search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "van"

    • நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
    • வேன் முன்னீர்பள்ளம் அடுத்த தருவை ஆலங்குளம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    வேன் கவிழ்ந்து விபத்து

    இந்தப் பள்ளியில் மேலப்பாளையம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவர்களை அழைத்து செல்வதற்காக பள்ளி வேன் ஒன்று சென்றது.

    வேனை மேலப்பா ளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டிச் சென்றார்.

    2 மாணவர்கள் காயம்

    வேன் முன்னீர்பள்ளம் அடுத்த தருவை ஆலங்குளம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் சென்ற 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    தகவலறிந்ததும் முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெ ல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சம்பவ இடத்திலேயே குமார் பலியானார்.

    காங்கேயம்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் குமார்( வயது 35). கிணறு வெட்டும் தொழிலாளி. இவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் உறவினர்களான வெள்ளியங்கிரி(40), மணி (36) ஆகியோருடன் சொந்த ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னிமலை வழியாக காங்கேயத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    சாவடி பகுதியில் செல்லும் போது அந்த வழியாக வந்த லோடு வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே குமார் பலியானார். மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை மீட்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பேட்டரிகளை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
    • விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேன் மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

    பல்லடம் :

    பல்லடம் பொங்கலூர் சக்தி நகர் அருகே கோவையை நோக்கி பேட்டரிகளை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது காங்கேயம் நோக்கி சிமெண்ட் ஏற்றிக்கொண்டு சென்ற வேன் எதிர்பாராதவிதமாக லாரியின் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறிய கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வேன் மற்றும் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இந்த விபத்தால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் இருந்து உடனடியாக விரைந்து வந்த அவினாசிபாளையம் போலீசார் கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    • தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தாா்.
    • வேன் ஓட்டுனர் தினேஷ்குமாா் என்பவரை கைது செய்தனா்.

    திருப்பூா்:

    திருப்பூர் 15.வேலம்பாளையம் செட்டியாா் வீதியைச் சோ்ந்த கமலநாதன் மகன் மணிகண்டன் (வயது 19). இவா் அன்னூரில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தாா்.

    இந்நிலையில், இவா் தனது நண்பா்களான விவேக், சஞ்சய் ஆகியோருடன் அன்னூரில் இருந்து திருப்பூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அவிநாசி வெள்ளியம்பாளையம் அருகே சென்றபோது, அவிநாசியில் இருந்து கருவலூா் நோக்கி சென்ற வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

    இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து, வேன் ஓட்டுநரான கோவை வெள்ளாக்கிணறு அண்ணா வீதியை சோ்ந்த தினேஷ்குமாா் (30) என்பவரை கைது செய்தனா்.

    • வேன் மோதியதில் வாலிபர் பலி, 2 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் அன்பழகன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த தாட்டர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). இவர் தனது நண்பர்களான கவுந்தபாடியை சேர்ந்த வேதமூர்த்தி (15), பெருந்தலையூரை சேர்ந்த பிரதீப் (16) ஆகியோருடன் கேட்டரிங் வேலை விஷயமாக அந்தியூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    பிரதீப் மோட்டார் சைக்கிளை ஓட்ட நடுவில் வேதமூர்த்தியும், அவருக்கு பின்னால் சதீஷ்குமாரும் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிள் பவானி-அந்தியூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது நல்லிபாளையம் பிரிவு அருகே வந்த போது எதிரே வந்து கொண்டிருந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக பிரதீப் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் தேவமூர்த்தி, சதீஷ்குமார் இருவருக்கும் கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரதீப் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரதீப்பை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரதீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் விபத்தில் படுகாயமடைந்த தேவமூர்த்தி, சதீஷ்குமார் 2 பேரும் பவனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் அன்பழகன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லால்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேனில் கடத்தி செல்லப்பட்ட 22 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    லால்குடி:

    திருச்சி மாவட்டம்லால் குடியில் நேற்று மாலையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் லால்குடி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் 22 பெட்டிகள் மது பாட்டில்கள் இருந்தது. உடனே இது குறித்து வேனில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (25) , வேன் டிரைவர் தஞ்சாவூரைசேர்ந்த அருள் ஆராக்கியதாஸ் என்பதும் தெரியவந்தது. அவர்கள் லால்குடி பூவானுரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்கி அதை தஞ்சாவூருக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. 

    உடனே போலீசார் 22 மதுபாட்டில்கள் பெட்டிகளையும், வேனையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பிடிப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ 1 லட்சத்து 5 ஆயிரமாகும். 

    கஜா புயலால் தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் மது விற்பனைக்கு தடை விதிக்கபட்டுள்ளது. இதனால் அவர்கள் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு மதுபாட்டில்கள் கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    ராஜபாளையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் அளவுக்கு அதிகமான பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி அந்த ஆட்டோ, வேனை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் விதிகளை மீறுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு புகார் வந்தது.

    இதைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் இன்று வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    காந்தி சிலை, ரெயில்வே பீடர் சாலை மற்றும் மதுரை சாலையில் உள்ள சோதனை சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும், பள்ளி கல்லூரி பேருந்துகள், ஆட்டோக்கள், தனியார் வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் சோதனை நடைபெற்றது.

    50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நடைபெற்ற சோதனையில், தகுதி சான்று இல்லாமல் அதிக மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ மற்றும் தனியார் சுற்றுலா வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    மேலும் அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 6 ஆட்டோக்கள் மற்றும் புகை சான்று, முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் விதிகளை மீறி இயக்கிய 7 சுற்றுலா வாகனங்கள் மற்றும் வேன்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    கும்மிடிப்பூண்டி அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரை சேர்ந்தவர் லைலா லட்சுமி (வயது 53). இவர் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 24-ந்தேதி லைலா லட்சுமி, தனது தம்பி சிவாவுடன்(39) மோட்டார் சைக்கிளில் சோழவரத்தில் இருந்து எளாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    புதுவாயல் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் செல்லும்போது, அதே திசையில் வந்த வேன் ஒன்று மேற்கண்ட மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லைலா லட்சுமி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். சிவா சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். 
    பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்த விபத்தில், வேனில் பயணம் செய்த 10 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் அபோதாபாத் மாவட்டத்தில் உள்ளது சப்சி மந்தி மூர் என்னும் பகுதி. இந்த பகுதியில் இன்று மாலை ஒரு வேனில் 15-க்கு மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.



    அப்போது அங்கு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்ததால், முன்னால் சென்ற வேன் மீது கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
    ×