search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deputy Tahsildars"

    • உஷாராணி நீதித் துறை பயிற்சி முடித்துவிட்டு தற்போது காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பொறுப்பேற்றுக்கொண்டாா்.
    • துணை தாசில்தாராக இருந்த மோகனன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணியிட மாற்றப்பட்டாா்.

    காங்கயம்:

    காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த மோகனன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணியிட மாற்றப்பட்டாா்.

    இதையடுத்து காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியாற்றிய கோபால் பதவி உயா்வு பெற்று அதே அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.மேலும் உஷாராணி நீதித் துறை பயிற்சி முடித்துவிட்டு தற்போது காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பொறுப்பேற்றுக்கொண்டாா்.

    • வருவாய் துறையில் துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வருவாய் துறையில் துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த பானுமதி காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், பல்லடம் வட்ட வழங்கல் அதிகாரியாக இருந்த மயில்சாமி மடத்துக்குளம் சமூக பாதுகாப்பு திட்ட தனித் தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    • நிர்வாக நலன் கருதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • திருப்பூர் மாவட்ட வருவாய் துறையில் துணை தாசில்தார் நிலையில் உள்ளவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வருவாய் துறையில் துணை தாசில்தார் நிலையில் உள்ளவர்கள் நிர்வாக நலன் கருதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் துணை தாசில்தாராக இருந்த மணிமேகலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளராகவும், திருப்பூர் துணை தாசில்தாராக இருந்த பாண்டீஸ்வரி திருப்பூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவு தலைமை உதவியாளராகவும், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராக இருந்த வளர்மதி மடத்துக்குளம் வட்ட வழங்கல் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் கனிமங்கள் துணை தாசில்தாராக இருந்த அருள்குமார் திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராக மாற்றப்பட்டுள்ளார்.

    • திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தலைமை உதவியாளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
    • பல்லடம் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செந்தில்பிரபு, தாராபுரம் வட்ட வழங்கல் அலுவலராக இடம்மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பூர்:

    நிர்வாக வசதிகளுக்காக, திருப்பூர் மாவட்டத்தில், 4 துணை தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்

    அதன்படிபல்லடம் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செந்தில்பிரபு, தாராபுரம் வட்ட வழங்கல் அலுவலராக இடம்மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.தாராபுரம் வட்ட வழங்கல் அலுவலரான தேன்மொழி, பல்லடம் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும், பல்லடம் வட்ட வழங்கல் அலுவலர் சையது ராபியம்மாள், உடுமலை தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும் இடம்மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

    உடுமலை தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சாந்தி, திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தலைமை உதவியாளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள பணி நியமனங்கள் தொடர்பாக, எவ்வித கோரிக்கைகள் மற்றும் மேல் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.மேற்கண்ட அலுவலர்கள், மாற்றுப்பணியிடம் கோரி மனு செய்தாலோ அல்லது மாறுதலைதவிர்க்கும் வகையில் விடுப்பு கேட்டு விண்ணப்பித்தாலோ, மாறுதல் செய்த பணியிடத்தில் சேர தவறினாலோ, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் துணை தாசில்தார்கள் சம்பவ இடத்தில் இல்லாமல் 10 கி.மீ. தொலைவில் இருந்தனர் என வெளியாகி இருக்கும் தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. #Thoothukudifiring
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22, 23-ந் தேதிகளில் நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

    3 இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.



    போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதால் மிகப்பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக கோர்ட்டுகளில் 11 வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற தொடங்கி உள்ளது. மேலும் மனித உரிமை ஆணையம், ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை ஆகியவையும் நடந்து வருகின்றன.

    ஆனால் 13 பேர் பலிக்கு காரணமான துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்பது இன்னமும் மர்மமாக உள்ளது. இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், “துணைதாசில்தார்கள் கண்ணன், சேகர், சந்திரன் ஆகிய மூவரும் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து அவர்கள் மூவரையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்க நேற்று ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் துணை தாசில்தார்கள் போலீசார் தயாரித்த அறிக்கையில் முதலில் கையெழுத்திடவில்லை என்று ஒரு தகவல் வெளியானது. பிறகு கையெழுத்திட்டு இருப்பதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் துணை தாசில்தார்கள் கண்ணன், சேகர், சந்திரன் மூவரும் துப்பாக்கி சூடு நடந்த சமயத்தில் எங்கிருந்தனர் என்பதை ஆங்கில நாளிதழ் ஒன்று ஆய்வு செய்து தகவல் வெளியிட்டுள்ளது. அதில் 3 தாசில்தார்களும் துப்பாக்கி சூடு சம்பவ இடத்திலேயே இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

    முதல் தகவல் அறிக்கையில் மே 22-ந்தேதி திரேஸ்புரம் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்த துணை தாசில்தார் கண்ணன் உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் அவர் திரேஸ்புரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இருந்ததாக அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அதுபோல மே 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் அருகில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு துணை தாசில்தார் (தேர்தல்) சேகர் உத்தரவிட்டதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் அவர் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாத்திமா நகர், லயன்டவுன் பகுதியில் இருந்ததாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    23-ந்தேதி அண்ணா நகரில் துப்பாக்கி சூடு நடத்த துணை தாசில்தார் சந்திரன் உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது. அவர் அருகில் உள்ள பழைய பஸ் நிலையம் அருகில் இருந்துள்ளார்.

    துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் துணை தாசில்தார்கள் சம்பவ இடத்தில் அன்றைய தினம் இல்லை என வெளியாகி இருக்கும் தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இதுகுறித்து உயர் அதிகாரிகள் யாரும் பதிலளிக்க மறுக்கிறார்கள்.

    துப்பாக்கி சூடு சம்பந்தமாக பல்வேறு தரப்பினர் விசாரணை நடத்தி வருவதால் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்க இயலாது என்றே அரசு மூத்த அதிகாரிகள் சொல்கிறார்கள்.

    இந்த நிலையில் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் துணை தாசில்தார்களில் ஒருவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு தனது பெயரை தெரிவிக்காமல் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் அவர், “யாரையும் கொல்ல வேண்டும் என்பது எங்கள் விருப்பம் அல்ல. புகாரில் நான் எல்லா தகவல்களையும் கூறி உள்ளேன்” என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், “தூத்துக்குடியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து 1908-ம் ஆண்டு போராட்டம் நடந்தபோதும், சுதந்திர போராட்ட வீரர் செக்கு இழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் போராட்டங்கள் நடத்திய காலங்களிலும் இந்த மாதிரி ரத்த கறை ஏற்பட்டது இல்லை. இப்போது 13 பேர் பலியானது வேதனை தருகிறது. அவர்களை சுட்ட போலீசார் அழுததை என் கண்ணால் நான் பார்த்தேன்” என்றார்.

    சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.சந்துரு இதுபற்றி கூறுகையில், “துணை தாசில்தார்கள் ஒரு இடத்தில் இல்லாத பட்சத்தில் அங்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட முடியாது” என்று தெரிவித்தார். #Thoothukudifiring

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட துணை தாசில்தார்கள் 3 பேரையும் வழக்கில் சேர்க்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFiring #ThoothukudiFiringOrder #MaduraiHighCourt
    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டம் கலவரமாக வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில்  பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

    இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த முடியாது என தெரிவித்தனர்.



    ‘தூத்துக்குடியில் துப்பாக்கிடு நடத்தப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அதை நியாயப்படுத்த முடியாது. இதற்கு உத்தரவிட்ட கண்ணன், சந்திரன், சேகர் ஆகிய மூன்று துணை தாசில்தார்களையும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த மூன்று பேரும் பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #ThoothukudiFiring #ThoothukudiFiringOrder #MaduraiHighCourt
     
    ×