search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "udhayanidhi"

    சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தை விஜய் சேதுபதி பார்த்து பாராட்டி நெகிழ்ந்திருக்கிறார். #VijaySethupathi #Udhayanidhi
    ‘தென்மேற்குப் பருவகாற்று’ படத்தின் மூலமாக விஜய் சேதுபதியை ஹீரோவாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சீனு ராமசாமி. தற்போது விஜய் சேதுபதியை வைத்து `மாமனிதன்’ என்ற படத்தையும் எடுத்து வருகிறார். யுவன்‌ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்து தயாரிக்கவும் செய்கிறார்.

    அதுமட்டு மல்லாமல், இந்தப் படத்தின் இசைக்காக யுவனுடன் இளையராஜா, கார்த்திக்ராஜா ஆகிய இருவரும் கைகோர்த்துள்ளனர். தேனியில் பரபரப்பாகப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படத்தை விஜய் சேதுபதி பார்த்துள்ளார். உதயநிதி, தமன்னா நடித்திருக்கும் இந்தப் படம் மண்வாசனையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.



    படம் பார்த்து முடித்தவுடன் நெகிழ்ச்சியுடன் சீனு ராமசாமியைக் கட்டியணைத்து கண் கலங்கி இருக்கிறார் விஜய் சேதுபதி.
    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தின் சிங்கிள் டிராக் பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். #KannaeKalaimaanae
    ‘தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சீனு ராமசாமி, தற்போது ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்' மூலம் தயாரித்துள்ளார்.

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதற்கு ஜலேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார், இந்த படத்தின் சிங்கிள் டிராக்கை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



    இப்படத்தை வருகிற பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். #KannaeKalaimaanae
    விஜய்யை தளபதி என்று அழைத்து வருவதற்கு உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். #ThalapathyVijay #Udhayanidhi
    இளைய தளபதி என்று அழைக்கப்பட்டவர் நடிகர் விஜய். இவர் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் தளபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மெர்சல் திரைப்படத்தில் இருந்து தளபதி விஜய் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

    அரசியலில் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினை அவரது தொண்டர்கள், பொதுமக்கள் தளபதி ஸ்டாலின் என்று அழைத்து வருகிறார்கள். தற்போது விஜய்யை தளபதி என்று அழைத்து வருவதால், இணையதளத்தில் ஒருவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதியிடம் ‘விஜய்யை தளபதி என்று அழைப்பதை, திமுக வினர் எப்படி எடுத்துக்கொள்வர் என்று கேள்வி கேட்டிருக்கிறார்.



    இதற்கு உதயநிதி ஸ்டாலின் ‘ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான்!’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    உதயநிதி அடுத்ததாக நடிக்க இருக்கும் ‘ஏஞ்சல்’ படத்திற்காக இரண்டு கதாநாயகிகளுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். #Angel #Udhayanidhi
    ‘ஏபிசிடி’, ‘நேபாளி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து OST FILMS ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ‘ஏஞ்சல்’.  ‘தொட்டாசிணுங்கி’, ‘சொர்ணமுகி’, ‘பிரியசகி’, ‘தூண்டில்’ போன்ற படங்களின் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார்.

    அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு வெற்றிப்படமான ‘ஆர்.எக்ஸ் 100’ படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு: கவியரசு, படத்தொகுப்பு: ஜீவன், ஸ்டண்ட் : ரமேஷ் (விஸ்வரூபம் 2) கலை இயக்குநர்: சிவா, நடன இயக்குநர்: தினேஷ்.



    “உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணித்த பின்னும் மறக்காது ஏஞ்சல்” என்பதை உணர்த்தும் “ரொமாண்டிக் ஹாரர்” ஜானரில் இப்படம் உருவாகிறது. மேலும், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது.
    தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு இயக்கநர் ஷங்கர், நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளனர். #KeralaFloods #KeralaFloodRelief
    கேரள மாநிலத்தில் இதுவரை காணாத அளவுக்கு பலத்தமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர். 

    பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கேரள மக்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குர் ஷங்கர் தலா ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளனர்.



    முன்னதாக நடிகர்கள் கமல், விஜய் சேதுபதி, சூர்யா - கார்த்தி இணைந்து ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். நடிகர் தனுஷ் ரூ.15 லட்சமும், விஷால், சித்தார்த் தலா ரூ.10 லட்சமும், நடிகை ரோஹிணி ரூ.2 லட்சமும் வழங்கியுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் நிதி அளித்துள்ளது. #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief

    சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. #KanneKalaimaane
    சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், தமன்னா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

    மதுரைப் பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், மதுரை, கொடைக்கானலில் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 



    இப்படத்தின் மூலம் சீனுராமசாமியுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இவருடைய இசையில் உருவாகி இருக்கும் பாடல்களுக்கு வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். தற்போது இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. 
    பிரியதர்‌ஷன், சீனு ராமசாமியை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Udhayanidhi #Mysskin
    நிமிர் படத்தை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாகவிருக்கும் நிலையில், உதயநிதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

    முன்னதாக மிஷ்கின் சாந்தணுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார். அப்படத்தைத் தயாரிக்க முன்வந்த லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் கடைசி நேரத்தில் பின் வாங்கியதால் அந்தப் படம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், அதே கதையில் உதயநிதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அந்த படத்தை உதயநிதி நடிப்பதோடு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். 



    மிஷ்கின் - சாந்தணு கூட்டணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பி.சி.ஸ்ரீராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இந்த நிலையில், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு ஆகஸ்டு இரண்டாம் வாரத்தில் தொடங்க இருக்கிறது. #Udhayanidhi #Mysskin 

    பிரியதர்‌ஷன், சீனு ராமசாமியை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Udhayanidhi #Mysskin
    சமீபகாலமாக பெரிய இயக்குனர்களின் பார்வையில் உதயநிதி விழுந்திருக்கிறார். பிரியதர்‌ஷன், சீனு ராமசாமியை தொடர்ந்து உதயநிதி நடிக்கும் அடுத்த படத்தை மிஷ்கின் இயக்க உள்ளார்.

    பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். படப்பிடிப்பு ஆகஸ்டு இரண்டாம் வாரத்திலிருந்து தொடங்க இருக்கிறது. மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் துப்பறிவாளன். இந்தப் படத்தில் விஷால் தன் மாறுபட்ட நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து மிஷ்கின் இயக்கும் படத்தில் சாந்தனு ஹீரோவாக நடிப்பதாக சொல்லப்பட்டது. 

    அப்படத்தைத் தயாரிக்க முன்வந்த நிறுவனம் கடைசி நேரத்தில் பின் வாங்கியதால் அந்தப் படம் கைவிடப்பட்டது. தற்போது அதே கதையில் உதயநிதி நடிப்பதோடு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். #Udhayanidhi #Mysskin 
    நடிகர் அஜித், தான் நடித்த படங்கள் வெளியாகும் முன்பு என்ன செய்தாரோ, அதை இயக்குனர் சீனு ராமசாமியும் தற்போது செய்திருக்கிறார். #Ajith #SeenuRamasamy
    சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், தமன்னா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

    மதுரைப் பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், மதுரை, கொடைக்கானலில் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி, படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக முடிந்ததற்காகவும், வெற்றி பெறவும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து முடி காணிக்கை செய்துள்ளார். அவருடன் ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசனும் சென்றுள்ளார்.



    நடிகர் அஜித்தும், தான் நடித்த படம் வெளியாகும் முன்பு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார். வீரம் படம் வெளியாகும் முன்பு திருப்பதில் முடி காணிக்கை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கண்ணே கலைமானே படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருந்த புதிய படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Udhayanidhi
    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நிமிர். யதார்த்தமான கதையாக உருவாகி இருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உதயநிதியின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. அத்துடன் உதயநிதி சினிமா வரலாற்றில் நிமிர் முக்கிய படமாக அமைந்தது. 

    இப்படத்தை அடுத்து உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    உதயநிதி அடுத்ததாக அட்லியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய எனாக் இயக்கத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கரும், இந்துஜாவும் ஒப்பந்தமாகினார்கள்.

    தற்போது இந்த புதிய படம் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Udhayanidhi #PriyaBhavaniShankar #Indhuja
    ×