search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆல் அவுட் - கோலியின் அபார சதத்தால் சரிவில் இருந்து மீண்டது
    X

    இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆல் அவுட் - கோலியின் அபார சதத்தால் சரிவில் இருந்து மீண்டது

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இந்திய அணி 274 ரன்கள் குவித்துள்ளது. #ENGvIND
    லண்டன் :

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியா 11.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது பந்தில் முரளி விஜய் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 6-வது பந்தில் க்ளீன் போல்டானார்.

    இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் சாம் குர்ரான் வீசிய 16-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தவான் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 8 ரன்னுக்குள் இந்திய அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டை இழந்தது. 20 வயதே ஆன சாம் குர்ரான் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சியூட்டினார. பின்னர் 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார்.

    நிதானமாக விளையாடிய ரகானே, 15 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்தில் ஜென்னிங்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழ்ந்தார். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் அடிக்காமல் வந்த வேகத்திலேயே ஸ்டோக்ஸ் பந்தில் பௌல்டாகி வெளியேற 100 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தடுமாறியது.

    அடுத்து களவிறங்கிய ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் , அஷ்வின் 10 ரன்கள், ஷமி 2 ரன்கள் என சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் விழ மறுமுனையில் விராட் கோலி மட்டும் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினார். 225 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் தனி ஆளாக நின்று கோலி 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால், சரிவில் இருந்த இந்திய அணி மீண்டது.

    இறுதியில், இந்திய அணி 76 ஓவர் முடிவில் அணைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 274 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியை விட 13 ரன்கள் பின் தங்கியது. இங்கிலாந்து அணியின் சாம் குர்ரான் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்திய பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண செய்தார்.



    இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது அஷ்வின் வீசிய மூன்றாவது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் குக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 9 ரன்கள் குவித்து 22 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜென்னிங்ஸ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். #ENGvIND
    Next Story
    ×