search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "test match"

    • தென் ஆப்பிரிக்கா 37 ரன் எடுப்பதற்குள் (18.3 ஓவர்) 3 விக்கெட்டை இழந்தது.
    • உஸ்மான் கவாஜாவுக்கு இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

    முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன் குவித்து இருந்தது.

    தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் சுமித் ஆகி யோர் சதம் அடித்தனர். சுமித் 104 ரன்னும், டிரெவிஸ் ஹெட் 70 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கவாஜா 195 ரன்னும், ரென்ஷா 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    நேற்றைய 3-வது நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    இன்றைய 4-வது நாள் ஆட்டமும் மழையால் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகே ஆட்டம் தொடங்கியது.

    ஆஸ்திரேலியா அதே ரன்னில் அதாவது 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்னில் 'டிக்ளேர்' செய்தது. உஸ்மான் கவாஜாவுக்கு இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார். இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது.

    தென் ஆப்பிரிக்கா 37 ரன் எடுப்பதற்குள் (18.3 ஓவர்) 3 விக்கெட்டை இழந்தது. கேப்டன் எல்கர் 15 ரன்னில் ஹாசல்வுட் பந்திலும், எர்வீ 18 ரன்னில் லயன் பந்திலும், கிளாசன் 2 ரன்னில் கம்மின்ஸ் பந்தி லும் ஆட்டம் இழந்தனர்.

    ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்டிலும் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 8வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரியும், கேமரூனும் 100 ரன் சேர்த்தனர்.
    • அலெக்ஸ் கேரி 111 ரன்னில் அவுட் ஆனார். கேமரூன் கிரீன் 51 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா  நேற்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன் குவித்து இருந்தது.

    டேவிட் வார்னர் தனது 100வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். அவர் 200 ரன்னில் காயத்தால் வெளியேறினார். ஸ்டீவ் சுமித் 85 ரன் எடுத்தார். டிரெவிஸ் ஹெட் 48 ரன்னும், அலெக்ஸ் கேரி 9 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 

    இன்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. ஹெட் 7 பவுண்டரி , 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அவர் 51 ரன் எடுத்து இருந்தபோது ஆட்டம் இழந்தார்.

    6வது வீரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சிறப்பாக ஆடி சதம் அடித்தார். அவர் 133 பந்தில் 13 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 14வது டெஸ்டில் விளையாடும் அலெக்ஸ் கேரிக்கு இது முதல் சதமாகும்.

    இதற்கு முன்பு 93 ரன் எடுத்ததே அதிகபட்சமாகும். 8வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரியும், கேமரூனும் 100 ரன் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.

    ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இது தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோரை விட 386 ரன் கூடுதலாகும். அலெக்ஸ் கேரி 111 ரன்னில் அவுட் ஆனார். கேமரூன் கிரீன் 51 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    • வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 6 விக்கெட்டுகளுடன் இந்திய அணி இன்று களம் இறங்கியது.
    • 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் அய்யர், அஷ்வின் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தலா 87 ரன்களும், 71 ரன்களும் எடுத்தனர்.

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது.

    வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன் குவித்தது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் ஆடியது. அந்த அணி 2-வது இன்னிங்சில் 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 145 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்னும், ஜாகீர் ஹசன் 51 ரன்னும் எடுத்தனர். அக்ஷர் படேல் 3 விக்கெட்டும், அஸ்வின், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    145 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. ஆனால் 37 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகள் சரிந்தன.

    சுப்மன் கில் 7 ரன்னிலும், புஜாரா 6 ரன்னிலும் , விராட் கோலி ஒரு ரன்னி லும் சுழற்பந்து வீச்சாளர் மெகிதி ஹசன் மிராஸ் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள். கேப்டன் லோகேஷ் ராகுல் 2 ரன்னில் சகீப்-அல்-ஹசன் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்து இருந்தது. அக்‌ஷர் படேல் 26 ரன்னும், ஜெய்தேவ் உனட்கட் 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 100 ரன் தேவை கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து ஆடியது.

    அதே நேரத்தில் 6 விக்கெட்டை கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில் வங்காளதேசம் தொடர்ந்து பந்து வீசியது.

    மெகிதி ஹசன் மிராஸ் தொடர்ந்து அபாரமாக பந்து வீசி இந்திய வீரர்களை திணறடித்தார்.

    ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் ஜெய்தேவ் உனட்கட் 13 ரன்னில் சகீப் அல் ஹசன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் ஏமாற்றம் அளித்தார். அவர் 9 ரன்னில் வெளியேறினார். அவர் முதல் இன்னிங்சில் 93 ரன் எடுத்து இருந்தார். அதை தொடர்ந்து அக்‌ஷர் படேலும் 34 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இந்த இருவரையும் மெகிதி ஹசன் மிராஸ் அவுட் செய்தார்.

    74 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 7 விக்கெட் களை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

    8-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர்-அஸ்வின் ஜோடி ஆடியது. விக்கெட் இழக்காமல் இருக்கும் வகையில் இரு வரும் நிதானமாக ஆட் டத்தை வெளிப்படுத்தினர்.

    இந்த ஜோடி தொடக்கத்தில் ஒவ்வொரு ரன்னாக எடுத்த நிலையில் நேரம் செல்ல செல்ல பவுண்டரிகளை விளாசினர். இருவரின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறியது. இந்திய அணி 47 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 147 எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அஸ்வின் 62 பந்தில் 42 ரன்னுடனும் (4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யார் 46 பந்தில் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 2போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

    முதல் டெஸ்டில் இந்திய அணி 188 ரன் வித்தி யாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    • வங்காளதேச அணி முதலில் களமிறங்கி உள்ளது.
    • இந்திய கேப்டன் ரோகித் சர்மா இடதுகை விரலில் ஏற்பட்ட காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை.

    வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்தநிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா அருகே உள்ள மிர்புரில் இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, வங்காளதேச அணி முதலில் களமிறங்கி உள்ளது.

    இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு மாற்றாக ஜெய்தேவ் உனத்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா இடதுகை விரலில் ஏற்பட்ட காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை. காயம் குணமடையாததால் 2-வது டெஸ்டில் இருந்தும் விலகி விட்டார். இதனால் இந்திய அணியின் கேப்டனாக லோகேஷ் ராகுல் செயல்படுகிறார்.

    • கேப்டன் ரோகித் சர்மா கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் விலகியதால் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.
    • மிடில் வரிசையில் விராட் கோலி, துணை கேப்டன் புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர் வலுசேர்க்கிறார்கள்.

    வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

    ஒரு நாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் சொதப்பினாலும் கடைசி ஆட்டத்தில் இஷான் கிஷனின் இரட்டை சதமும், விராட் கோலியின் சதமும் இந்தியாவுக்கு 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தது. அதே உத்வேகத்துடன் டெஸ்ட் தொடரை நமது வீரர்கள் எதிர்கொள்கிறார்கள்.

    கேப்டன் ரோகித் சர்மா கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் விலகியதால் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார். தொடக்க ஆட்டக்காரராக சுப்மான் கில்லுடன், ராகுல் ஆடுவார் என்று தெரிகிறது. வங்காளதேச ஏ அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு சதங்கள் அடித்த புதுமுகம் அபிமன்யு ஈஸ்வரன் பெயரும் பரிசீலனையில் உள்ளது. மிடில் வரிசையில் விராட் கோலி, துணை கேப்டன் புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர் வலுசேர்க்கிறார்கள்.

    அதன்படி, இன்று காலை 9 மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில், முன்னதாக போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்ததை அடுத்து, வங்காளதேசத்திற்கு எதிராக முதலில் களமிறங்குகிறது.

    உள்ளூர் போட்டியில் விளையாடிய மணிப்பூர் இளைஞர் ஒருவர் மூன்று ஹாட்ரிக்குடன் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். #CoochBeharTrophy #Manipur #RexRajkumarSingh
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் நகரில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட கூச்பெகர் டிராபியில் அருணாசலப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் அணிகள் மோதின.

    இதில் முதலில் ஆடிய அருணாசல் முதல் இன்னிங்சில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய மணிப்பூர் அணி 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இந்நிலையில், 16 ரன்கள் முன்னிலையுடன் அருணாசல் இரண்டாவது இன்னிங்சை ஆட தொடங்கியது. மணிப்பூர் வீரர் இடதுகை பந்துவீச்சாளர் ரெக்ஸ் ராஜ்குமார் சிங் (18),  எதிரணியை துல்லியமாக பந்து வீசி திணறடித்தார்.



    இவர் 9.5 ஓவர்கள் வீசி 11 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் 3 முறை ஹாட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 6 மெய்டன் ஓவர்களையும் வீசியுள்ளார்.

    இதையடுத்து, அருணாசல் அணி 2வது இன்னிங்சில் 36 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய மணிப்பூர் 7.5 ஓவரில் வெற்றிக்கு தேவையான 55 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #CoochBeharTrophy #Manipur #RexRajkumarSingh
    அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி 12 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. #AUSvIND #RohitSharma
    அடிலெய்டு:

    இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை அடிலெய்டில் துவங்குகிறது. இப்போட்டிக்கான 12 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி ஆடும் லெவனையே அறிவித்துவிட்டது.  இந்திய அணியில், ரோகித் சர்மாவா, ஹனுமா விஹாரியா யார் ஆடப்போகிறார்கள் என்பது நாளை தெரியும்.

    “உள்நாட்டில் எந்த ஒரு ஆஸ்திரேலிய அணியையும் பலவீனம் என்று கூறமுடியாது.  எந்த ஒரு அணியைப் பற்றியும் முன் கூட்டிய அபிப்ராயத்தை உத்தரவாதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. என்ன நடந்தாலும் திறமை இருக்கிறது. நாம் என்ன பேசினாலும் செய்தாலும் கடைசியில் திறமைதான் முக்கியம்” என்று கூறிய இந்திய கேப்டன் விராட் கோலி 12 வீரர்கள் பெயரை வெளியிட்டார்.

    இரு அணிகளும் வெளியிட்ட வீரர்கள் விவரம் வருமாறு

    இந்தியா:- (கேப்டன்) விராட் கோலி, முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா,  ரஹானே, விகாரி, ரோகித் சர்மா, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சமி, இசாந்த் சர்மா, பும்ரா.

    ஆஸ்திரேலியா:- ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவ்ஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கம்ப், ட்ராவிஸ் ஹெட், டிம் பெய்ன், மிட்செல் ஸ்டார்க், பாட் கமின்ஸ், நேதன் லயன், ஜோஷ் ஹேசல்வுட். 
    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நாளை தொடங்குகிறது. #ViratKholi #AUSvIND
    அடிலெய்டு:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

    அடுத்ததாக இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. ‘ஆலன்-பார்டர்’ கோப்பைக்கான இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது ஒரு யுத்தம் போன்றே வர்ணிக்கப்படுவது உண்டு. அங்கு 1947-ம் ஆண்டில் இருந்து 11 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி ஒரு முறை கூட தொடரை கைப்பற்றியதில்லை. தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி தடையை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். இதனால் ஆஸ்திரேலிய அணி கொஞ்சம் பலவீனமடைந்துள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி இந்திய அணி புதிய வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் பேட்டிங்கை தான் மலை போல் நம்பி இருக்கிறது. 2014-15-ம் ஆண்டு அங்கு சென்ற போது 4 சதங்கள் உள்பட 692 ரன்கள் குவித்து புதிய உச்சத்தை தொட்டார். ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று அழைக்கப்படும் கோலி தான், ஆஸ்திரேலிய பவுலர்களின் பிரதான எதிரியாக இருக்கிறார். ‘இளம் புயல்’ பிரித்வி ஷா கணுக்கால் காயத்தால் அவதிப்படுவதால் முதலாவது டெஸ்டில் விளையாடமாட்டார்.

    முரளிவிஜயும், லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைப்பார்கள். இவர்கள் ஆஸ்திரேலியாவின் ஆவேச தாக்குதலை முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்தாலே ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்து விடும். புஜாரா, துணை கேப்டன் ரஹானே ஆகியோரும் பொறுப்புணர்வுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

    பொதுவாக ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையிலேயே இருக்கும். அடிலெய்டு ஆடுகளத்தில் கொஞ்சம் புற்கள் இருக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர் ஹக் ஏற்கனவே கூறியுள்ளார். அதன்படி பார்த்தால், ஆடுகளத்தில் பந்து நன்கு ‘பவுன்ஸ்’ ஆகும். புவனேஷ்வர்குமார், பும்ரா, இஷாந்த் ஷர்மா ஆகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணியை மிரட்டுவதற்கு வாய்ப்புள்ளது.



    ஆஸ்திரேலிய அணி, இழந்த பெருமைகளை இந்த தொடரின் மூலம் மீட்டெடுக்கும் உத்வேகத்துடன் ஆயத்தமாகி வருகிறது. சொந்த மண்ணில் களம் காணுவது அவர்களுக்கு சாதகமான அம்சமாகும். பேட்டிங்கில் உஸ்மான் கவாஜா ஆணிவேராக விளங்குகிறார். ஆனால் அவரது சகோதரர் பயங்கரவாத வழக்கில் திடீரென கைது செய்யப்பட்டு இருப்பதால் கவாஜா மனரீதியாக தடுமாறக்கூடும்.

    பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், பீட்டர் சிடில் உள்ளிட்டோர் சொந்த மண்ணில் அபாயகரமானவர்கள். விராட் கோலியை எப்படி வீழ்த்தலாம் என்று நாள்தோறும் திட்டங்களை வகுத்து வருகிறார்கள். அது மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் பலரும் நிறைய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். ‘தொடக்கத்தில் அவர் எளிதாக பவுண்டரிகள் அடிக்க முடியாதபடி பீல்டிங்கை அமைக்க வேண்டும். வெவ்வேறு இடங்களில் பீல்டர்களை நிறுத்தி நாம் ஏதோ செய்கிறோம் என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். பவுலிங்கில் குடைச்சல் கொடுத்த பிறகு, கொஞ்சம் வார்த்தை போரிலும் ஈடுபட்டால் கோலியை காலி செய்து விடலாம்’ என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ‘சாதாரணமாக இல்லாமல் முதல் பந்தில் இருந்தே கோலிக்கு ஆக்ரோஷத்தை காட்ட வேண்டும். ஏனெனில் 20 பந்துக்கு மேல் நிலைத்து விட்டால் அதன் பிறகு அவர் கணிசமாக ரன்கள் குவித்து விடுவார். அதனால் பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று முன்னாள் வீரர் கில்லெஸ்பி யோசனை தெரிவித்து இருக்கிறார்.

    மொத்தத்தில் இரு அணிகளும் நீயா-நானா? என்று வரிந்து கட்டுவதற்கு தயாராக இருப்பதால் இந்த தொடர் கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைப்பதற்கு குறைந்தது ஒரு டெஸ்டிலாவது இந்திய அணி ‘டிரா’ செய்ய வேண்டும்.

    தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற முடியும். அவ்வாறு நிகழ்ந்தால் இந்திய அணி 108 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்படும். அதே சமயம் இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றினால் அதன் புள்ளி எண்ணிக்கை 120 ஆக உயரும்.

    முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: முரளிவிஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பான்ட், அஸ்வின், புவனேஷ்வர்குமார், பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி அல்லது ரவீந்திர ஜடேஜா அல்லது ரோகித் சர்மா.

    ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் அல்லது பீட்டர் சிடில், ஜோஷ் ஹேசில்வுட்.

    இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #ViratKholi #AUSvIND
    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் யாசிர் ஷா 14 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் சாதனையை சமன் செய்துள்ளார். #YasirShah #ImranKhan

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு சுழற்பந்து வீரர் யாசிர் ஷா முக்கிய பங்கு வகித்தார். அவர் 184 ரன் எடுத்து, 14 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அவர் முன்னாள் கேப்டன் இம்ரான்கானை சமன் செய்தார்.



    அவர் ஒரு டெஸ்டில் 14 விக்கெட்டை வீழ்த்தி சிறந்த பாகிஸ்தான் பந்து வீச்சாளர் என்ற சாதனையில் உள்ளார். வேகப்பந்து வீரரான இம்ரான்கான் 1982-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 116 ரன் கொடுத்து 14 விக்கெட் வீழ்த்தினார். 36 ஆண்டுகளுக்கு பிறகு யாசிர் ஷா அவரை சமன் செய்துள்ளார். #YasirShah #ImranKhan
    டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த இந்திய வீரர் கருண்நாயர், டெஸ்டில் தனது நிலை குறித்து தெரியாததால் தேர்வு குழு மற்றும் அணி நிர்வாகம் மீது அதிருப்தி அடைந்துள்ளார். #KarunNair #BCCI
    பெங்களூர்:

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்களில் 2 பேர் மட்டுமே டிரிபிள் செஞ்சூரி அடித்துள்ளனர். ஒருவர் வீரேந்தர் ஷேவாக். அவர் 2 முறை டிரிபிள் செஞ்சூரி (319, 309) அடித்துள்ளார்.

    மற்றொருவர் கருண் நாயர். 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் 303 ரன் குவித்து முத்திரை பதித்தார்.

    முச்சதம் அடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கருண்நாயர் நிலை தற்போது பரிதாபமாக இருக்கிறது. 26 வயதான அவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தர்மசாலா டெஸ்டில் ஆடினார். அதற்கு பிறகு கடந்த 1½ ஆண்டுகளாக 11 பேர் கொண்ட அணியில் ஆடவில்லை.

    இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட தொடருக்கான அணியில் கருண்நாயர் இடம் பெற்று இருந்தார். ஆனால் ஒரு டெஸ்டில் கூட அவருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கவில்லை. கடைசி வரை பெஞ்சில் தான் இருந்தார்.

    இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அணியில் இருந்து கருண் நாயர் நீக்கப்பட்டார். இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படாமலேயே தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே டெஸ்டில் தனது நிலை குறித்து தெரியாததால் தேர்வு குழு மற்றும் அணி நிர்வாகம் மீது கருண்நாயர் அதிருப்தி அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலிய தொடரில் 4 இன்னிங்சில் ஆடினேன். இதில் இரண்டு இன்னிங்சில் நான் சரியாக ஆடவில்லை. ஆனால் அதன்பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டது துரதிருஷ்டமே. வாய்ப்பு கொடுக்காமல் நீக்கப்பட்டது ஏன்? என்று தெரியவில்லை.

    தேர்வு குழுவினரோ அல்லது அணி நிர்வாகமோ என்னிடம் எந்த தகவலையும் பரிமாறியது இல்லை. இது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனாலும் தேர்வு குழு ஒரு முடிவை எடுத்துவிட்டது. அதை நான் மதிக்கிறேன்.

    இவ்வாறு கருண்நாயர் கூறியுள்ளார். #INDvWI #karunnair #TeamIndia #BCCI
    இந்திய அணி பேட்ஸ்மேன்கள், இங்கிலாந்து வேகப்பந்தை எதிர்க்கொள்ள திணறி வருவதால் கடைசி டெஸ்டிலும் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. #ENGvIND
    லண்டன்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன்னும், இந்தியா முதல் இன்னிங்சில் 292 ரன்னும் எடுத்தன. 40 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 423 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் இந்தியாவுக்கு 464 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    464 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன் எடுத்து திணறியது. வெற்றிக்கு மேலும் 406 ரன் தேவை. கைவசம் 7 விக்கெட் உள்ளது.

    இந்த டெஸ்டிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது. கடைசி நாளான இன்று இந்திய அணி மேலும் 406 ரன்களை எடுப்பது என்பது மிகவும் சவாலானது.

    இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள். எனவே, தோல்வியை தவிர்க்க ‘டிரா’ செய்ய கடுமையாக போராடுவார்கள். ஆனால் அது மிகவும் கடினமானதே.

    இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும், 4-வது டெஸ்டில் 60 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தது. 3-வது டெஸ்டில் இந்தியா 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தனது கடைசி டெஸ்டில் அலஸ்டர் குக்குவை வெற்றியுடன் அனுப்பும் வேட்கையில் இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர். #ENGvIND #TeamIndia
    இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி இன்று தொடக்க உள்ள நிலையில் டோனி சாதிக்க முடியாததை விராட்கோலி சாதித்து காட்டுவாரா? என்ற எதிர்பார்க்கப்படுகிறது. #ENGvIND #INDvENG
    பர்மிங்காம்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இதன் 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தும் கைப்பற்றியது.

    இந்தியா- இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் பர்மிங்காமில் இன்று தொடங்கியது.

    டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி முத்திரை பதிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானதே.

    இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி இதுவரை 3 முறை மட்டுமே டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. அஜீத் வடேகர், கபில்தேவ், ராகுல் டிராவிட் ஆகியோரது தலைமையில் மட்டுமே தொடரை வென்றுள்ளது.

    கடைசியாக இங்கிலாந்தில் ஆடிய 2 டெஸ்ட் தொடரிலும் தோல்வியே ஏற்பட்டது. டோனி தலைமையிலான அணி 2011-ல் 0-4 என்ற கணக்கில் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆனது. 2014-ல் 1-3 என்ற கணக்கில் இழந்தது.

    டோனி சாதிக்க முடியாததை விராட்கோலி முத்திரை பதித்து காட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அவரது ரன் குவிப்பை பொறுத்தே அணியின் நிலை இருக்கிறது.

    இங்கிலாந்து அணி கடைசியாக பாகிஸ்தானுடன் மோதிய டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிந்தது. சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் உள்ளது. இந்திய அணி கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தது. ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்கா மண்ணில் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்து இருந்தது. #ENGvIND #INDvENG
    ×