் வினோத்.

    2022-ஆம் ஆண்டு அஜித்-தை வைத்து வலிமை படத்தை இயக்கினார். 2023-ல் மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கினார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன் போன்ற பலர் நடித்திருந்தனர். போனி கபூர் இப்படத்தை தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்தார். வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் அள்ளியது. அஜித் ரசிகர்களால் பெருமளவு கொண்டாடப்பட்டது. இந்நிலையில் வினோத் அடுத்ததாக நடிகர் விஜயை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவர் பங்குபெற்ற நேர்காணலில் "என்னோட முதல் படத்த தவிர நான் யாரிடமும் முழு கதையை சொன்னது கிடையாது, விஜய் சாருக்கு கதை சொல்லும்போது மட்டும்தான் முழு கதைய படிச்சு காட்டினேன்"என்று அவர் கூறியுள்ளார். இதை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார்
    • அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அஜித் சென்னை திரும்பினார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் அவரது முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் சிறிய வீக்கம் இருந்தது. அதனை கண்டறிந்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரிசெய்து அகற்றினார்கள். பின்னர் சிகிச்சை முடிந்து இன்று காலை நடிகர் அஜித்குமார் வீடு திரும்பினார்.

    இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்றைய தினமே அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
    • காதுக்கு கீழ் பகுதியில் இருந்த கட்டி கண்டறியப்பட்டு அரை மணிநேரத்தில் நவீன சிகிச்கையின் மூலம் டாக்டர்கள் அகற்றினர்.

    நடிகர் அஜித்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது காதுக்கு கீழ் பகுதியில் இருந்த கட்டி கண்டறியப்பட்டு அரை மணிநேரத்தில் நவீன சிகிச்கையின் மூலம் டாக்டர்கள் அகற்றினர்.

    இதையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அஜித் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ஆகியோர் தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில், நடிகர் அஜித் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

    மேலும், அடுத்த வாரம் வெளிநாட்டில் நடக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு நடிகர் அஜித் செல்ல உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

    • காதுக்கு கீழ் பகுதியில் இருந்த வீக்கம் கண்டறியப்பட்டு அரை மணிநேரத்தில் நவீன சிகிச்கையின் மூலம் டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.
    • நடிகர் அஜித் இன்று மாலை அல்லது நாளை வீடு திரும்புவார் என அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியானது.

    சென்னை :

    நடிகர் அஜித்குமார் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது காதுக்கு கீழ் பகுதியில் இருந்த வீக்கம் கண்டறியப்பட்டு அரை மணிநேரத்தில் நவீன சிகிச்கையின் மூலம் டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.

    இதையடுத்து சாதாரண வார்டில் உள்ள நடிகர் அஜித் இன்று மாலை அல்லது நாளை வீடு திரும்புவார் என அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியானது.

    இந்நிலையில் நடிகர் அஜித்குமார் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • அஜித் முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் சிறிய வீக்கம் இருந்தது.
    • சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டார்.

    மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அஜித் சென்னை திரும்பினார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் அவரது முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் சிறிய வீக்கம் இருந்தது. அதனை கண்டறிந்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரிசெய்து அகற்றினார்கள்.

    சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டார். இதனையடுத்து நடிகர் அஜித் இன்று மாலை வீடு திரும்புவார் என்று அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    • படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
    • விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்த முடிந்துள்ளது.

    'விடாமுயற்சி' படத்தில் கதாநாயகனாக அஜித் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து திரிஷா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்த முடிந்த நிலையில், அடுத்து ஜார்ஜியாவில் 2-வது கட்ட படப்பிடிப்பு என தகவல் வெளியானது.

    இந்நிலையில், நடிகர் அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை வீடு திரும்புவார் என்றும் அஜித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • 24 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு 5.1 சிஸ்டத்தில் ‘வாலி’ படம் மீண்டும் திரைக்கு வந்துள்ளது.
    • புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள திரையரங்கில் ‘வாலி’ திரைப்படம் வெளியானது.

    புதுச்சேரி:

    நடிகர் அஜித் நடித்த 'வாலி' திரைப்படம் 1999-ம் ஆண்டு வெளிவந்தது.

    அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. எஸ்.ஜே.சூர்யாவுக்கும் அஜித்துக்கும் பெரிய திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது.

    இந்நிலையில் 24 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு 5.1 சிஸ்டத்தில் 'வாலி' படம் மீண்டும் திரைக்கு வந்துள்ளது.

    புதுச்சேரியில் 'வாலி' திரைப்படம் மீண்டும் வெளியாகி உள்ளது.

    புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள திரையரங்கில் 'வாலி' திரைப்படம் வெளியானது. அந்த திரையரங்கம் முன்பு நடிகர் அஜித் ரசிகர்கள் திரண்டர். அங்கு பட்டாசு வெடித்து அஜித் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர்.



    தொடர்ந்து விடாமுயற்சி படம் டைட்டில் வெளியாகி 300 நாள் ஆச்சு. படத்தோட அப்டேட் என்ன ஆச்சு என்ற பேனரை பிடித்தனர்.

    அதில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்காவை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தந்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என எழுதப்பட்டிருந்தது.

    ×