search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அஜித்தின் விடாமுயற்சி பட பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு
    X

    அஜித்தின் 'விடாமுயற்சி' பட 'பர்ஸ்ட் லுக்' நாளை வெளியீடு

    • 'விடாமுயற்சி' படத்தின் 'பர்ஸ்ட் லுக்' ரிலீஸ் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது
    • முன்அறிவிப்பு இல்லாமல் தற்போது 'விடாமுயற்சி' படக்குழுவும் அதே பாணியை கடைபிடிக்கும் என நம்பப்படுகிறது.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனிஇயக்குகிறார்.அஜித்தின் 62 - வது பிரம்மாண்ட படமாக இது உருவாகுகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ராவ் நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.

    இந்நிலையில் அஜர்பைஜானில் வானிலை மோசம் அடைந்ததால் அங்கு 'ஷூட்டிங்' நடத்த முடியாத சூழல் உருவானது. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு படக்குழு கடந்த ஜனவரி மாதம் சென்னை திரும்பியது. அதன்பின்னர் ஒரு மாதத்திற்கு மேலாக ' விடாமுயற்சி' பட ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.

    இந்நிலையில் நடிகர் அஜித் கடந்த வாரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால் படப்பிடிப்பு தொடங்குவதில் மேலும் தாமதம் ஆகியது. மேலும் 'விடாமுயற்சி' படம் தொடர்பான 'அப்டேட்' எதுவும் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது 'விடாமுயற்சி' படத்தின் 'பர்ஸ்ட் லுக்' ரிலீஸ் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. நாளை (14-ந் தேதி) ஆச்சர்யப்படதக்க வகையில் 'பர்ஸ்ட் லுக்' வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை', 'துணிவு' உள்ளிட்ட படங்களின் அப்டேட்டுகள் எவ்வித முன்அறிவிப்பு இல்லாமல் வெளியிடப்பட்டதால், தற்போது 'விடாமுயற்சி' படக்குழுவும் அதே பாணியை கடைபிடிக்கும் என நம்பப்படுகிறது.

    Next Story
    ×