கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்த கார்

பாலாஜி தனது மனைவி, தம்பியுடன் மாமனார் வீட்டில் இருந்து கிளம்பி தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டி ருந்தார். கார் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் உள்ள ஒரு சுவற்றில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்த கார்
Published on

கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (29).இவருக்கும் நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி பகுதியை சேர்ந்த டாக்டர் பாலாஜி (30) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் பாலாஜி தனது மனைவி சுகன்யா மற்றும் தம்பி வெங்கட்ரா மணன் ஆகியோருடன் நேற்று காரில் பாரப்பாளையம் பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு வந்தார்.

பின்னர் மாலை பாலாஜி தனது மனைவி, தம்பியுடன் மாமனார் வீட்டில் இருந்து கிளம்பி தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டி ருந்தார். காரை பாலாஜி ஓட்டி வந்து கொண்டிருந்தார்.

கொடுமுடி அருகே உள்ள சோளகாளிபாளையம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் உள்ள ஒரு சுவற்றில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பாலாஜி, சுகன்யா மற்றும் பாலாஜி தம்பிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவ சமாக அவர்கள் உயிர் தப்பினர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சை க்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com