search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thoothukudi"

    • தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.
    • மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக, தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.

    ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை உள்ள ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அம்மாவட் ஆட்சியர் அறிவறுத்தியுள்ளார்.

    • ஏற்கனவே ஜனவரி 2ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
    • நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிற மின் நுகர்வோருக்கும் அவகாசம் பொருந்தும்.

    தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு மின் கட்டணத்தை அபராதம் இல்லாமல் செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    வரும் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

    வீடு, வணிக பயன்பாடு, தொழிற்சாலைகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிற மின் நுகர்வோருக்கும் அவகாசம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இரு மாவட்ட மக்களுக்கும் ஏற்கனவே ஜனவரி 2ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.
    • நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 30 மற்றும் 31ம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    • மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களில் நடைபெறுகிறது.
    • மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த ஆவணங்கள், சான்றுகளை பெற ஏதுவாக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    டிசம்பர் 28ம் தேதி மற்றும் 29ம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

    அதன்படி, தூத்துக்குடி வட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களில் நடைபெறுகிறது.

    இதேபோல், மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டது.
    • மின்வினியோகம் மற்றும் தொலைதொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன.

    தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த 16, 17 மற்றும் 18-ம் தேதிகளில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி தீர்த்தது. மிக குறைந்த நேரத்தில் அதீத கனமழை பெய்ததால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டது.

    இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்தன. தூத்துக்குடி நகரம் மட்டுமின்றி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், தென்திருப்பேரை, ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆழ்வார்திருநகரி, நாசரேத் சுற்றுவட்டார பகுதிகள் உள்பட மாவட்டம் முழுக்க ஆயிரத்திற்கும் அதிக கிராமங்களை வெள்ளம் சூழந்தது.

     


    இரண்டு மாவட்டங்களிலும் ஏராளமான இடங்களில் பாலங்கள் உடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் போக்குவரத்து தடைப்பட்டது. மேலும் மின்வினியோகம், தொலைதொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டது. மழை நின்று ஒரு வாரத்திற்கும் மேலாகி விட்ட நிலையில், தூத்துக்குடியில் முழுமையாக மின்சேவை வழங்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக மின் வினியோகம் வழங்கப்பட்டு விட்டதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

    • நிவாரண பொருட்களை சிரமமின்றி கொண்டு செல்ல ஏதுவாக நடவடிக்கை.
    • தூத்துக்குடியில் பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி இம்மாதம் (டிசம்பர்) 31ம் தேதி வரை சுங்க கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை சிரமமின்றி கொண்டு செல்ல ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெருவாரியான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • சக்திவேல் தனது வீட்டு அருகே நின்ற போது அங்கு வந்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது.
    • தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு கீதாஜீவன் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 21) கூலித் தொழிலாளி.

    அரிவாள் வெட்டு

    இவர் தனது வீட்டு அருகே நின்ற போது அங்கு வந்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது.

    இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் தூத் துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ் மேற்பார்வையில், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட னர்.

    6 பேர் கைது

    இதில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த வேல்முருகன், கண்ணன், முள்ளக்காடு முனியசாமிநகர் சிவா, பாரதிநகர் கெளிவின்ஸ், தலைவன் வடலியை முத்துக்குமார் மற்றும் இளஞ்சிரார் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 6 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் மற்றும் சாலைகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • ஆய்வின்போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் உடன்இருந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு, கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 4, 5-வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணராஜபுரம் மற்றும் முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் மற்றும் சாலைகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், வட்ட துணை செயலாளர் சந்தனமாரி, கவுன்சிலர்கள் நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மார்சலின், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்

    • தூத்துக்குடியில் டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பார்வையில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • விசாரணையில் விக்னேஸ்வரன் என்ற விக்கி விற்பனைக்காக காரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி யில் ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பார்வையில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தூத்துக்குடி ராஜகோபால்நகர் பகுதியில் காருடன் சந்தே கத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற விக்கி (வயது 33) என்பதும், அவர் விற்பனைக்காக காரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா பதுக்கிய காரையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருமாள் கோவிலுக்கு சுமார் 6 கோடி மதிப்பில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • இந்த கோவிலில் 63 கல் தூண்களுடன் 35 ஆயிரம் சதுரடி பரப்பளவில் பாரம்பரிய சாஸ்திர முறைப்படி பணிகள் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் புகழ் பெற்ற பழமையான பெருமாள் கோவில் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    கும்பாபிஷேக பணி

    இந்த கோவிலில் 2000-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் கும்பாபிஷேக பணிகள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் பெருமாள் கோவிலுக்கு சுமார் 6 கோடி மதிப்பில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    அதற்கான பணிகளை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த கோவிலில் 63 கல் தூண்களுடன் 35 ஆயிரம் சதுரடி பரப்பளவில் பாரம்பரிய சாஸ்திர முறைப்படி பணிகள் நடைபெறுகிறது.

    தற்போது பெருமாள் கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு, சாமி தரிசனம் செய்து, கல் மண்டபத்திற்கான கல் தூண் நிறுவும் பணியை தொடங்கி வைத்து, பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகிய கோவில் கட்டுமானப் பணியையும் தொடங்கி வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில், அறநிலை யத்துறை இணை ஆணையர் அன்புமணி, செயல்அலுவலர் தமிழ்செல்வி, ஆய்வாளர் ருக்குமணி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சிவன் கோவில் அறங்காவல் குழு தலைவர் கந்தசாமி, தெப்பகுளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா அறிவழகன், ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் அறங்காவலர் இளங்குமரன், சிவன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் ஆறுமுகம், ஜெயலெட்சுமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மந்திரமூர்த்தி, முருகேஸ்வரி, ஜெயபால், பாலசங்கர், பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்ட ராமன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், பொதுகுழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், வட்டச் செயலாளர் கங்காராஜேஷ், வட்டபிரதிநிதி பாஸ்கர், தொழிலதிபர்கள் அழகர் ஜுவல்லர்ஸ் ஜெயராமன், கமலஹாசன் ஜுவல்லர்ஸ் கமலஹாசன், வேலவன் ஹைபர் மார்க்கெட் மேலாளர் சங்கர், முருகன், அ.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, கருணா, மணி, வேல்பாண்டி, அற்புதராஜ், அல்பர்ட், நெல்லையப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • இந்திரா காந்தி சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேறும் வடிகால்கள் ஆகியவற்றை மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • வீரநாயக்கன் தட்டில் புதியதாக கட்டப்பட்ட மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    பி.எம்.சி. பள்ளிக்கு செல்லும் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், மில்லர்புரம் ஹவுசிங் போர்டு மற்றும் இந்திரா காந்தி சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேறும் வடிகால்கள் ஆகியவற்றை மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த பணி இரவு, பகலாக நடைபெற்று வருகின்றது. இதே போல பி.எம்.சி பள்ளியை சுற்றியுள்ள பகுதிகள், பாரதி நகர், ஹவுசிங் போர்டு, ஆர்.கே.கார்டன், பால்பாண்டி நகர், சின்னமணி நகர், மற்று சிலோன் காலனி ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் மற்றும் இரவு, பகலாக நடைபெற்று வரும் மழை நீர் அகற்றும் பணிகளையும் மேயர் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து வீரநாயக்கன் தட்டில் ஸ்மார்ட் வகுப்பறை யுடன் புதியதாக கட்டப்பட்ட மாநகராட்சி தொடக்கப் பள்ளி பணிகள் நிறை வடைந்ததால் மாண வர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

    அதனையும் கட்டபொம்மன் நகர், அத்திமரபட்டி, ஜெ.எஸ் நகர், ராஜூ நகர், சாமி நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளையும் சாந்தி நகர், சக்தி நகர்,ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்ததையும் லூர்தம்மாள்புரம், கலைஞர் நகர், மற்றும் மேரிஸ் காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர் அகற்றும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், தி.முக. பகுதி செயலாளரும், மண்டல தலைவர்களுமான சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் பச்சிராஜன், சரவணக்குமார், முத்துவேல், பொன்னப்பன்,மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மேயரின் நேர்முக உதவி யாளர் ரமேஷ், பிரபாகரன், ஜோஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள தாழ்வான சில இடங்களில் மழைநீர் தேங்கியது.
    • தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வேகமாக நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள தாழ்வான சில இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஒவ்வொரு பகுதியாக அதிகாரிகளுடன் சென்று மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், இந்த பகுதிகளில் துரித நடவடிக்கை எடுத்து வருவது மட்டுமின்றி சில பகுதிகளுக்கு தனது சொந்த செலவில் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து, சில பகுதிகளுக்கு ஊழியர்களை நியமித்து, நடைபெறும் பணிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிக்கும் அதிகாரிகளையும், கட்சியினரையும் தொடர்பு கொண்டு அப்பகுதியில் நடைபெறும் பணிகள் என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்தும் அவ்வப்போது விசாரித்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட அன்னை தெரசா மீனவர் காலனி, பாக்கியநாதன் விளை, தஸ்நேவிஸ் நகர், பொன்சுப்பையாநகர், 7-வது வார்டுக்குட்பட்ட கலைஞர்நகர், லூர்தம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாக தகவல் கிடைத்தவுடன், அப்பகுதிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டு, மழைநீரை விரைவாக வெளியேற்றுவதற்கான பணிகளை செய்தார். மேலும், கலைஞர்நகர் மற்றும் பாக்கியநாதன் விளை பகுதிகளில் உள்ள மழைநீரை வெளியேற்றும் மின் மோட்டார் அறையை ஆய்வு செய்தார்.

    மேலும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

    இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.. அதனை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வேகமாக நடைபெற்று வருகிறது.

    மழைநீர் எங்கெங்கு தேங்கி இருக்கிறதோ அங்கு மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவு கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், கவுன்சிலர் ஜெயசீலி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டபிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, அல்பர்ட் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×