திருப்பூரில் 3 தாசில்தார்கள் இடமாற்றம் - கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவு

கலெக்டர் தாசில்தார் பணியிடங்களை மாற்றியும், பதவி உயர்வு வழங்கியும் உத்தரவு பிறப்பித்தார்.கலெக்டர் அலுவலக துணை தாசில்தாராக இருந்த ஜெயமாலா, தாராபுரம், தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் மூன்று தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தாசில்தார் பணியிடங்களை மாற்றியும், பதவி உயர்வு வழங்கியும் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, காங்கயம் மண்டல துணை தாசில்தாராக இருந்த மோகனன், தாராபுரம், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளராகவும், இப்பணியிடத்தில் இருந்த ஜெகதீஸ்குமார், திருப்பூர் 'டாஸ்மாக்' கிடங்கு, மேலாளாராக மாற்றப்பட்டார். கலெக்டர் அலுவலக (டி.என்.ஆர்.எஸ்.பி., நிலை - 2) துணை தாசில்தாராக இருந்த ஜெயமாலா, தாராபுரம், தனிதாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com