ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்து ரசித்த உதயநிதி-லோகேஷ் கனகராஜ்

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.இந்த ஐபிஎல் போட்டியை பல்வேறு பிரபலங்கள் நேரில் பார்த்து ரசித்தனர்.
ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்து ரசித்த உதயநிதி-லோகேஷ் கனகராஜ்
Published on

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி சென்னை அணியின் கேப்டனாக டோனிக்கு 200வது போட்டி என்பதால் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அதிகமாக இருந்தது.

இந்த போட்டியை நேரில் பார்ப்பதற்காக பிரபலங்கள் பலர் மைதானத்திற்கு நேரில் வந்திருந்தனர். குறிப்பாக, நடிகரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சி.எஸ்.கே அணியின் ஜெர்சி அணிந்தவாறு, மைதானத்திற்கு வந்திருந்தார்.

இதேபோல், முதல்வரின் குடும்பத்தினர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் நடிகைகள் திரிஷா, பிந்துமாதவி, மேகா ஆகாஷ், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் ஜெயராம், சதீஷ் உள்ளிட்ட பலரும் போட்டியை நேரில் பார்த்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com