என் மலர்

  நீங்கள் தேடியது "mamannan"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் மாரி செல்வராஜ்.
  • இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார்.

  பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படங்களும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் படமாக்கப்பட்டது.

   

  மாமன்னன்

  மாமன்னன்

  இதனை தொடர்ந்து நடிகரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை மாரி செல்வராஜ் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் நடத்தினார். கடந்த 4 நாட்களாக ஒரு சண்டைக்காட்சி உள்பட பல காட்சிகள் அந்த பகுதியில் படமாக்கப்பட்டது. இதில் உதயநிதி ஸ்டாலின் சண்டையிடும் காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பை ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்து கண்டுகளித்தனர்.

  மாரி செல்வராஜின் 4-வது படமான வாழை திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாரி செல்வராஜ் இயக்கி வரும் மாமன்னன் படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
  • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

  பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


  மாமன்னன்

  இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இதைத்தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


  மாமன்னன் படக்குழு

  அதில், தான் முதல் முறையாக மாமன்னன் படத்தின் மூலம் மாரிசெல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இயக்குனர் மாரி செல்வராஜ் பணியாற்றும் விதம் முற்றிலும் மாறுபட்டதாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பதாக கூறியுள்ளார்.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு.
  • இவர் தற்போது ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

  தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது சுராஜ் இயக்கி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மேலும், சந்திரமுகி -2, மாமன்னன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.


  வடிவேலு

  இந்நிலையில், நடிகர் வடிவேலு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, "ஜி.வி.பிரகாஷ் அடுத்து 'தில்லுக்கு துட்டு' பட இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் வடிவேலுவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ்.
  • இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார்.

  தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இப்படம் அனைவரின் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

  இதன்மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


  மாமன்னன் படக்குழு

  இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை மாமன்னன் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

  இதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் உதயநிதி ஸ்டாலின் "இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் கீர்த்தி சுரேஷ் மற்றும், பகத் பாசில் இருவரும் தேதி கொடுத்தால்தான் நடக்கும். அதை பற்றி கொஞ்சம் யோசிங்க. மாரி செல்வராஜ் சார் ஒன் மோர் காட்சிகளுக்கு சாரி. நன்றி மாமன்னன் படக்குழு" என பதிவிட்டுள்ளார்.

  ×