என் மலர்

  சினிமா

  அஜித் வழியை பின் பற்றிய சீனு ராமசாமி
  X

  அஜித் வழியை பின் பற்றிய சீனு ராமசாமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் அஜித், தான் நடித்த படங்கள் வெளியாகும் முன்பு என்ன செய்தாரோ, அதை இயக்குனர் சீனு ராமசாமியும் தற்போது செய்திருக்கிறார். #Ajith #SeenuRamasamy
  சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், தமன்னா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

  மதுரைப் பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், மதுரை, கொடைக்கானலில் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

  இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி, படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக முடிந்ததற்காகவும், வெற்றி பெறவும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து முடி காணிக்கை செய்துள்ளார். அவருடன் ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசனும் சென்றுள்ளார்.  நடிகர் அஜித்தும், தான் நடித்த படம் வெளியாகும் முன்பு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார். வீரம் படம் வெளியாகும் முன்பு திருப்பதில் முடி காணிக்கை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×