search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடமாறுதல்"

    • 19 ந் தேதி முதல் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங் நடக்கிறது.
    • காலை 10 மணிக்கு வரும் ஆசிரியர்கள் மாலை 4 மணியை தாண்டிய பின்பும் காத்திருக்க வேண்டியுள்ளது.

    திருப்பூர் :

    புதிய கல்வியாண்டு (2023 - 2024) துவங்க இன்னமும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதால், கவுன்சிலிங் மூலம் ஆசிரியர் பணியிட மாற்ற பணி துவங்கி நடந்து வருகிறது. மாவட்டத்துக்குள் மாறுதல் நிறைவடைந்த நிலையில், கடந்த 19 ந் தேதி முதல் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட கவுன்சிலிங் நடக்கிறது.9 தாலுகாவில் பாட வாரியாக 800 க்கும் அதிகமான ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர். ஆசிரியர் கவுன்சிலிங், இடமாற்ற விபரங்களை அப்டேட் செய்யும் எமிஸ் இணையதள வேகம் குறைவாக உள்ளது. காலை 10 மணிக்கு வரும் ஆசிரியர்கள் மாலை 4 மணியை தாண்டிய பின்பும் காத்திருக்க வேண்டியுள்ளது.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:- கலை, அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுக்கு 17க்கும் அதிகமான பாடங்கள் உள்ளது. 867 ஆசிரியர்கள் இடமாறுதல் ஒப்புதல் வழங்க வேண்டும். கவுன்சிலிங் துவங்கிய நாள் முதல்3 நாட்களில் 200க்கும் குறைவானவர்களுக்கு ஒப்புதல் கிடைக்க பெற்றுள்ளது. இப்படியே சென்றால் கல்வியாண்டு துவங்கும் வரை கவுன்சிலிங் நடத்த வேண்டி இருக்கும். சர்வர் பிரச்னைகளை கலைந்து கவுன்சிலிங் வேகப்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, கவுன்சிலிங் இணையதளம் வேகம் குறைவாக உள்ளது குறித்து தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் மூலம் சென்னைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். மாநிலம் முழுவதும் இதே நிலை இருப்பதாக பதிலளித்தனர். சர்வர் வேகத்தை அதிகரிக்க, சீராக இயக்க தொடர்ந்து கேட்டு வருகிறோம் என்றனர்.

    • ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
    • அதன்படி நடப்பாண்டிற்கான கலந்தாய்வு வருகிற 8-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான கலந்தாய்வு வருகிற 8-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கலந்தாய்வில் பங்குபெறும் ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எமிஸில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

    ெதாடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் உபரி பணியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் தமிழ்-12, ஆங்கிலம்-3, கணிதம்-13, அறிவியல் -17, மறறும் சமூக அறிவியல் -4 பணியிடங்கள் என 49 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதே போல் நாமக்கல் மாவட்டத்தில் 5, தருமபுரி மாவட்டத்தில் 45, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 179 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதுபோல் உபரியாக கண்டறி யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு வருகிற 17-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலியாக உள்ள பணியிடங்களுக்கும், கூடுதல் தேவையுள்ள இடங்க ளுக்கும் பணிமூப்பு அடிப்ப டையில் கலந்தாய்வு நடத்தப்ப டும். மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு வருகிற 20-ந்தேதி நடைபெ றும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஈரோடு வேப்பம்பாளையம் ஏ. இ.டி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று பட்டதாரி ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் காலை ஆன்லைன் மூலம் தொடங்கியது.
    • அதைத்தொடர்ந்து வரும் 13-ந் தேதி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.

    ஈரோடு:

    தமிழக பள்ளி கல்வித்துறையில் ஏற்கனவே நடந்த இடமாறுதல் கவுன்சி லிங்கில் விடுபட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் இன்றும், நாளையும் நடக்கிறது.

    ஈரோடு வேப்பம்பாளையம் ஏ. இ.டி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. அதன்படி இன்று பட்டதாரி ஆசிரியர் களுக்கான கவுன்சிலிங் காலை ஆன்லைன் மூலம் தொடங்கியது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் வந்திருந்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் பார்வை யிட்டார்.

    இதைத் தொடர்ந்து நாளை இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான பணியிடை மாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வரும் 12-ந் தேதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்க உள்ளது. உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    அதைத்தொடர்ந்து வரும் 13-ந் தேதி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. பட்டதாரி ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இதில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    தொடர்ந்து 14, 15-ந் தேதி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. இதில் இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    அரசு பள்ளி ஆசிரியர்கள் இட மாறுதலுக்கான கலந்தாய்வு வருகிற 12-ந் தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது.
    சென்னை:

    தமிழ்நாடு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இது குறித்து பள்ளிகல்வித்துறை அறிவிபு வெளியிட்டுள்ளது.

    அதில் ஆசிரியர்கள் இட மாறுதலுக்கான கலந்தாய்வு (கவுன்சிலிங்) வருகிற 12-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது. அதற்கான விண்ணப்பங்கள் தலைமை கல்வி அலுவலகங்களில் வருகிற 7-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    இடமாறுதல் பல பிரிவுகளின் கீழ் நடைபெறுகிறது. மாவட்டங்களுக்குள்ளான இடமாறுதல்களை மாவட்ட கல்வி அதிகாரிகள் நடத்துவார்கள். மாவட்டங்களுக்கு இடையேயான இடமாறுதல்களை முதன்மை கல்வி அதிகாரி நடத்துவார். நிர்வாக ரீதியில் மாவட்டங்களுக்கு இடையேயான இடமாறுதல்களை கல்வித்துறை இணை இயக்குனர் நடத்துவார்.

    இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்காக இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த கலந்தாய்வு மே மாதம் கோடை விடுமுறையின் போது நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கால தாமதமாகியுள்ளது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பு கலந்தாய்வு நடைபெறுகிறது. இது ஜூன் மாதம் முழுவதும் நடைபெறும்.

    இதனால் பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்படும். என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மே மாதத்தில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என பல ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளன. இதனால் வகுப்புகள் தொடங்கிய நிலையில் ஆசிரியர்கள் இடம் மாறி சென்றால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என தமிழ்நாடு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் அருளானந்தம் தெரிவித்துள்ளார்.
    ×