என் மலர்
செய்திகள்

பாகிஸ்தான் - வேன் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்த விபத்தில், வேனில் பயணம் செய்த 10 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் அபோதாபாத் மாவட்டத்தில் உள்ளது சப்சி மந்தி மூர் என்னும் பகுதி. இந்த பகுதியில் இன்று மாலை ஒரு வேனில் 15-க்கு மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்ததால், முன்னால் சென்ற வேன் மீது கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
Next Story






