என் மலர்

  சினிமா

  உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
  X

  உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. #KanneKalaimaane
  சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், தமன்னா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

  மதுரைப் பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், மதுரை, கொடைக்கானலில் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.   இப்படத்தின் மூலம் சீனுராமசாமியுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இவருடைய இசையில் உருவாகி இருக்கும் பாடல்களுக்கு வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். தற்போது இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. 
  Next Story
  ×