தறிகெட்டு ஓடிய கார் தலைகீழாக கவிழ்ந்தது

சாலையில் தறிகெட்டு ஓடிய கார் குடியிருப்பு பகுதியில் தலைகீழாக கவிழ்ந்தது. இரவு நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை.
தறிகெட்டு ஓடிய கார் தலைகீழாக கவிழ்ந்தது
Published on

மதுரை

மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதி அருகே குடியிருப்பு வளாகங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு மாடக்குளம் பெரியார் நகர் வழியாக, பழங்காநத்தம் நோக்கி ஒரு சிவப்பு நிற கார் அதிவேகமாக சென்றது.

அப்போது மாணவர் விடுதி அருகே நிலைதடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. இரவு நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. எனவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது கார் டிரைவர் சிறிய காயங்களுடன் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே டிரைவர் யாருக்கோ போன் செய்ய, அடுத்த 10 நிமிடங்களில் நண்பர்கள் குழு புறப்பட்டு வந்தது. அவர்கள் போலீசார் வருவதற்குள் காரை அப்புறப்படுத்தி, புறப்பட்டுச் சென்று விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com