search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து இந்தியா"

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இந்திய அணி 274 ரன்கள் குவித்துள்ளது. #ENGvIND
    லண்டன் :

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியா 11.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது பந்தில் முரளி விஜய் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 6-வது பந்தில் க்ளீன் போல்டானார்.

    இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் சாம் குர்ரான் வீசிய 16-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தவான் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 8 ரன்னுக்குள் இந்திய அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டை இழந்தது. 20 வயதே ஆன சாம் குர்ரான் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சியூட்டினார. பின்னர் 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார்.

    நிதானமாக விளையாடிய ரகானே, 15 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்தில் ஜென்னிங்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழ்ந்தார். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் அடிக்காமல் வந்த வேகத்திலேயே ஸ்டோக்ஸ் பந்தில் பௌல்டாகி வெளியேற 100 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தடுமாறியது.

    அடுத்து களவிறங்கிய ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் , அஷ்வின் 10 ரன்கள், ஷமி 2 ரன்கள் என சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் விழ மறுமுனையில் விராட் கோலி மட்டும் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினார். 225 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் தனி ஆளாக நின்று கோலி 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால், சரிவில் இருந்த இந்திய அணி மீண்டது.

    இறுதியில், இந்திய அணி 76 ஓவர் முடிவில் அணைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 274 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியை விட 13 ரன்கள் பின் தங்கியது. இங்கிலாந்து அணியின் சாம் குர்ரான் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்திய பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண செய்தார்.



    இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது அஷ்வின் வீசிய மூன்றாவது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் குக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 9 ரன்கள் குவித்து 22 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜென்னிங்ஸ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். #ENGvIND
    இந்தியாவுடன் நான் கடந்த 10 ஆண்டுகள் விளையாடியதில் இதுபோன்ற வேகப்பந்து யுனிட்டை நான் பார்த்ததில்லை என்று அலஸ்டைர் குக் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடருகான இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.



    இந்த ஐந்து பேரும் மாறுபட்ட திறமைகளை கொண்டவர். இப்படிப்பட்ட ஒரு பந்து வீச்சு யுனிட்டை நான் பார்த்ததில்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க வீரரும் ஆன அலஸ்டைர் குக் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து குக் கூறுகையில் ‘‘இந்திய அணி பலவகையான பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. வேகப்பந்து வீச்சின் பலம் எப்போதும் இல்லாத வகையில் வழக்கத்திற்கு மாறானது.



    கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக, குறிப்பாக கடைசி 10 வருடத்தில் நான் இந்திய அணியுடன் விளையாடியுள்ளேன். அவர்கள் ஐந்து முதல் ஆறு மாறுபட்ட குணம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்டதில்லை. என்னுடைய கடந்த கால அனுபவத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அடுத்த 6 வாரங்களில் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்’’ என்றார்.
    பிரிஸ்டோலில் நடைபெற்று வரும் 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி இரவு 6.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    காயம் காரணமாக புவனேஸ்வர் குமார் இடம்பெறவில்லை. இதனால் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அறிமுகமானார். குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டிற்குப் பதில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டார்.

    இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே வாணவேடிக்கை நிகழ்த்தினார்கள்.

    முதல் ஓவரை அறிமுக வீரர் தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் பட்லர் 3 பவுண்டரிகள் விரட்டினார். அடுத்த ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி விரட்டினார். உமேஷ் யாதவ் வீசிய 4-வது ஓவரில் ராய் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் துரத்தினார்.



    6-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஒவரில் ராய் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விரட்டினார். ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் விட்டுக்கொடுக்க இங்கிலாந்து 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் குவித்தது.

    சாஹல் வீசிய 7-வது ஓவரின் ஐந்தாவது பந்தை சிக்சருக்கு தூக்கி 23 பந்தில் அரைசதம் அடித்தார் ராய். 8-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரில் பட்லர் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சாஹர் வீசிய 10-வது ஓவரில் ராய் 31 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 9.2 ஓவரில் 103 ரன்கள் எடுத்திருந்தது.



    அதன்பின் வந்த ஹேல்ஸ் (30) மோர்கன் (6), ஸ்டோக்ஸ் (14), பேர்ஸ்டோவ் (25) ஆகியோரை ஹர்திக் பாண்டியா வீழ்த்த இங்கிலாந்து ஸ்கோரில் சற்று வேகம் குறைந்தது. இருந்தாலும் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.  இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.

    இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 4 ஓவரில் 38 விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். சித்தார்த் கவுல் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், சாஹர் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. சாஹர் அறிமுகமாகியுள்ளார். #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி இரவு 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.



    இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அறிமுகமாகியுள்ளார். குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டிற்குப் பதில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பரும் ஆன எம்எஸ் டோனி சர்வதேச அளவில் 500 போட்டிகளில் விளையாடியுள்ளார். #MSDhoni
    இந்திய தேசிய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. இவர் தலைமையிலான இந்திய அணி மூன்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. 2004-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்த எம்எஸ் டோனி இன்று தனது 37-வது வயதை பூர்த்தி செய்துள்ளார். இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறது.

    நேற்று கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் எம்எஸ் டோனி இடம் பிடித்திருந்தார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்து போட்டிகளையும் சேர்த்து 500-வது சர்வதேச போட்டியாகும். இதன்மூலம் 500 சர்வதேச போட்டியில் விளையாடிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.



    இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 664 போட்டிகளிலும், டிராவிட் 509 போட்டிகளில் விளையாடியுள்ளனர். எம்எஸ் டோனி 90 டெஸ்ட், 318 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். #Sachin #Dravid
    டி20 போட்டியில் கண்ட தோல்வியை மறந்து, கால்பந்து அணியின் பெனால்டி ஷூட்அவுட்டை சந்தோசமாக கண்டுகளித்தனர் இங்கிலாந்து வீரர்கள். #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடியவும், இங்கிலாந்து - கொலம்பியா மோதிய உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்று ஆட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியது.

    நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால், கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட் கடைபிடிக்கப்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் இங்கிலாந்து 4-3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.



    இந்தியாவிற்கு எதிரான தோல்வியை பொறுட்படுத்தாமல் கால்பந்து போட்டியின் பெனால்டி ஷூட்டை சந்தோசமாக கண்டுகளித்தனர் இங்கிலாந்து வீரர்கள்.
    விராட் கோலி இன்றைய போட்டியிலாவது இரண்டாயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை உறுதி செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. #ViratKohli
    இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டியில் விளையாடியது. இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

    அயர்லாந்து தொடருக்கு முன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டி20 போட்டியில் 1983 ரன்கள் எடுத்திருந்தார். 17 ரன்கள் எடுத்தால் 2000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்ற நிலை இருந்தது.

    ஆனால், முதல் போட்டியில் டக்அவுட் ஆன கோலி, 2-வது ஆட்டத்தில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 2000 ஆயிரம் ரன்களை எட்ட முடியவில்லை. இதற்கிடையில் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 2000 ரன்களை கடந்து 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.



    விராட் கோலி 2000 ஆயிரம் ரன்களை எட்ட இன்னும் 8 ரன்கள் தேவையுள்ளது. இதனால் இங்கிலாந்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்திலாவது 2000 ரன்னை எட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டியில் 0, 9 அடித்ததன் மூலம் விராட் கோலியின் சராசரி 50-ற்கு கீழ் குறைந்துள்ளது.
    இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன புஜாரா கவுன்டி கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
    இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் புஜாரா. டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவதாலும், ஐபிஎல் தொடரில் ஏலம் போகாததாலும் அதிக நேரம் கிடைப்பதால், இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார்.

    இவர் இடம்பிடித்துள்ள யார்க்‌ஷைர் அணி ராயல் லண்டன் ஒருநாள் கோப்பைக்கான 2-வது அரையிறுதி போட்டியில் ஹம்ப்ஷைர் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஹாம்ப்ஷைர் 348 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யார்க்‌ஷைர் அணி களம் இறங்கியது. முதல் விக்கெட் வீழ்ந்ததும் அடுத்து புஜாரா களம் இறங்கினார். இவரை தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேன் ஸ்டெயின் டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    ஆரம்ப கட்டத்தில் 82, 73, 101, 75 (நாட்அவுட்) என அசத்திய புஜாரா, அதன்பின் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டெர்பிஷைர் அணிக்கெதிராக 14 ரன்களும், லங்காஷைர் அணிக்கெதிராக 19 ரன்களும், நார்தன்ட்ஸ் அணிக்கெதிராக 6 ரன்களுமே எடுத்தார்.



    அதேபோல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெஸ்டில் 35 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். நான்கு நாட்கள் கொண்ட கவன்டி போட்டியிலும் 8 இன்னிங்சில் 100 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளா். சராசரி 12.50 ஆகும்.

    கவுன்டி போட்டியில் விளையாட செல்வதற்கு முன், இந்த ஆட்டம் இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடருக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று புஜாரா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    ×