search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "overturned"

    • கறிக்கோழிகளை ஏற்றி லாரி ஒன்று பந்தலூர் பஜாருக்கு வந்து கொண்டு இருந்தது.
    • லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது.

    கூடலூர்

    பந்தலூர் அருகே உள்ள எருமாடு பஜாரில் இருந்து கறிக்கோழிகளை ஏற்றி லாரி ஒன்று பந்தலூர் பஜாருக்கு வந்து கொண்டு இருந்தது.

    நேற்று காலை 5.30 மணி அளவில் பந்தலூர் பஸ்நிலையம் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே வந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அதேப்பகுதியை சேர்ந்த விஜயகுமாரின் வீட்டின் மீது கவிழ்ந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. மேலும் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். லாரி கவிழ்ந்ததில் வீடு பலத்த சேதமடைந்தது. இதுபற்றி அறிந்ததும் பந்தலூர் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கிரேன் வரவழைக்கப்பட்டு வீட்டின் மீது விழுந்து கிடந்த லாரி மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி பந்தலூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்

    • கடலூர் முதுநகரில் இருந்து மீன் ஏற்றிக் கொண்டு லாரி கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
    • டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நடு ரோட்டிலேயே பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது.

    கடலூர்:

    கடலூர் முதுநகரில் இருந்து மீன் ஏற்றிக் கொண்டு லாரி கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. கடலூர் முதுநகர் அருகே சின்னகாரைக்காடு பகுதியில் விருத்தாசலம்-கடலூர் சாலையில் இன்று அதிகாலை வந்தது. அப்போது திடீரென டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நடு ரோட்டிலேயே பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது.

    இதில் லாரியில் இருந்த மீன்கள் அனைத்தும் சாலையில் சிதறின. இது பற்றி அறிந்த கடலூர் முதுநகர் போலீ சார் விரைந்து சென்று நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப் படுத்தும் முயற்சியில் ஈடு பட்டனர். மேலும் மீன்களும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதியும், மின்கம்பமும் சேதமடைந்தது. லாரி டிரைவர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்ப வத்தால் கடலூர்-விருத்தா சலம் சாலையில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கேரளாவில் இருந்து சென்னைக்கு வாழைத்தார் ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்தது.
    • . இந்த மினி லாரி இன்று அதிகாலை பெட்ரோல் பங்க் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

    விழுப்புரம்:

    கேரளாவில் இருந்து சென்னைக்கு வாழைத்தார் ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்தது. இதனை டிரைவர் ரவி (20) ஓட்டி வந்தார். அவருடன் வடிவேல் (23), துமேஷ் (24) ஆகியோர் வந்தனர். இந்த மினி லாரி இன்று அதிகாலை விழுப்புரம் அருகே உள்ள அரசூர் இருவேல்பட்டு பெட்ரோல் பங்க் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் மினி லாரி டிரைவர் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டதை கேட்ட இருவேல் பட்டு கிராம மக்கள் அங்கு விரைந்து சென்றனர்.பின்னர் பொக்லைன் எந்திரம் மற்றும் போலீசார் உதவியுடன் விபத்தில் சிக்கிய துமேசை மீட்டனர். பின்பு 3 பேரும் சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ராசிபுரம் தாலுகா நாமகிரிபேட்டை மெட்டாலா அருேக உள்ள குட்டைகாடு பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விவசாய தொழில் செய்து வருகிறார்கள்.
    • மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது, மினிடெம்போ திடீரென கட்டுப்பாடை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் மினிடெம்போவில் இருந்த 15 பெண்களும் காயம் அடைந்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிபேட்டை மெட்டாலா அருேக உள்ள குட்டைகாடு பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விவசாய தொழில் செய்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த 15 பெண்கள் வழக்கம்போல் இன்று காலை கோரைக்காடு பகுதியில் வெங்காயம் அறுவடை செய்வதற்காக மினிடெம்போவில் புறப்பட்டனர்.

    மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது, மினிடெம்போ திடீரென கட்டுப்பாடை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் மினிடெம்போவில் இருந்த மல்லிகா (40), லாவண்யா (19), சத்யா (30), ஜீவா (30) உள்பட 15 பெண்களும் காயம் அடைந்தனர். குறிப்பாக முகம், கை, கால், உள்ளிட்ட இடங்களில் அவர்கள் அடிபட்டது. அக்கம் , பக்கத்தினர், அவர்களை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொலை தூர பஸ் என்பதால் இருவரும் மாறி மாறி பஸ்சை ஓட்டிக் கொண்டு வந்துள்ளனர்.
    • பஸ் நிலைதடுமாறி சாலையில் தாறுமாற ஓடி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

    வல்லம்:

    திருச்செந்தூரில் இருந்து கும்பகோணத்திற்கு நேற்று இரவு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    பஸ்சை அம்மாபேட்டையை சேர்ந்த பாலமுருகன் (வயது 40) என்பவர் ஒட்டி வந்தார். நன்னிலத்தை சேர்ந்த‌ சிவா(வயது‌ 38) கண்டக்டராக இருந்தனர்.

    தொலை தூர பஸ் என்பதால் இருவரும் மாறி மாறி பஸ்சை ஓட்டிக் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அரசு பஸ்சை புதுக்கோட்டையில் இருந்து சிவா ஒட்டிக்கொண்டு வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள வல்லம் அற்புதாபுரம் சோதனைச்சாவடி அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் லாரி ஒன்று டீசல் போட்டு கொண்டு சாலையை கடந்துள்ளது.

    அப்போது தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ் லாரி மீது மோதாமல் இருக்க திடிரென‌ பிரேக் போட்டுள்ளார். இதில் பஸ் நிலைதடுமாறி சாலையில் தாறுமாற ஓடி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள் விரைந்து சென்று பஸ்சில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

    இதில் காயம் அடைந்த வெங்கடேஷ், மாலா, சுப்ரமணியன், பிருத்திகா, சாந்தி உள்ளிட்ட 11 ேபர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலாஜி தனது மனைவி, தம்பியுடன் மாமனார் வீட்டில் இருந்து கிளம்பி தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டி ருந்தார்.
    • கார் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் உள்ள ஒரு சுவற்றில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (29).இவருக்கும் நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி பகுதியை சேர்ந்த டாக்டர் பாலாஜி (30) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் பாலாஜி தனது மனைவி சுகன்யா மற்றும் தம்பி வெங்கட்ரா மணன் ஆகியோருடன் நேற்று காரில் பாரப்பாளையம் பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் மாலை பாலாஜி தனது மனைவி, தம்பியுடன் மாமனார் வீட்டில் இருந்து கிளம்பி தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டி ருந்தார். காரை பாலாஜி ஓட்டி வந்து கொண்டிருந்தார்.

    கொடுமுடி அருகே உள்ள சோளகாளிபாளையம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் உள்ள ஒரு சுவற்றில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பாலாஜி, சுகன்யா மற்றும் பாலாஜி தம்பிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவ சமாக அவர்கள் உயிர் தப்பினர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சை க்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கயத்தாறு அருகே உள்ள தென்னம்பட்டி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் மாதேஷ் கண்ணன் (வயது7)
    • நேற்று மாதேஷ் கண்ணன், சகோதரருடன் ஆட்டோவில் கயத்தாறு வந்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.


    கயத்தாறு:


    கயத்தாறு அருகே உள்ள தென்னம்பட்டி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் மாதேஷ் கண்ணன் (வயது7). இவன் தென்னம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.


    இந்நிலையில் நேற்று மாதேஷ் கண்ணன், சகோதரருடன் ஆட்டோவில் கயத்தாறு வந்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். ஆட்டோவை அகிலாண்டபுரத்தை சேர்ந்த மாதவன் (31) என்பவர் ஓட்டிச்சென்றார். அப்போது ஆடு குறுக்கே வந்ததால் நிலைதடுமாறிய ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த மாதேஷ் கண்ணன் பலத்தகாயமடைந்தனர்.அவரை மீட்டு நெல்லைஅரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கயத்தாறு சப்-இனஸ்பெக்டர் பால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


    • நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
    • வேன் முன்னீர்பள்ளம் அடுத்த தருவை ஆலங்குளம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    வேன் கவிழ்ந்து விபத்து

    இந்தப் பள்ளியில் மேலப்பாளையம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவர்களை அழைத்து செல்வதற்காக பள்ளி வேன் ஒன்று சென்றது.

    வேனை மேலப்பா ளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டிச் சென்றார்.

    2 மாணவர்கள் காயம்

    வேன் முன்னீர்பள்ளம் அடுத்த தருவை ஆலங்குளம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் சென்ற 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    தகவலறிந்ததும் முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெ ல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    • கிரேனை நாமக்கல், கருமானூரை சேர்ந்த பொன்னாமலை(45) என்பவர் ஓட்டினார்.
    • அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று கிரேன் மீது மோதியது. இதில் கிரேன் வாகனம் கவிழ்ந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடா சலம்(வயது45). பவானி அருகே வரதநல்லூரை சேர்ந்தவர் சுந்தரம்(52). கூலி தொழிலாளி. இருவ ரும் நேற்று மதியம் கிரேன் வண்டியில் சேலம்- கோவை நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    கிரேனை நாமக்கல், கருமானூரை சேர்ந்த பொன்னாமலை(45) என்பவர் ஓட்டினார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று கிரேன் மீது மோதியது. இதில் கிரேன் வாகனம் கவிழ்ந்தது.

    வாகனத்தில் இருந்த டிரைவர் உள்பட 3பேரும் படுகாயமடைந்தனர். குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • ராமநாதபுரம் அருகே வேன் கவிழ்ந்து 7 பேர் படுகாயமடைந்தனர்.
    • மாடு குறுக்கே வந்ததால் வேடிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

    தொண்டி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்

    (வயது 65). இவரது சகோதரர் முருகேசன் என்பவர் இறந்து விட்டார். அவரது அஸ்தியை ராமேசுவரம் சேதுக்கரையில் கரைப்பதற்காக ஒரு வேனில் அவரது குடும்பத்தினர்கள் உள்பட 20 பேர் சென்றனர்.

    அந்த வேன் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல்பனையூர் பாலம் அருகில் சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென மாடு சென்றதால் வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மாட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 2 சிறுமிகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வேனில் பயணம் செய்த மற்றவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. அவர்களை மீட்டு மற்றொரு வேனில் அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கீழே விழுந்து காயம் அடைந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மினி லோடு ஆட்டோவின் பின்பக்க டயர் திடீரென வெடித்ததால் மொத்த சரக்குடன் மினி லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் டிரைவர் ராமகிருஷ்ணன் மற்றும் கிளீனர் சுப்பிமணியன் ஆகியோருக்கு சிறிய சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள அச்சன்புதூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 25). இவர் மினி லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    கவிழ்ந்து விபத்து

    இவர் நேற்று மாலை தனது நண்பர் சுப்பிரமணியன் என்பவருடன் சேர்ந்து அங்குள்ள கடைகளில் மளிகை பொருட்களை மினி லாரியில் மொத்தமாக ஏற்றிக்கொண்டு ஆழ்வார்குறிச்சிக்கு சென்றார்.

    மத்தளம்பாறை அருகே அம்பை சாலையில் சென்று கொண்டிருந்தபோது மினி லோடு ஆட்டோவின் பின்பக்க டயர் திடீரென வெடித்ததால் மொத்த சரக்குடன் மினி லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    லேசான காயம்

    அந்த சமயத்தில் எதிரே எவ்வித வாகனமும் வராததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் டிரைவர் ராமகிருஷ்ணன் மற்றும் கிளீனர் சுப்பிமணியன் ஆகியோருக்கு சிறிய சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குற்றாலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் லோடு வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    • சாலையில் தறிகெட்டு ஓடிய கார் குடியிருப்பு பகுதியில் தலைகீழாக கவிழ்ந்தது.
    • இரவு நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை.

    மதுரை

    மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதி அருகே குடியிருப்பு வளாகங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு மாடக்குளம் பெரியார் நகர் வழியாக, பழங்காநத்தம் நோக்கி ஒரு சிவப்பு நிற கார் அதிவேகமாக சென்றது.

    அப்போது மாணவர் விடுதி அருகே நிலைதடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. இரவு நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. எனவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது கார் டிரைவர் சிறிய காயங்களுடன் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே டிரைவர் யாருக்கோ போன் செய்ய, அடுத்த 10 நிமிடங்களில் நண்பர்கள் குழு புறப்பட்டு வந்தது. அவர்கள் போலீசார் வருவதற்குள் காரை அப்புறப்படுத்தி, புறப்பட்டுச் சென்று விட்டனர்.

    ×