குமாரபாளையம் அருகே கிரேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

கிரேனை நாமக்கல், கருமானூரை சேர்ந்த பொன்னாமலை(45) என்பவர் ஓட்டினார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று கிரேன் மீது மோதியது. இதில் கிரேன் வாகனம் கவிழ்ந்தது.
கிரேன் எந்திரம் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
கிரேன் எந்திரம் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடா சலம்(வயது45). பவானி அருகே வரதநல்லூரை சேர்ந்தவர் சுந்தரம்(52). கூலி தொழிலாளி. இருவ ரும் நேற்று மதியம் கிரேன் வண்டியில் சேலம்- கோவை நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

கிரேனை நாமக்கல், கருமானூரை சேர்ந்த பொன்னாமலை(45) என்பவர் ஓட்டினார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று கிரேன் மீது மோதியது. இதில் கிரேன் வாகனம் கவிழ்ந்தது.

வாகனத்தில் இருந்த டிரைவர் உள்பட 3பேரும் படுகாயமடைந்தனர். குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com