என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
திருப்பூர் மாவட்டத்தில் 4 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
- நிர்வாக நலன் கருதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- திருப்பூர் மாவட்ட வருவாய் துறையில் துணை தாசில்தார் நிலையில் உள்ளவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட வருவாய் துறையில் துணை தாசில்தார் நிலையில் உள்ளவர்கள் நிர்வாக நலன் கருதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் துணை தாசில்தாராக இருந்த மணிமேகலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளராகவும், திருப்பூர் துணை தாசில்தாராக இருந்த பாண்டீஸ்வரி திருப்பூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு தலைமை உதவியாளராகவும், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராக இருந்த வளர்மதி மடத்துக்குளம் வட்ட வழங்கல் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளனர்.
திருப்பூர் கனிமங்கள் துணை தாசில்தாராக இருந்த அருள்குமார் திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராக மாற்றப்பட்டுள்ளார்.
Next Story






