என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
நடிகர் சங்க கட்டடத்துக்கு ரூ 1 கோடி நிதி வழங்கினார் விஜய்
- சமீபத்தில் நடிகர் கமலஹாசன் தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார்
- நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனை 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனை 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சங்கம் தங்களுக்கான கட்டுமான பணியை தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் இதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் சில பிரச்சனையினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன.
சமீபத்தில் நடிகர் கமலஹாசன் தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார். நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகர் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முறுகன் அந்த தொகையை பெற்றுக் கொண்டனர்.
தற்போது தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் விஜய் அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நடிகர் சங்க வளர்ச்சிக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.