search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transfer"

    • கலெக்டர் தாசில்தார் பணியிடங்களை மாற்றியும், பதவி உயர்வு வழங்கியும் உத்தரவு பிறப்பித்தார்.
    • கலெக்டர் அலுவலக துணை தாசில்தாராக இருந்த ஜெயமாலா, தாராபுரம், தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் மூன்று தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தாசில்தார் பணியிடங்களை மாற்றியும், பதவி உயர்வு வழங்கியும் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, காங்கயம் மண்டல துணை தாசில்தாராக இருந்த மோகனன், தாராபுரம், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளராகவும், இப்பணியிடத்தில் இருந்த ஜெகதீஸ்குமார், திருப்பூர் 'டாஸ்மாக்' கிடங்கு, மேலாளாராக மாற்றப்பட்டார். கலெக்டர் அலுவலக (டி.என்.ஆர்.எஸ்.பி., நிலை - 2) துணை தாசில்தாராக இருந்த ஜெயமாலா, தாராபுரம், தனிதாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • தமிழகம் முழுவதும் துப்புரவு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
    • தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதியின்படி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    உடுமலை :

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதியின் படி நிர்வாக நலன் கருதி தமிழகம் முழுவதும் துப்புரவு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன் ஒரு பகுதியாக உடுமலை நகராட்சியில் பணியாற்றி வந்த துப்பரவு ஆய்வாளர் பி.செல்வம் திருமுருகன் பூண்டி நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அதேபோன்று மற்றொரு துப்புரவு ஆய்வாளர் ராஜ்மோகன் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோன்று தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் பணிபுரிந்த உதயகுமார் உடுமலை நகராட்சி நகரமைப்பு ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த தகவல் நகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • 19 ந் தேதி முதல் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங் நடக்கிறது.
    • காலை 10 மணிக்கு வரும் ஆசிரியர்கள் மாலை 4 மணியை தாண்டிய பின்பும் காத்திருக்க வேண்டியுள்ளது.

    திருப்பூர் :

    புதிய கல்வியாண்டு (2023 - 2024) துவங்க இன்னமும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதால், கவுன்சிலிங் மூலம் ஆசிரியர் பணியிட மாற்ற பணி துவங்கி நடந்து வருகிறது. மாவட்டத்துக்குள் மாறுதல் நிறைவடைந்த நிலையில், கடந்த 19 ந் தேதி முதல் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட கவுன்சிலிங் நடக்கிறது.9 தாலுகாவில் பாட வாரியாக 800 க்கும் அதிகமான ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர். ஆசிரியர் கவுன்சிலிங், இடமாற்ற விபரங்களை அப்டேட் செய்யும் எமிஸ் இணையதள வேகம் குறைவாக உள்ளது. காலை 10 மணிக்கு வரும் ஆசிரியர்கள் மாலை 4 மணியை தாண்டிய பின்பும் காத்திருக்க வேண்டியுள்ளது.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:- கலை, அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுக்கு 17க்கும் அதிகமான பாடங்கள் உள்ளது. 867 ஆசிரியர்கள் இடமாறுதல் ஒப்புதல் வழங்க வேண்டும். கவுன்சிலிங் துவங்கிய நாள் முதல்3 நாட்களில் 200க்கும் குறைவானவர்களுக்கு ஒப்புதல் கிடைக்க பெற்றுள்ளது. இப்படியே சென்றால் கல்வியாண்டு துவங்கும் வரை கவுன்சிலிங் நடத்த வேண்டி இருக்கும். சர்வர் பிரச்னைகளை கலைந்து கவுன்சிலிங் வேகப்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, கவுன்சிலிங் இணையதளம் வேகம் குறைவாக உள்ளது குறித்து தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் மூலம் சென்னைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். மாநிலம் முழுவதும் இதே நிலை இருப்பதாக பதிலளித்தனர். சர்வர் வேகத்தை அதிகரிக்க, சீராக இயக்க தொடர்ந்து கேட்டு வருகிறோம் என்றனர்.

    • மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அதிசய ராஜ், கூடுதல் பொறுப்பாக மாவட்ட உளவுத்துறையை கவனித்து வந்தார்.
    • மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக வெங்கடேஷ் செல்வம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட உளவுத்துறை இன்ஸ்பெக்டராக கோமதி என்பவர் இருந்து வந்தார். சமீபத்தில் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வர்களின் பற்களை உடைத்ததாக எழுந்த புகாரையடுத்து போலீசார் இடமாற்றம் செய்ய ப்பட்டனர்.

    அதில் இன்ஸ்பெக்டர் கோமதியும் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அதிசய ராஜ், கூடுதல் பொறுப்பாக மாவட்ட உளவுத்துறையை கவனித்து வந்தார்.

    இந்நிலையில் இன்ஸ்பெக்டர் அதிசயராஜ் மாவட்ட உளவுத்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக வெங்கடேஷ் செல்வம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் கியூ பிரிவில் பணியாற்றி யவர். திண்டுக்கல்லில் பணியாற்றி வந்த இவர் தற்போது மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • நிர்வாக நலன் கருதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • திருப்பூர் மாவட்ட வருவாய் துறையில் துணை தாசில்தார் நிலையில் உள்ளவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வருவாய் துறையில் துணை தாசில்தார் நிலையில் உள்ளவர்கள் நிர்வாக நலன் கருதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் துணை தாசில்தாராக இருந்த மணிமேகலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளராகவும், திருப்பூர் துணை தாசில்தாராக இருந்த பாண்டீஸ்வரி திருப்பூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு தலைமை உதவியாளராகவும், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராக இருந்த வளர்மதி மடத்துக்குளம் வட்ட வழங்கல் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் கனிமங்கள் துணை தாசில்தாராக இருந்த அருள்குமார் திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராக மாற்றப்பட்டுள்ளார்.

    • வருவாய் ஆய்வாளர் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார்.
    • வீடியோ எடுத்து பரப்பிய இருவரிடம் போலீசார் விசாரித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் டவுன் வருவாய் ஆய்வாளராக தனலட்சுமி (வயது 40) பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 17-ந்தேதி உயரதிகாரிகளுக்கு மதிய உணவை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார். இதை வீடியோ எடுத்த ஒருவர் அதனை சமூகவலைதளங்களில் பரப்பினார்.

    இதுதொடர்பாக வருவாய் ஆய்வாளர் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். வீடியோ எடுத்து பரப்பிய இருவரிடம் போலீசார் விசாரித்தனர். அதில் ரேவந்த் என்பவர் இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார். ஆவணங்கள் முறையாக இல்லாத காரணத்தால் நிராகரித்ததால் கோபமடைந்த ரேவந்த் தனது நண்பருடன் சேர்ந்து வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி செல்போன் மூலம் உயரதிகாரிகளுக்கு சாப்பாடு ஆர்டர் செய்வதை வீடியோ எடுத்து பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    இந்நிலையில், வீடியோ வைரலான நிலையில், உயர் அதிகாரிக்கு சாப்பாடு ஆர்டர் செய்த வருவாய் ஆய்வாளர் தனலட்சுமியை அலங்கியம் ஒன்றியத்துக்கு மாற்றம் செய்து திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் உத்தரவிட்டார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் 23 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தர விட்டு உள்ளார்.
    • நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 23 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தர விட்டு உள்ளார். அதன்படி நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.

    மேலும் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகன், நாமக்கல் மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராதா, பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கும் பணி இட மாற்றம் செய்யப்பட்டனர்.

    பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் பணி யாற்றி வந்த சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்கு மார், திருச்செங்கோடு மது விலக்கு பிரிவிற்கும், நாமக்கல் போலீஸ் நிலை யத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி, வெப்படை போலீஸ் நிலையத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    ஆயில்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் நாமகிரிப்பேட்டைக்கும், மங்களபுரத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மணி திம்ம நாயக்கன்பட்டிக்கும், ஜேடர்பாளையத்தில் பணி யாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிர மணியம் பரமத்திவே லூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • குனியமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
    • கமலக்கண்ணன், சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

    கோவை,

    கோவையில் 11 சப்-இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    குனியமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

    ரத்தினபுரி சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய தனசீலன் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்துக்கும், பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், செல்வபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் பீளமேட்டுக்கும் மாற்றப்ப ட்டனர்.

    பெரியகடை வீதி சப்-இன்ஸ்பெக்டர் கோமதி, மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும, சரவணம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அழகு செல்வி கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சரவணம் பட்டிக்கும், காட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளிராஜ், சாய்பாபா காலனிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

    ரேஸ்கோர்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், வெரைட்டி ஹால் ேபாலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய 17 சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    • கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • பாளை தாலுகா இன்ஸ்பெக்டர் மனோகரன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியா குமரி மாவட்ட ங்களில் பணியாற்றி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி பதவி உயர்வு பெற்றவர்கள் என மொத்தம் 19 பேரை பணியிடமாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    காத்திருப்பு பட்டியில்

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய குமார், கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்ட ராக மாற்றம் செய்யப்பட்டு ள்ளார். அங்கு பணியாற்றிய மகேஷ்வரி, சிவகிரி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

    குமரி மாவட்டம் திருவட்டாரில் பணியாற்றிய ஷேக் அப்துல் காதல் சேரன்மகாதேவிக்கும், கருங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் சுசீந்திர த்திற்கும், அங்கு பணியாற்றிய சாயி லட்சுமி திருவட்டாருக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாளை தாலுகா இன்ஸ்பெக்டர் மனோகரன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

    சைபர் கிரைம்

    நெல்லை மாநகர உளவுப் பிரிவில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை, இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று குமரி மாவட்டம் கருங்கல்லில் பதவியேற்கிறார். தென்காசியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜன் பதவி உயர்வு பெற்று நெல்லை தாலுகா இன்ஸ்பெக்டராகவும், மதுரையில் பணியாற்றிய பிரேம் ஆனந்த், தூத்துக்குடி வடபாகத்திற்கும், கொல்லன்கோடு ரமா, நெலலை மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராகவும், அங்கு பணியாற்றிய ராஜ், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    முத்தையாபுரம் போலீஸ் நிலையத்துக்கு செந்தில் குமார், அங்கு பணியாற்றிய ஜெயசீலன் நாசரேத் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்திற்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் குற்றப்பிரிவு வீரசோலை, விளாத்திகுளத்திற்கும், அங்கு பணியாற்றிய இளவரசு மார்த்தாண்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    காத்திருப்பு பட்டியலில் இருந்த ராஜா கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்பு பட்டியலில் இருந்த சாந்தி கோவில் பட்டிக்கும், அங்கு பணியாற்றிய செல்லமுத்து காத்திருப்பு பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • மொத்தம் 19 பேர் பணியிடம் மாற்றப்பட்டிருக்கின்றனர்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலரை மாவட்டத்திற்கு வேறு போலீஸ் நிலையங்களுக்கு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு சிலர் ஒரே சப்-டிவிஷனுக்குள்ளேயும், சிலர் பிற சப்-டிவிஷன்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதில் மொத்தம் 19 பேர் பணியிடம் மாற்றப்பட்டிருக்கின்றனர். இதற்கான உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பிறப்பித்துள்ளார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் வழங்கி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணிபுரியும் அலுவலர்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் வழங்கி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பணியிடம் குறித்த விவரம் பின்வருமாறு, 

    ரவிச்சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கள்ளக்குறிச்சி, ரங்கராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ரிஷிவந்தியம், ஆனந்தன் கண்காணிப்பாளர் கள்ளக்குறிச்சி, துரைசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிப் பிரிவு அலுவலக மேலாளரார் கள்ளக்குறிச்சி, செல்வபோதகர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) திருநாவலூர், செல்வகணேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சங்கராபுரம், ஆறுமுகம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) கள்ளக்குறிச்சி, நடராஜன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திருநாவலூர், கண்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) உளுந்தூர்பேட்டை, ரவிசங்கர் கண்காணிப்பாளர் ( TANFINET) கள்ளக்குறிச்சி, செல்லதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சங்கராபுரம, ராஜேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) உளுந்தூர்பேட்டை, சீனிவாசன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தியாகதுருகம், பன்னீர்செல்வம் கண்காணிப்பாளர் உதவி இயக்குனர் அலுவலகம் கள்ளக்குறிச்சி. துரைமுருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரிஷிவந்தியம், செந்தில் முருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) தியாகதுருகம், இந்திராணி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சின்னசேலம் ஆகிய இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • புதிய பணியிடத்தில் சேர தவறினாலோ தமிழ்நாடு குடிமை பணிகள் விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • விபரங்களை சம்பந்தப்பட்ட அலுவலக தலைவர்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    நிர்வாக வசதிகளுக்காக வருவாய் ஆய்வாளர்கள் இடம் மாறுதல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள், உள்வட்ட வருவாய் ஆய்வாளர் 21 பேரை பணியிட மாறுதல் செய்து மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் உத்தரவிட்டுள்ளார்.

    நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல்கள் மற்றும் பணி நியமனங்கள் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும், மேல் முறையீடுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    இடம் மாறுதலை தவிர்ப்பதற்காக முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் விடுப்பில் சென்றாலோ அல்லது புதிய பணியிடத்தில் சேர தவறினாலோ தமிழ்நாடு குடிமை பணிகள் விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பணிமாறுதல் செய்யப்பட்டுள்ள உள் வட்ட வருவாய் ஆய்வாளர்கள், புதிய பணியிடத்தில் இணையும் வகையில் அவர்களை உடனடியாக விடுவித்து, அவ்விபரங்களை சம்பந்தப்பட்ட அலுவலக தலைவர்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×