search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "udhayanidhi"

    • உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
    • இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகி ட்ரெண்டானது.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    மாமன்னன்

    'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து நேற்று இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. வடிவேலு பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


    மாமன்னன்

    இந்நிலையில், இந்த பாடல் குறித்து நடிகர் சூரி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன், மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல். மாமன்னன் படக்குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இதைத்தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 'இறைவன்', 'சைரன்' போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


    ஏ.ஆர்.ரகுமான் -நித்யா மேனன்

    இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் அடுத்தப்படத்தை 'வணக்கம் சென்னை', 'காளி', 'பேப்பர் ராக்கெட்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நடிகர் அருள்நிதி தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.


    கழுவேத்தி மூர்க்கன்

    இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.


    கழுவேத்தி மூர்க்கன் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.




    இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று குறிப்பிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
    • இந்த ஐபிஎல் போட்டியை பல்வேறு பிரபலங்கள் நேரில் பார்த்து ரசித்தனர்.

    16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி சென்னை அணியின் கேப்டனாக டோனிக்கு 200வது போட்டி என்பதால் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அதிகமாக இருந்தது.

    இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்காக பிரபலங்கள் பலர் மைதானத்திற்கு நேரில் வந்திருந்தனர். குறிப்பாக, நடிகரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சி.எஸ்.கே அணியின் ஜெர்சி அணிந்தவாறு, மைதானத்திற்கு வந்திருந்தார்.

    இதேபோல், முதல்வரின் குடும்பத்தினர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் நடிகைகள் திரிஷா, பிந்துமாதவி, மேகா ஆகாஷ், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் ஜெயராம், சதீஷ் உள்ளிட்ட பலரும் போட்டியை நேரில் பார்த்தனர்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் தற்போது நடித்துள்ள படம் லத்தி.
    • லத்தி திரைப்படம் வருகிற 22-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் தற்போது நடித்துள்ள படம் லத்தி. இப்படத்தின் புரொமோஷனில் ஈடுப்பட்டு வரும் நடிகர் விஷால் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது, நான் நடித்த லத்தி திரைப்படம் வரும் 22-ந் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஒவ்வொரு ஊராக சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறேன். இந்த திரைப்படத்தில் ஒரு 2-ம் நிலை காவலராக நடித்துள்ளேன். 8 வயது சிறுவனின் தந்தையாக நடித்துள்ளேன்.

    விவாயிகளுக்கு தொடர்ந்து என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். எங்கள் குழுவினர் சரியான விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கான உதவியை மேற்கொள்கின்றனர். விவசாயிகள் குறித்து சரியான திரைப்படம் எடுக்க வேண்டும். பிரச்சினைகள் குறித்து தெரிவிப்பது மட்டுமல்லாமல் அதற்கான தீர்வுகளையும் கூற வேண்டும்.

    விஷால்

    விஷால்

     

    உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது தான் அவர் தனது தந்தை பெயரை பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அவர் வெறும் உதயாக இருந்தபோதில் இருந்தே எனக்கு தெரியும். நானும் அரசியலில் தான் இருக்கிறேன். மக்களுக்காக சேவை செய்து வருவது அரசியல் தான்.

     

    உதயநிதி

    உதயநிதி

    சிறிய படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் போது மக்கள் அங்கு செல்வது குறைவாக உள்ளது. சிறிய திரைப்படங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன. இலங்கை அகதிகள் முகாமில் எனது திரைப்படங்களை திரையிட நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. எனக்கு அடுத்தடுத்த படங்கள் உள்ளதால் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பில்லை. திருமணம் குறித்து இப்போது முடிவெடுக்கவில்லை. விரைவில் அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • படகு போட்டியில் ஒவ்வொரு படகிலும் 4 பேர் வீதம் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • கடலில் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் திரும்பும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு பரிசும் அறிவிக்கப்பட்டது.

    தி.மு.க. இளைஞரணி செயலாளரான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது 45-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார்.

    உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். 1 மாதம் அளவுக்கு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் திமுக சார்பில் படகு போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில், ஒவ்வொரு படகிலும் 4 பேர் வீதம் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கடலில் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் திரும்பும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு பரிசும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2வது பரிசு ரூ.25 ஆயிரம், 3வது பரிசு ரூ.10 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களில் இயக்கியவர் மாரி செல்வராஜ்.
    • இவர் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

    2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். தற்போது உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. வாழை என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

    இந்நிலையில் இப்படம் சமூகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் எழுதிய பேய் என்ற சிறுகதையை தழுவி வாழை திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறுகதையில் வாழைத் தோட்டத்தில் பணியாற்றும் சிறுவர்களைப் பற்றி எழுதியிருந்தார். எனவே வாழை படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    • பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களில் இயக்கியவர் மாரி செல்வராஜ்.
    • இவர் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

    2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். தற்போது உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

     

    வாழை

    வாழை

    இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு வாழை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்ப்பு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராய குறிச்சியில் இன்று தொடங்கியது. அதனை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுந்தர்.சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல்.
    • இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரண்மனை 3 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

     

    காபி வித் காதல்

    காபி வித் காதல்

    இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

     

    காபி வித் காதல்

    காபி வித் காதல்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் வருகிற அக்டோபர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
    • தமிழக வெளியீட்டு உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்ஃ பாசில், நரேன், சூர்யா என பலர் நடித்து ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து சென்னையில் நேற்று (18-06-2022) விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தமிழக வெளியீட்டு உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    அவர் கூறுகையில், "டான் படத்தின் வெற்றி விழாவில் சில உண்மைகளை கூறினேன், அது போன்று இங்கும் சில உண்மைகளை கூறுகிறேன் கமல் சார். விக்ரம் படத்தை கமல் சார் முதலில் என்னிடம் தான் போட்டு காண்பித்தார். இடைவேளை வந்ததும் மிரண்டுவிட்டேன். அப்படி ஒரு இடைவேளை காட்சியை நான் பார்த்ததில்லை.

    இந்த படத்தின் மூலம் தமிழ் விநியோகஸ்தரரான என் பங்கு மட்டும் ரூ.75 கோடி கிடைத்திருக்கிறது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இப்படி வசூல் செய்தது இல்லை. கமல் பட வாய்ப்பு கிடைத்தது என்பதற்காக ஏதோ ஒரு படத்தை எடுக்காமல் இந்த மாதிரி ஒரு வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் லோகேஷிற்கு நன்றி" என்று கூறினார்.   

    தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆதரவு அலை வீசுகிறது. இதனால் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். #udhayanidhi #mkstalin #congress

    புளியங்குடி:

    புளியங்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். டி.என். புதுக்குடி காமராஜர் சிலை அருகே பேசியதாவது:-

    மத்திய-மாநில அரசுகள் தமிழகத்திற்கு செய்த துரோகம் எண்ணிலடங்காதவை. குறிப்பாக நீட் தேர்வை அமல்படுத்தியது, டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு, கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்காதது என பல்வேறு துரோகங்களை தமிழக மக்களுக்கு மத்திய-மாநில அரசுகள் செய்துள்ளது.

    இதன் எதிரொலியாக தற்போது இந்தியா முழுவதும் மோடியின் எதிர்ப்பலையும், தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆதரவு அலையும் வீசுகிறது. இதனால் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். அதே நேரத்தில் தேர்தல் அறிக்கையின்படி வெற்றி பெற்ற பின் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.

    விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற காத்திருக்கும் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ், அதற்கு உறுதுணையாக உள்ள தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்காளப் பெருமக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். எனவே உங்களுக்கு சேவை செய்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #udhayanidhi #mkstalin #congress

    ×